சந்திரயானை விட நாளை நடக்கப்போறது தான் இஸ்ரோவின் மிகப்பெரிய சாதனை! என்ன நடக்கப்போகுது தெரியுமா?

இஸ்ரோ முதன்முறையாக கடந்த செப்டம்பர் மாதம்2ம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்திய ஆதித்யா எல்1 என்ற விண்கலம் நாளை மாலை எல்1 என்ற பகுதியை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எல்லாம் இஸ்ரோவால் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆதித்யா எல்1 என்ற விண்கலம் குறித்த விரிவான விவரங்களை எல்லாம் காணலாம் வாருங்கள்.

சந்திரயான் 3 வெற்றிக்கு பிறகு இஸ்ரோ உலகின் மிக முக்கியமான விண்வெளி ஆய்வு மையமாக மாறி உள்ளது. இஸ்ரோவின் செயல்பாடுகளை எல்லாம் தற்போது உலக நாடுகள் வியந்து பார்த்து வருகின்றன. இந்நிலையில் சந்திரயான் வெற்றியடைந்த ஒரு சில நாட்களிலேயே இஸ்ரோ அடுத்த மிக முக்கியமான ஏவுதலுக்கு தயாராகியது. அதன்படி ஆதித்யா எல்1 என்ற விண்கலம் சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் ஏவப்பட்டது.

aditya L1

கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி வெற்றிகரமாக பூமியில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட இந்த ஆதித்யா எல்1 விண்கலம் அன்று முதல் சூரியனை நோக்கி தனது பயணத்தை துவங்கியது. இந்த விண்கலம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான ஒட்டுமொத்த தூரத்தில் வெறும் ஒரு சதவீத தூரத்தை மட்டும் கடந்து அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்து தரவுகளை எல்லாம் இஸ்ரோவிற்கு அனுப்ப உள்ளது. அதை வைத்து பல்வேறு முக்கியமான ஆய்வுகளை இஸ்ரோ செய்ய உள்ளது.

இந்த எல்1 என்பது லாக்ரேஞ்ச் 1 என அழைக்கப்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே இவ்வாறாக ஐந்து இடங்கள் இருக்கிறது. இந்த இடங்களில் இருந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் பட்சத்தில் அதிகமான தரவுகள் துல்லியமான தரவுகள் எல்லாம் நமக்கு கிடைக்கும் என்பதால் இந்த புள்ளிகளில் இருந்து சூரியனை ஆய்வு செய்ய பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகிறது.

aditya L1

இதற்கான விண்கலத்தை தயார் செய்து ஏவுதலுக்கு தயார் செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி ஏவப்பட்டது. அன்று முதல் இது ஒவ்வொரு படிநிலைக்காக திட்டமிட்டபடி பயணித்து எல்1 என்ற கட்டத்தை அடைய உள்ளதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன. இஸ்ரோ விஞ்ஞானிகள் தற்போது இதன் ஒவ்வொரு நகைகளையும் உற்றுநோக்கிக் கொண்டே இருக்கின்றனர். இது எல்1 என்ற இடத்தை எப்பொழுது அடையும் என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை அதாவது ஜனவரி 6-ம் தேதி மாலை எல்1 என்ற இடத்தை இது எட்டிப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்1 என்ற இடத்தில் இருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் தான் பூமி என்பது இருக்கிறது. இது சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான தூரத்தில் வெறும் ஒரு சதவீத தூரம் தான். இவன் என்று பகுதியில் ஒரே இடத்தில் நின்றபடியே இந்த விண்கலம் என்பது ஆய்வு செய்யாது.

aditya L1

அப்படியாக விண்கலத்தை ஒரே இடத்தில் நிறுத்துவது என்பது கடினமான வேலையாக இருக்கும். அதனால் விண்கலம் அந்த எல்1 என்ற பகுதியை சுற்றி ஒரு வட்டப்பாதையை அமைத்து அதில் சுற்றி வந்து கொண்டே ஆய்வு பணிகளை மேற்கொள்ளும் இந்த வட்டப்பாதைக்கு ஹாலோ ஆர்பிட் என பெயர் வைத்துள்ளார்கள். இதன் மூலம் சூரியனை வேறு வேறு இடங்களில் ஆய்வு செய்து அதன் தரவுகளை பூமிக்கு அனுப்ப உள்ளது.

தற்போது எல் ஒன் என்ற பகுதியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் இந்த ஆதித்யா விண்கலத்தை சரியாக அந்த பாதையில் பயணிக்க வைப்பது என்பது சற்று சிரமமான விஷயம் தான். அது எந்த வழியில் பயணிக்கிறது என்பதை வைத்து தான் இஸ்ரோ விஞ்ஞானிகள் செயல்பட வேண்டும்.

aditya L1

அவ்வப்போது அதில் உள்ள இன்ஜின்களை ஃபயர் செய்து அதன் திசையை மாற்றி சரியான பாதைக்கு அதை பயணிக்க வைக்க வேண்டும். இந்த பணியில் தான் தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றார்கள். இதில் ஏதாவது ஒரு மாற்றம் நிகழ்ந்தாலும் கூட அடுத்தடுத்து பல்வேறு மாற்றங்களை செய்து அதை சரி செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

இதனால் எல்1 என்ற இடத்தில் இந்த விண்கலத்தை நிலை நிறுத்துவது என்பது இஸ்ரோவிற்கு பெரும் சவாலான விஷயமாக இருக்கிறது. இதை சாதித்தால் இஸ்ரோ மிகப்பெரிய சாதனையை சாதித்ததாக நாம் கருத முடியும். இந்த ஆதித்யா எல்1 விண்கலம் என்பது கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் தேதியே விண்ணில் செலுத்தப்பட்டிருந்த நிலையில் செப்டம்பர் 18-ம் தேதி முதல் இது ஆய்வுப் பணிகளை துவங்கி தரவுகளை பூமிக்கு அனுப்ப துவங்கிவிட்டது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இஸ்ரோ சந்திராயான் 3 வெற்றிக்குப் பிறகு பல்வேறு சாதனைகளை தொடர்ந்து படைத்து வருகிறது. அதில் ஒன்றாக இந்த ஆதித்யா எல் ஒன் என்ற விண்கல சாதனை மிக முக்கியமான சாதனையாக பார்க்கப்படுகிறது. நாளை சரியாக எல்1 என்ற இடத்தில் ஆதித்யா எல்1 விண்கலம் சென்று சேர்வது என்பது இந்தியாவிற்கு மிக பெருமையான தருணமாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, January 5, 2024, 13:06 [IST]
English summary
Aditya l1 isro sun mission final orbit tomorrow
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X