நடிகை ராணி முகர்ஜிக்கு காஸ்ட்லி பரிசு கொடுத்த ஆதித்ய சோப்ரா
பாலிவுட் நடிகையும், தனது வருங்கால மனைவியுமான ராணி முகர்ஜிக்கு ரூ.1.25 கோடி மதிப்புடைய ஆடி காரை பரிசாக கொடுத்து அசத்தியிருக்கிறாராம் பாலிவுட் இயக்குனர் ஆதித்ய சோப்ரா.
பிரபல பாலிவுட் நடிகை ராணிமுகர்ஜியும், பாலிவுட்டின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளருமான ஆதித்ய சோப்ராவும் மூடாக்கு போட்டுக் காதலித்து வருகின்றனர். இதுவரை அவர்கள் காதலை வெளிப்படையாக கூறாமல் ரகசியம் காத்து வருகி்ன்றனர். மேலும், இருவருக்கும் ரகசியமாக நிச்சயார்த்தம் நடந்துவிட்டதாகவும் செய்திகள் வந்தன.

மெகா சீரியல் போன்று இழுத்து வரும் தங்களது காதலுக்கு இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்து முற்றுப் புள்ளி வைக்க இருவரும் திட்டமிட்டுள்ளனராம். இந்த நிலையில், தனது ஆழமான காதலின் அடையாளமாக, வருங்கால மனைவி ராணி முகர்ஜிக்கு ஆடி ஏ8 சொகுசு காரை ஆதித்ய சோப்ரா பரிசளித்துள்ளராம். பாலிவுட் உலகின் லேட்டஸ்ட் பரபரப்பு இதுதான்.
சோப்ரா பரிசளித்த ஆடி ஏ8 டபிள்யூ12 வேரியண்ட் காரை ஆட்டோமொபைல் துறையினர் சொகுசு கப்பல் என்றே வர்ணிக்கின்றனர். இந்த காரில் 6299சிசி திறன் கொண்ட பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 500 பிஎஸ் பவரை வாரி இறைக்கும் திறன் கொண்டது.
8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிக இடவசதி கொண்ட கார்களில் இதுவும் ஒன்று. ஆடம்பரமான வெளிப்புறம் மட்டுமல்ல, உட்புறத்தில் அத்துனை தொழி்லநுட்பம் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளையும் கொண்டிருக்கிறது.
ஏபிஎஸ், ஏர்பேக்குகள், இஎஸ்பி என பாதுகாப்பு தொழில்நுட்பங்களுக்கும் குறைவிருக்காது. ஆதித்ய சோப்ரா பரிசளித்திருக்கும் கார் ஆடி ஏ8 வரிசையில் டாப் என்ட் மாடல். இந்த கார் ரூ.1.25 கோடி ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








