உங்க கார்ல இந்த வசதிகள் இருந்தால் இப்படியெல்லாம் பிரச்னைகள் வருமா? கஷ்டப்பட்ட காசு வீணா போயிரும்!

கீ லெஸ் எண்ட்ரி மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் ஆகிய வசதிகளின் நன்மை, தீமைகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உங்க கார்ல இந்த வசதிகள் இருந்தால் இப்படியெல்லாம் பிரச்னைகள் வருமா? கஷ்டப்பட்ட காசு வீணா போயிரும்!

தற்போது கிட்டத்தட்ட அனைத்து கார்களிலும், கீ லெஸ் எண்ட்ரி (Keyless Entry) மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் (Push-button Start/Stop) ஆகிய வசதிகள் வழங்கப்படுகின்றன. இந்த வசதிகள் தங்கள் கார்களில் இருக்க வேண்டும் என அனைத்து வாடிக்கையாளர்களும் விரும்புகின்றனர். இந்த வசதிகள் பல விதங்களில் உதவிகரமாக இருக்கும் என்பதுதான் இதற்கு காரணம்.

உங்க கார்ல இந்த வசதிகள் இருந்தால் இப்படியெல்லாம் பிரச்னைகள் வருமா? கஷ்டப்பட்ட காசு வீணா போயிரும்!

அதே நேரத்தில் நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் என்பதை போல், கீ லெஸ் எண்ட்ரி மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் ஆகிய வசதிகளில் ஒரு சில குறைகளும் இருக்கின்றன. எனவே இந்த வசதிகளின் நன்மைகள் மற்றும் தீமைகளை இந்த செய்தியில் விளக்கி கூறியுள்ளோம். இந்த வசதிகள் உங்களுக்கு தேவையா? தேவை இல்லையா? என்பதை நீங்கள் முடிவு செய்ய இந்த தகவல்கள் உங்களுக்கு உதவும் என நம்புகிறோம்.

உங்க கார்ல இந்த வசதிகள் இருந்தால் இப்படியெல்லாம் பிரச்னைகள் வருமா? கஷ்டப்பட்ட காசு வீணா போயிரும்!

நிறைகள்:

கீ லெஸ் எண்ட்ரி வசதிக்கான அர்த்தம் அதன் பெயரிலேயே உள்ளது. கீ லெஸ் எண்ட்ரி வசதி இருந்தால், காரின் கதவுகளை திறக்க சாவியை சொருக வேண்டியதில்லை. காரின் கதவுகளில் சாவியை சொருகாமலேயே நாம் உள்ளே செல்ல முடியும். ஆனால் முன்பெல்லாம் நாம் சாவியை சொருகி கதவை திறக்க வேண்டியதாக இருந்தது.

உங்க கார்ல இந்த வசதிகள் இருந்தால் இப்படியெல்லாம் பிரச்னைகள் வருமா? கஷ்டப்பட்ட காசு வீணா போயிரும்!

இந்த வசதி கேட்பதற்கு சாதாரணமாக இருக்கலாம். ஆனால் உண்மையில் இது உங்கள் சௌகரியத்தை உறுதி செய்யும். பட்டனை அழுத்துவதன் மூலமாக காரின் கதவுகளை திறந்து உள்ளே செல்வதற்கு கீ லெஸ் எண்ட்ரி வசதி உதவி செய்கிறது. அதேபோல் காரின் உள்ளே நுழைந்தவுடன், இக்னீஷனை (Ignition) ஸ்டார்ட் செய்வதற்கு நீங்கள் சாவியை சொருக வேண்டியதில்லை.

உங்க கார்ல இந்த வசதிகள் இருந்தால் இப்படியெல்லாம் பிரச்னைகள் வருமா? கஷ்டப்பட்ட காசு வீணா போயிரும்!

நீங்கள் சாவியை உங்கள் பாக்கெட்டில் வைத்து கொண்டு, பட்டனை அழுத்துவதன் மூலமாக காரை ஸ்டார்ட்/ஸ்டாப் செய்யலாம். புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதி இதற்கு உதவி செய்கிறது. எனவே முன்பை காட்டிலும் நமது கார் பயணங்களை இந்த வசதிகள் தற்போது இன்னும் சௌகரியமாக மாற்றியுள்ளன என்பதை மறுக்க முடியாது.

உங்க கார்ல இந்த வசதிகள் இருந்தால் இப்படியெல்லாம் பிரச்னைகள் வருமா? கஷ்டப்பட்ட காசு வீணா போயிரும்!

பொதுவாக ஷாப்பிங் முடிந்த பிறகு, கையில் நிறைய பைகளை கொண்டு வருவீர்கள். அப்போது காரின் கதவுகள் மற்றும் பின்னால் உள்ள 'பூட்' (Boot) பகுதியை திறப்பது சிரமமாக இருக்கும். முன்பெல்லாம் நீங்கள் காருக்கு வந்ததும், பொருட்களை கீழே வைத்து விட்டு, சாவியை போட்டு கதவை திறக்க வேண்டும். அதன்பின் காருக்குள் சென்று, உள்ளே இருந்து பூட் பகுதியை 'அன்லாக்' செய்ய வேண்டும்.

உங்க கார்ல இந்த வசதிகள் இருந்தால் இப்படியெல்லாம் பிரச்னைகள் வருமா? கஷ்டப்பட்ட காசு வீணா போயிரும்!

அல்லது சாவி போட்டு 'பூட்' பகுதியை திறக்க வேண்டியதாக இருக்கும். ஆனால் தற்போது பட்டனை அழுத்துவதன் மூலமாகவே இதையெல்லாம் செய்து கொள்ள முடியும். நமது வாழ்க்கையை இந்த வசதிகள் இன்னும் எளிமையாக்கியுள்ளன. இதுதவிர தற்போதைய அதிநவீன சாவிகள், பாதுகாப்பான ஐடி (ID) உடன் வருகின்றன.

உங்க கார்ல இந்த வசதிகள் இருந்தால் இப்படியெல்லாம் பிரச்னைகள் வருமா? கஷ்டப்பட்ட காசு வீணா போயிரும்!

இதனை உங்கள் காரின் கம்ப்யூட்டர் 'ரீட்' செய்யும். அதன்பின் மட்டுமே காரை அன்லாக்/ஸ்டார்ட் செய்ய முடியும். இது திருட்டு சம்பவங்களை தடுக்க உதவும். உண்மையில் திருட்டு சம்பவங்களுக்கு எதிரான மிகச்சிறந்த தீர்வாக இந்த வசதியை கூறலாம். ஏனெனில் சரியான சாவி உங்கள் காருக்கு உள்ளே இருக்க வேண்டும்.

உங்க கார்ல இந்த வசதிகள் இருந்தால் இப்படியெல்லாம் பிரச்னைகள் வருமா? கஷ்டப்பட்ட காசு வீணா போயிரும்!

அத்துடன் அதனை உங்கள் காரின் கம்ப்யூட்டர் 'ரீட்' செய்ய வேண்டும். அதுவரை காரை ஓட்ட முடியாது. இந்தியாவில் கார் திருட்டு சம்பவங்கள் தற்போது அதிகளவில் நடைபெற்று வருகின்றன. இதனால் கார் உரிமையாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த வசதி இருந்தால், உங்கள் கார் கூடுதல் பாதுகாப்பாக இருக்கும்.

உங்க கார்ல இந்த வசதிகள் இருந்தால் இப்படியெல்லாம் பிரச்னைகள் வருமா? கஷ்டப்பட்ட காசு வீணா போயிரும்!

குறைகள்:

நாங்கள் ஏற்கனவே கூறியபடி கீ லெஸ் எண்ட்ரி மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதிகளில் நிறைய நன்மைகளை போல, ஒரு சில குறைகளும் இருக்கின்றன. இந்த வசதிகள் காரின் விலையை உயர்த்தி விடும் என்பது குறைகளுக்கு ஒரு உதாரணம். இந்த வசதிகளை வழங்க வேண்டும் என்றால், கார் நிறுவனங்கள் அதிக செலவு செய்ய வேண்டும்.

உங்க கார்ல இந்த வசதிகள் இருந்தால் இப்படியெல்லாம் பிரச்னைகள் வருமா? கஷ்டப்பட்ட காசு வீணா போயிரும்!

எனவே இந்த வசதிகள் கொண்ட கார்களின் விலையை அவை அதிகமாக நிர்ணயம் செய்கின்றன. இதன் காரணமாக நீங்கள் அதிக விலை கொடுத்து காரை வாங்க வேண்டியதாக இருக்கும். அதேபோல் சேதம் அடைந்தாலோ அல்லது மாற்ற வேண்டிய தேவை இருந்தாலோ, ரிப்பேர், சர்வீஸ் செய்ய அதிக செலவு ஆகும் என்பதும் குறைதான்.

உங்க கார்ல இந்த வசதிகள் இருந்தால் இப்படியெல்லாம் பிரச்னைகள் வருமா? கஷ்டப்பட்ட காசு வீணா போயிரும்!

பாகங்களை மாற்றுவதற்கு அதிக செலவு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த வேலைகளை செய்து முடிக்க அதிக நேரமும் ஆகும். அதேபோல் ஏதாவது ஒரு காரணத்தால் சரியாக செயல்படவில்லை என்றாலும் கூட உங்களால் சர்வீஸ் சென்டருக்கு காரை கொண்டு செல்ல முடியாது. ஏனெனில் சாவி இல்லாமல் கார் இயங்காது.

உங்க கார்ல இந்த வசதிகள் இருந்தால் இப்படியெல்லாம் பிரச்னைகள் வருமா? கஷ்டப்பட்ட காசு வீணா போயிரும்!

எனவே காரை சர்வீஸ் சென்டருக்கு 'டோ' செய்து கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அதேபோல் ஹேக்கர்களாலும் பிரச்னைகள் ஏற்படலாம். ஹேக்கர்களால் புதிய சாவியை 'ப்ரோகிராம்' செய்யவும், உங்கள் காரின் கம்ப்யூட்டருடன் அதனை 'கனெக்ட்' செய்யவும் முடியும். உங்கள் காரின் கம்ப்யூட்டரும், இந்த சாவியை அடையாளம் கண்டு கொள்ளும்.

உங்க கார்ல இந்த வசதிகள் இருந்தால் இப்படியெல்லாம் பிரச்னைகள் வருமா? கஷ்டப்பட்ட காசு வீணா போயிரும்!

இது நடந்து விட்டால் பெரிய சிக்கல்தான். ஏனெனில் சம்பந்தப்பட்ட நபர் காரை 'அன்லாக்' செய்து ஓட்டி செல்ல முடியும். இது இந்த வசதிகளின் மற்றொரு மிக முக்கியமான குறை ஆகும். கீ லெஸ் எண்ட்ரி மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதிகளின் நன்மை, தீமைகளை நாங்கள் சொல்லி விட்டோம். இனி தேவைகளை பொறுத்து முடிவு செய்வது உங்கள் பொறுப்பு.

More from DriveSpark

Article Published On: Thursday, April 7, 2022, 13:07 [IST]
English summary
Advantages and disadvantages of keyless entry push button start stop features
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+