சூப்பர் ஹிட் ஆதிபுருஷ் பட நாயகன் பிரபாஸ் இத்தனை லக்சரி கார்களுக்கு ஓனரா!! அசர வைக்கும் கார் கலெக்ஷன்ஸ்...
பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் பிரபாஸ். முன்னணி தெலுங்கு நடிகரான பிரபாஸின் நடிப்பில் சமீபத்தில் ஆதிபுருஸ் என்ற திரைப்படம் திரைக்கு வந்தது. பாகுபலியை போல ஆதி புருஷ் படமும் நாடு முழுவதும் கவனத்தை பெற்றுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். பாகுபலி திரைப்படம் பிரம்மாண்ட படைப்பாக பிரபலமாகியது, ஆனால் ஆதிபுருஷ் மோசமான கிராஃபிக்ஸால் பிரபலமாகியுள்ளது.
இதிகாச தொடரான இராமாயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ஆதிபுருஷ் திரைப்படத்தை நாடு முழுவதுமே பலர் சமூக வலைத்தளங்களில் கழுவி ஊற்றினாலும், நடிகர் பிரபாஸுக்கு பெரியதாக பிரச்சனையில்லை. ஏனெனில் ஏற்கனவே கோடிக்கணக்கிலான ரசிகர்களையும், பல கோடி ரூபாய்களையும் வருமானமாக ஈட்டியுள்ள பிரபாஸிடம் உள்ள சொகுசு கார்களை பற்றிதான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். வாருங்கள் செய்திக்குள் போவோம்.

லம்போர்கினி அவெண்டேடார்: நடிகர் பிரபாஸிடம் ஆரஞ்ச் நிறத்தில் அவெண்டேடார் எஸ் ரோட்ஸ்டர் கார் உள்ளது. இந்தியாவில் சமீபத்தில் டெலிவிரி செய்யப்பட்ட அவெண்டேடார் கார்களுள் ஒன்றாக விளங்கும் இதில் 6.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் வி12 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 770 பிஎஸ் மற்றும் 720 என்எம் டார்க் திறன் வரையில் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர்: சினிமா பிரபலம் ஒருவரிடம் கம்பீரமான தோற்றம் கொண்ட ரேஞ்ச் ரோவர் கார் இருப்பதில் ஆச்சிரியமில்லை. பிரபாஸிடம் சாண்டோரினி கருப்பு நிறத்தில் 4ஆம் தலைமுறை ரேஞ்ச் ரோவர் கார் உள்ளது. ஆனால் தற்சமயம் இந்தியாவில் 5ஆம் தலைமுறை ரேஞ்ச் ரோவர் விற்பனையில் உள்ளது. ரேஞ்ச் ரோவர் கார்கள் லாங்-வீல்பேஸ் மற்றும் ஷார்ட்-வீல்பேஸ் என்ற இரு விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் பிரபாஸிடம் லாங்-வீல்பேஸ் வெர்சனில் ரேஞ்ச் ரோவர் உள்ளது.

ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோம்: லக்சரி கார் என்ற வார்த்தைகளுக்கு பொருள் கொடுத்ததே ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் தான் எனலாம். அத்தகைய பிராண்டில் இருந்து ஒரு காரையாவது வாங்கிவிட வேண்டும் என்ற ஆசை பிரபாஸிடம் மட்டும் இல்லாமலா இருந்திருக்கும். நடிகர் பிரபாஸிடம் கருப்பு நிறத்தில் 7ஆம் தலைமுறை ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோம் கார் உள்ளது.

ஜாகுவார் எக்ஸ்.ஜே: நடிகர் பிரபாஸ் அதிகம் பயன்படுத்தும் கார். ஏனெனில் பிரபாஸ் வாங்கிய முதல் லக்சரி கார் இதுவென கூறப்படுகிறது. இதனாலேயே முன்னணி நடிகரான பின்பு பல்வேறு லக்சரி கார்களை வாங்கிய பின்னரும், பல வருடங்களுக்கு முன்பு வாங்கிய சில்வர் நிறத்திலான ஜாகுவார் எக்ஸ்.ஜே காரை இன்னும் பத்திரமாக பிரபாஸ் பராமரித்து வருகிறார். பிரபாஸிடம் இருப்பது 4ஆம் தலைமுறை எக்ஸ்.ஜே கார் ஆகும்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்5: நடிகர் பிரபாஸிடம் கருப்பு நிறத்திலான பிஎம்டபிள்யூ எக்ஸ்3 கார் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த காரில் அவ்வளவாக பிரபாஸ் காட்சி தந்தது கிடையாது. இதனால் எந்த வருடத்தில் உருவாக்கப்பட்ட எக்ஸ்5 எஸ்யூவி கார் இவரிடம் உள்ளது என்பது தெரியவில்லை. 2ஆம் தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்5 மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் பிரபாஸிடம் இருக்கும் என நினைக்கிறோம்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: தெலுங்கு சினிமா உலகமே கொண்டாடும் நடிகர் ஒருவரிடம் இந்த அளவிற்கு கூட லக்சரி கார்கள் இல்லையென்றால் தான் ஆச்சிரியம். இந்த கார்களை எல்லாம் வைத்து பார்க்கும்போது நடிகர் பிரபாஸ் லக்சரி தரத்திலான கார்களையும், அதேநேரம் லம்போர்கினி அவெண்டேடார் போன்ற ஸ்போர்ட்ஸ் கார்களையும் விரும்பக்கூடியவராக திகழ்கிறார்.


Click it and Unblock the Notifications









