ஏலத்தில் விற்பனைக்கு வரும் ஷூ.. இதோட சிறப்பு என்ன தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க..

உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று புகாட்டி. ஹைபர் கார் உற்பத்தியில் இந்த நிறுவனம் தலை சிறந்த உற்பத்தியாளராக விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்தநிலையிலேயே நிறுவனத்தின் ஹைபர் கார்களை தழுவி முன்னணி காலணி உற்பத்தி நிறுவனமான அடிடாஸ் ஓர் ஷூ-வை உருவாக்கி இருக்கின்றது.

இதனை ஏலத்தின் வாயிலாக மட்டுமே அது விற்பனைச் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கின்றது. அடிடாஸ் விற்பனைச் செய்யும் வழக்கமான காலணியைப் போன்று இல்லாமல் அது தனித்துவமானதாக இருக்கும். ஸ்போர்ட்ஸ் அப்பேரல் வகை காலணியையே அது தயாரித்து இருக்கின்றது. மேலும், இதனை மிகவும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு வழங்கவும் இருக்கின்றது, அடிடாஸ்.

Adidas x crazyfast bugatti sports shoe

இதனால், இந்த ஷூ-வை முன்னணி விளையாட்டு வீரர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, ஷாக்கர் (Soccer) ஸ்போர்ட்ஸ் உள்ளவர்களுக்கு நல்ல பலனை வழங்கும் வகையில் இந்த ஷூ-வை அடிடாஸ் தயார் செய்திருக்கின்றது. ஒட்டுமொத்தமாகவே 99 ஜோடி ஷூ-க்கள் தயார் செய்யப்பட்டு இருக்கின்றன.

இவை அனைத்தையும் ஏலத்தின் வாயிலாக மட்டுமே அது விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இப்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி, ஏலம் அடிடாஸ் எக்ஸ் கிரேசி ஃபாஸ்ட் புகாட்டி ஷூ (Adidas X Crazy Fast Bugatti Shoe) என்று இந்த ஷூ-க்கு நிறுவனம் பெயர் சூட்டி இருக்கின்றது.

Adidas x crazyfast bugatti shoe

எடை குறைவானதாகவும், அதேநேரத்தில் வழக்கமான வேகத்தைக் காட்டிலும் கூடுதல் வேகத்தை கால்களுக்கு வழங்கும் விதமாகவும் இந்த ஷூ-வை வடிவமைத்து இருக்கின்றது. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் நவம்பர் 8 மற்றும் நவம்பர் 11 வரையில் இந்த ஷூ-விற்கான ஏலம் ஆன்-லைனில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

அடிடாஸ் கலெக்ட் வெப் 3 பிளாட்பாரம் வாயிலாகவே இந்த ஏலம் நடைபெற இருக்கின்றது. ஏலத்தில் வெற்றி பெறுவோரின் பெயர்கள் ஏலத்திற்கு பின்னர் அதே தளத்தின் வாயிலாகவே அறிவிக்கப்பட இருக்கின்றது. அடிடாஸ் மற்றும் புகாட்டி ஆகிய இரண்டும் இணைந்தே இந்த ஏலத்தை நடத்த இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Bugatti shoe

நீல மற்றும் கருப்பு நிறத்தால் இந்த ஷூவை அடிடாஸ் அலங்கரித்து இருக்கின்றது. இத்துடன், அடிடாஸ் எனும் எம்பளத்தை அடர் கருப்பு நிறத்தினாலான வலையால் அது தயார் செய்திருக்கின்றது. குறிப்பாக, இதன் பக்கத்திற்கு புகாட்டி கார்களை பிரதிபலிக்கும் தனி சிறப்பு வழங்கப்பட்டு இருக்கின்றது. இவையே ஷூ-வின் சிறப்புகள் ஆகும்.

தொடர்ந்து, கார்களில் பயன்படுத்தப்படும் கார்பன் ஃபைபரை (Carbon Fiber) ஷூ-வின் அடிப்பகுதியில் அடிடாஸ் பயன்படுத்தி இருக்கின்றது. இந்த கார்பன் ஃபபரைக் கொண்டே புகாட்டி ஹைபர் காரின் பாடி பேனல்கள் தயாரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், ஷூ பாக்ஸும் மிகவும் தனித்துவமானதாக உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த ஷூ ஸ்போர்ட்ஸ் பயன்பாட்டிற்கு, குறிப்பாக, ஷாக்கர் விளையாட்டு வீரர்களுக்கு மிக சிறப்பாக உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஓர் தனி சிறப்புக் கொண்ட ஷூ என்பதால் அதை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் கடுமையான போட்டி நடைபெற எனும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், ஒரு சில நிமிடங்களில் இந்த ஷூக்கள் அனைத்தும் விற்று தீர்ந்து போகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புகாட்டி ஹைப்பர் மற்றும் சூப்பர் கார்களை பயன்படுத்தி இதுபோன்று வித்தியாசமான பொருட்கள் தயாரிக்கப்படுவது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக கைக் கடிகாரம் போன்ற பிற சாதனங்களும் புகாட்டிகார்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. அவற்றிற்கு புகாட்டி கார் ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்தது குறிப்பிடத்தகுந்தது. இதே வரவேற்பே தற்போது உருவாக்கப்பட்டு இருக்கும் ஷூவிற்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 2, 2023, 19:27 [IST]
English summary
Adidas made special shoe inspired by bugatti hypercar
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X