வாகனங்களுக்கான முக்கிய சான்றுக்கான கட்டணம் விரைவிலேயே உயர போகுது! 80 சதவீதம் வரை உயர்த்த போறாங்க!

உலக அளவில் காற்று மாசுபாடு பெரும் பிரச்னையாக மாறி இருக்கின்றது. குறிப்பாக, இந்தியா போன்ற அதிக ஜனத்தொகைக் கொண்ட நாடுகள் கடும் சுற்றுச்சூழல் மாசுபாட்டில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலில் இருந்து நாட்டை விடுவிக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஐசிஇ (ICE) வாகனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி இருக்கின்றன.

முக்கியமாக டீசல் வாகனங்களுக்கு எதிராக அரசுகள் முன்னெடுத்து வரும் நடவடிக்கையானது அறிவிக்கப்படாத போரைப் போல் உள்ளது. அந்த அளவிற்குக் கடுமையான நடவடிக்கையையே வாகனங்கள்மீது அரசு முன்னெடுத்து வருகின்றது. இதன் விளைவாக சில வாகன உற்பத்தி நிறுவனங்கள் டீசல் வாகன உற்பத்தியையே கைவிட்டு இருக்கின்றன.

Puc certificate

உதராணம், மாருதி சுஸுகி. இந்த நிறுவனம் தற்போது முழுக்க முழுக்க பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வாகன உற்பத்திக்கு மாறி இருக்கின்றது. இதேபோல், சில நிறுவனங்கள் படிப்படியாக டீசல் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை குறைக்க ஆரம்பித்து இருக்கின்றன. இதேபோல், பெட்ரோல் வாகனங்களுக்கு எதிராகவும் மத்திய, மாநில அரசுகள் கணிசமான அளவில் நடவடிக்கையை எடுத்துக் கொண்டிருக்கின்றன.

இந்த மாதிரியான சூழலிலேயே பெட்ரோல், டீசல் வாகனங்களின் இயக்கத்திற்கு தேவைப்படும் முக்கியமான ஆவணங்களில் ஒன்றான. பியூசி சான்றின் (Pollution Under Control Certificate) அதிகரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆர்சி புத்தகம், இன்சூரன்ஸை போல இந்த ஆவணும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.

வாகன தணிக்கையில் ஈடுபடும் போக்குவரத்து காவலர்கள் அந்த குறிப்பிட்ட வாகனம் என்ன மாதிரியான மாசினை வெளியேற்றிக் கொண்டிருப்பதை அறிந்துக் கொள்ள இந்த ஆவணமே பெரும் உதவியாக இருக்கின்றது. இதனால், கடுமையான மாசுபாட்டில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் பியூசி சான்று கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் இந்த ஆவணம் இருக்க வேண்டும் என்பது கட்டாயமே, ஆனால், தலைநகர் டெல்லியில் இந்த விஷயத்தில் கூடுதல் கெடுபிடி காட்டப்பட்டு வருகின்றது. இத்தகைய ஆவணத்திற்கான கட்டணத்தையே விரைவில் உயர்த்துவதற்கான பரிந்துரை போக்குவரத்துத் துறைக்கு துறைச் சார்ந்தவர்களால் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றது.

கடைசியாக பியூசி சான்றுக்கான கட்டணம் 2011 ஆம் ஆண்டிலேயே உயர்த்தப்பட்டது. இதற்கு பின்னர் இப்போது இதன் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்த நிலையிலேயே பியூசி சான்றுக்கான கட்டணத்தை உயர்த்துவதற்கான பரிந்துரைகள் போக்குவரத்துறைக்கு வந்திருக்கின்றது. இந்த பரிந்துரை ஏற்கப்பட்டு கட்டணம் உயர்த்தப்படும் எனில் சுமார் 80 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது, பரிந்துரையை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக டிரான்ஸ்போர்ட் அமைச்சர் கைலாஷ் கஹ்லோத் கூறி இருக்கின்றார். மத்திய மோட்டார் வாகன சட்டம் 1989இன் படி, அனைத்து வாகனங்களும் பியூசி சான்றை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகும். இந்த சான்று ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயம் புதுப்பிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

பிஎஸ் IV வாகனங்களுக்கே இந்த பொருந்தும். மற்ற வாகனங்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை பியூசி சான்றை புதுப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இப்போதைய நிலவரப்படி தலை நகர் டெல்லியில் இருசக்கர வாகனத்திற்கான பியூசி சான்று கட்டணமாக ரூ. 60 வசூலிக்கப்படுகின்றது.

அதேவேளையில், பெட்ரோல் கார்களுக்கு ரூ. 80ம், டீசல் வாகனங்களுக்கு ரூ. 100ம் வசூல் செய்யப்படுகின்றது. இத்துடன் 18 சதவீதம் ஜிஎஸ்டி-யும் தனியாக வசூலிக்கப்படும். இந்த சான்று இல்லாத வாகனங்களுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் அல்லது ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இருப்பினும், இப்போதும் நாட்டில் பல வாகனங்கள் இந்த சான்று இன்றி விதியை மீறி இயங்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக தலைநகர் டெல்லியில் 85 சதவீதத்திற்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் பியூசி சான்று இல்லாமல் இயங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது.

தலை நகர் டெல்லியில் ஒட்டுமொத்தமாக 97 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இதில் கார்கள் 27.8 லட்சம் ஆகும், இருசக்கர வாகனங்கள் 69.8 லட்சம் ஆகும். இந்த ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 22 லட்சம் வாகனங்களே பியூசி சான்று இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பியூசி சான்று மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். இது இல்லாத வாகனம் சாலையில் இயங்கும் எனில், அந்த வாகன இயக்கம் சட்டப்பூர்வமற்றதாக கருதப்படுகின்றது. ஆர்சி புத்தகம், இன்சூரன்ஸைப் போல இந்த ஆவணமும் கட்டாயம் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, December 25, 2023, 16:07 [IST]
English summary
After 2011 fee for puc certificate will increase upto 80 percent
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+