செதுக்கன செல மாதிரி இருக்காங்க! கார டெலிவரி எடுக்க ஷோரூமுக்கே வந்தது அவங்களா! ரம்பை, ஊர்வசிலாம் ஓரமா நிக்கணும்
திரைப்பட நடிகர், நடிகைகள் கார் வாங்குவதில் பெரிய ஆச்சரியம் எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் பொதுவாக மிகவும் விலை உயர்ந்த சொகுசு எஸ்யூவி (Luxury SUV) கார்களைதான் வாங்குவார்கள். பிஎம்டபிள்யூ (BMW), ஆடி (Audi) மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) போன்ற நிறுவனங்களின் கார்கள்தான் பெரும்பாலான நடிகர், நடிகைகளின் தேர்வாக பார்க்கப்படுகிறது.
ஆனால் இங்கே ஒரு நடிகை ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் காரை வாங்கியுள்ளார். அதுவும் எஸ்யூவி கார் கிடையாது. செடான் (Sedan) ரகத்தை சேர்ந்தது. மலையாள திரையுலகில் (Malayalam Film Industry) முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் அதிதி ரவி (Aditi Ravi) பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம்.

அவர் வாங்கியிருப்பது ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus) கார் ஆகும். அதிதி ரவி ஷோரூமுக்கே நேரடியாக வந்து ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை டெலிவரி எடுத்து சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக (Viral Pics) பரவி வருகின்றன.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரின் ஆரம்ப விலை 11.56 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 19.41 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia), ஹோண்டா சிட்டி (Honda City) மற்றும் மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz) ஆகிய கார்களுடன், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் போட்டியிட்டு வருகிறது. இந்த காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை 1.0 லிட்டர் டிஎஸ்ஐ மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ எவோ ஆகியவை ஆகும்.
இவை இரண்டுமே பெட்ரோல் (Petrol) இன்ஜின்கள்தான். ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரில், டீசல் இன்ஜின் (Diesel) ஆப்ஷன் இல்லை. எனினும் 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி என மொத்தம் 3 கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் பெற்றுள்ளது.
மேலும் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜிங் என ஏகப்பட்ட வசதிகளும் (Features) ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. இவை எல்லாம் ஒன்று சேர்ந்துதான், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை வெற்றிகரமான ஒரு தயாரிப்பாக மாற்றியுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஓரளவிற்கு குறைவான விலையில் கிடைக்க கூடிய பிரீமியமான செடான் கார்களில் ஒன்றாக ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் உள்ளது. நடிகை அதிதி ரவிக்கு, ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் பாதுகாப்பான மற்றும் சௌகரியமான பயணத்தை வழங்கும் என நாம் நம்பலாம்.
ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (5-star Safety Rating) பெற்று அசத்தியுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த சிறப்பம்சம் காரணமாகவும், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை நிறைய பேர் வாங்குகின்றனர்.


Click it and Unblock the Notifications








