செப். 2ம் தேதி விண்ணில் பாய்கிறதா ஆதித்யா எல்1? மாஸ் காட்டும் இஸ்ரோ! அடுத்த அதிர்ச்சியில் உலக நாடுகள்!

சந்திரயான் 3யின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இஸ்ரோ அடுத்ததாக சூரியனை ஆய்வு செய்ய வரும் செப்டம்பர் 2ம் தேதி ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை விண்ணில் ஏவ உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கடந்த 23ம் தேதி மாலை 6 மணிக்கு இஸ்ரோ கடந்த மாதம் விண்ணில் அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் சரியாக திட்டமிட்டபடி நிலவில் தரை இறங்கி உலக சாதனை படைத்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் இஸ்ரோ விஞ்ஞானிகளை பார்த்து ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இஸ்ரோ மிகப்பெரிய சாதனைகளை எல்லாம் சமீப காலமாக படைத்து வருகிறது.

aditya l1 launch date

சந்திரயான் வெற்றி பெற்ற கையோடு இஸ்ரோ அடுத்த கட்டத்திற்கு தயாராகி விட்டது. தற்போது இஸ்ரோ சந்திரனை அடுத்து சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா திட்டத்தை முழுவீச்சில் தயார் செய்து ஏவுதலுக்கு தயார் படுத்தி உள்ளது. ஆதித்யா திட்டத்தின் படி சூரியனின் சுற்றுவட்ட பாதையான ஹாலோ பாதையில் எல்1 எனப்படும் பகுதியில் தனது சேட்டிலைட்டை நிறுத்தி அதன் மூலம் சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு ஆதித்யா எல்1 என இஸ்ரோ பெயரும் வைத்துள்ளது இதற்கான சாட்டிலைட் முழுமையாக தயாராகிவிட்டது. பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு இந்த திட்டம் முழுமையாக தயாராகி ராக்கெட்டில் செட் செய்யப்பட்டு ராக்கெட்டும் தற்போது லான்ச் பேடில் ஏவுதலுக்கு தயாராகி நிற்கிறது. இந்த திட்டத்திற்கான இறுதி கட்டப் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

aditya l1 launch date

இந்நிலையில் ஏவுதலை எப்போது செய்தால் சரியாக இருக்கும் என இஸ்ரோ சில பல ஆய்வுகளை செய்து அதற்கான முடிவுகளை எடுத்துள்ளதாக தெரிகிறது. வரும் செப்டம்பர் மாதம் 2ம் தேதி இஸ்ரோ ஆதித்யா எல்1 விண்கலத்தை சூரியனை ஆய்வு செய்த விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இஸ்ரோ இந்த விண்கலத்தை விண்ணில் செலுத்த தனது எல்விஎம்3 ராக்கெட்டை பயன்படுத்த போகிறது. அதில் பேலோடாக ஆதித்யா எல்1 விண்கலத்தை செட் செய்து அதை இந்த ராக்கெட் பூமியிலிருந்து குறிப்பிட்ட கிலோமீட்டர் தூரம் வரை கொண்டு சென்று விடும்படி செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து பயணத்தை துவங்கும் ஆதித்யா எல்1 சேட்டிலைட் சரியாக பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள சூரியனின் சுற்றுவட்ட பாதையான ஹாலோ எல்1 பகுதிக்கு சென்று சேரும்.

aditya l1 launch date

பின்பு அங்கு நிலை நிறுத்தப்பட்டு அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்து அந்த தகவல்களை இஸ்ரோவிற்கு அனுப்பவும் இந்த ஹாலோ சுற்றுவட்ட பாதை என்பது எல்1, எல்2, எல்3, என மூன்று பிரிவுகளாக இருக்கிறது. பூமியிலிருந்து சூரியனை நெருங்கும்போது எல்1 பகுதி தான் முதல் பகுதியாக இருக்கிறது .அங்கு தான் இந்த ஆதித்யா விண்கலம் நிறுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படியாக சூரியனை நெருங்கும் ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனின் மேற்பரப்பு, அதிலிருந்து உருவாகும் வெப்பம், சூரியனின் வெளிச்சம், வெளிச்சத்திற்கு முந்தைய நிலையில் சூரியனின் நிலை எப்படி இருக்கிறது உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை செய்ய உள்ளது. இந்த தகவல்களை எல்லாம் இஸ்ரோவிற்கு நேரடியாக இந்த ஆதித்யா எல்1 விண்கலம் அனுப்பி வைக்கப் போகிறது.

இந்த ஆதித்யா எல்1 விண்கலத்தில் மொத்தம் 7 விதமான பேலோடுகள் இருக்கிறது. இது சூரியனின் போட்டோஸ்பியர், குரோமோஸ்பியர், மற்றும் வெளிப்புற லேயர் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக பயன்படுத்தப்படவுள்ளது. இதில் எலக்ட்ரோ மேக்னெட்டிக் பார்ட்டிகல் டிடெக்டர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதுவும் இதற்கான ஆய்வில் பயன்படுத்தப்படும்.

இவையெல்லாம் நேரடியாக எல்1 பகுதியிலிருந்து நேரடியாக சூரியனை பார்த்து அதற்கான ஆய்வுகளை செய்யும் மற்ற பாகங்கள் எல்லாம் குறிப்பிட்ட பகுதியில் இருந்து சூரியன் மூலம் ஏற்படும் தாக்கத்தின் விளைவுகளை கணக்கிட்டு சோலார் டைனமிக் மற்றும் இன்டர்பிளானட்டரி மீடியம் குறித்து ஆய்வு செய்யும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மிக வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது தான் சந்திரயான் 3 உலகில் வேறு எந்த விஞ்ஞானிகளாலும் சாதிக்க முடியாத சாதனையை செய்துள்ள நிலையில் தற்போது அடுத்த சில நாட்களிலேயே ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை விண்ணில் ஏவ தயாராகிவிட்டது. இதன் மூலம் இந்தியா விண்வெளி ஆய்வில் சர்வதேச நாடுகளுக்கு பெரும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்க முடியாதது.

Article Published On: Saturday, August 26, 2023, 16:09 [IST]
English summary
Aditya l1 after chandrayaan 3 isro is aiming to launch the sun mission on this date
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X