அடுத்த சாதனைக்கு தயாராகும் இஸ்ரோ! ஆதித்யா எல் 1-ல் இருந்து வந்த குட் நியூஸ்!
சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல் ஒன் விண்கலம் தனது பயணத்தில் இருக்கும் நிலையில் ஆய்வு செய்வதற்கான முக்கியமான ஒரு கருவியை வெற்றிகரமாக ஆக்டிவேட் செய்து விட்டதாக தற்போது இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த கருவி என்ன விதமான ஆய்வுகளை செய்யப்போகிறது. இதனால் இஸ்ரோவிற்கு கிடைக்கும் தகவல்கள் என்னென்ன என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சந்திரயான் 3 வெற்றிக்கு பிறகு உலகின் மிக முக்கியமான விண்வெளி ஆய்வு மையமாக மாறி உள்ளது. இந்நிலையில் சந்திரயான் மூன்று விண்கலம் வெற்றியடைந்த ஒரு சில நாட்களிலேயே சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் ஒன் என்ற விண்கலத்தை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பியது. கடந்த செப்டம்பர் மாதம் 2ம் தேதி ஆதித்யா எல் ஒன் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இந்த விண்கலம் தற்போது சூரியனை நோக்கி எல் ஒன் என்ற பகுதிக்கு தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறது சுமார் 127 நாட்கள் இந்த பயணமானது மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதால் தற்போது அந்த பயண காலகட்டத்தில் தான் ஆதித்யா எல் ஒன் விண்கலம் இருக்கிறது. இந்த பயணத்தின் போதே சூரியனை நெருங்க நெருங்க தனது ஒவ்வொரு ஆய்வுக் கருவிகளாக ஆக்டிவேட் செய்யப்பட்டு கொண்டே வரும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த ஆதித்யா எல்ஒன் விண்கலத்தில் மொத்தம் 7 விதமான கருவிகள் பொருத்தப்பட்டு ஆய்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இதில் முக்கியமாக சூரிய காற்று துகள்களை ஆய்வு செய்வதற்கான கருவிகள் பொருத்த திட்டமிடப்பட்டிருந்தது இந்த ஆய்வுக்காக இரண்டு விதமான கருவிகள் அதில் பொருத்தப்பட்டிருந்தன. முதல் கருவியான ஸ்டெப்ஸ் STEPS எனப்படும் சூப்பரா தெர்மல் மற்றும் எனர்ஜிடிக் பார்ட்டிக்கிள் ஸ்பெக்ட்ரோமீட்டர் என்ற கருவி கடந்த செப்டம்பர் மாதம் 10ஆம் தேதியே ஆக்டிவேட் செய்யப்பட்டு விட்டது.

அது தனது ஆய்வுப் பணிகளை துவங்கிய நிலையில் அடுத்ததாக ஸ்விஸ் SWIS எனப்படும் சோலார் விண்ட் ஸ்பெக்ட்ரோ மீட்டர் என்ற கருவி தற்போது ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த இரண்டு கருவிகளும் சேர்த்து ஆதித்யா எல் ஒன் விண்கலத்தை சுற்றி 360 டிகிரியும் சுழன்று சூரிய காற்று துகள்களை ஆய்வு செய்து அந்த தரவுகளை தற்போது பூமிக்கு அனுப்பி வருகிறது. உங்களை தற்போது இஸ்ரோ தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இந்த தரவுகளில் உள்ள மாற்றங்கள் மூலம் அந்த சூரிய வெப்பம் பூமிக்கு வரும்போது பூமியில் என்ன விதமான மாற்றங்கள் எல்லாம் ஏற்படுகிறது என ஆய்வு செய்வதற்காக இது தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இந்த தரவுகள் மற்றும் பூமியில் ஏற்படும் வெயிலின் தாக்கத்தால் உள்ள தரவுகள் ஆகியவற்றை வைத்து சூரியனிலிருந்து பூமிக்கு வரக்கூடிய ஆபத்துக்களை முன்கூட்டியே நம்மால் கணிக்க முடியுமா என்று ஆய்வை தற்போது இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.

தற்போது வெற்றிகரமாக இந்த ஆய்வுப் பணிகள் துவங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. தொடர்ந்து ஆதித்யா எல் ஒன் விண்கலம் என்ற இலக்கை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டு கொண்டே தான் இருக்கிறது. வரும் ஜனவரி மாதம் 7ஆம் தேதி தான் இது எல் ஒன் என்ற இடத்தை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை தொடர்ந்து ஆதித்யா எல் ஒன் கண்காணிப்பிலேயே இருக்கும் என்று தான் கூறப்படுகிறது.
இந்த ஆதித்யா எல் ஒன் விண்கலம் தனது இலக்கை நெருங்க நெருங்க ஒவ்வொரு கருவியாக ஆக்டிவேட் செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. எல் ஒன் தளத்தை நெருங்கும் போது இதில் உள்ள 7 கருவிகளும் ஆக்டிவேட் செய்யப்பட்டு தொடர்ந்து அதிலிருந்து தரவுகள் பெறப்பட்டு கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தரவுகள் எல்லாம் வரிசையாக இஸ்ரோவிற்கு கிடைத்த பின்பு இஸ்ரோ தரவுகளை வைத்து இஸ்ரோவால் ஏதாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா என்ற விபரத்தை வெளியிடும்.
ஆதித்யா எல் ஒன் விண்கலத்தின் நோக்கமே சூரியனை இன்னும் அதிகமாக புரிந்து கொள்வதற்காகவும், சூரியனின் மூலம் ஏற்படும் தாக்கத்தின் விளைவுகளை விரைவாக பூமிக்கு தெரிந்து கொள்ள வாய்ப்புகள் இருக்கிறதா என்பதை சோதனை செய்வதற்காகவுமே இது விண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த விண்கலம் தனது ஆய்வுப் பணிகளை துவங்கி விட்டாலே அது இஸ்ரோவிற்கு மிகப்பெரிய சாதனையாக அமையும்.
டிரைவ்ஸ்பர்க் கருத்து: இஸ்ரோ தொடர்ந்து விண்வெளி ஆய்வில் பல்வேறு ஆய்வு பணிகளை செய்து கொண்டே இருக்கிறது. சந்தரயான் 3 வெற்றிக்குப் பிறகு இஸ்ரோ எடுத்து வைக்கும் அனைத்து நகர்வுகளும் வெற்றிகரமாகவே அமைந்துள்ளன. தகுதியான திட்டத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன்னால் நடந்த சோதனையும் வெற்றிகரமாக அமைந்துள்ளது. இஸ்ரோ தொடர்ந்து வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications









