சண்டிகரை தொடர்ந்து பெங்களூருவில் வாகன ஓட்டிகளை மிரட்டும் ஆர்எஸ்எஸ்.. அடுத்த குறி சென்னை?

கொல்கத்தா, சண்டிகரை தொடர்ந்து, வாகனங்கள் எந்த வேகத்தில் பயணிக்கிறது என்பதை காட்டும் ரேடார் ஸ்பீட் சைன்போர்டுகள் பெங்களூருவில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன.

கொல்கத்தா மற்றும் சண்டிகரை தொடர்ந்து, பெங்களூருவில் ஆர்எஸ்எஸ் வாகன ஓட்டிகளை மிரட்ட தொடங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொல்கத்தா, சண்டிகரை தொடர்ந்து பெங்களூரு வந்தது ஆர்எஸ்எஸ்.. சென்னைக்கு எப்போது?

வாகன ஓட்டிகள் அதிவேகத்தில் பயணிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக ஆர்எஸ்எஸ்-ஸின் உதவியை நாடியுள்ளனர் பெங்களூரு மாநகர போக்குவரத்து போலீசார். என்னது, ஆர்எஸ்எஸ் உதவியை போலீசார் நாடுகிறார்களா? என குழப்பம் அடைய வேண்டும்.

கொல்கத்தா, சண்டிகரை தொடர்ந்து பெங்களூரு வந்தது ஆர்எஸ்எஸ்.. சென்னைக்கு எப்போது?

ரேடார் ஸ்பீட் சைன்போர்ட்ஸ் என்பதன் சுருக்கமே ஆர்எஸ்எஸ் (Radar Speed Signboards-RSS). வாகன ஓட்டிகள் அதிவேகத்தில் பயணிப்பதால், விபத்துக்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது அனைவரும் அறிந்ததே.

கொல்கத்தா, சண்டிகரை தொடர்ந்து பெங்களூரு வந்தது ஆர்எஸ்எஸ்.. சென்னைக்கு எப்போது?

இதனை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டிருக்கும் முயற்சிதான் ரேடார் ஸ்பீட் சைன்போர்ட்ஸ். அதாவது ஆர்எஸ்எஸ். சாலையோரமாக நிறுவப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் பலகைகள், வாகனங்கள் பயணிக்கும் வேகத்தை காட்டும்.

கொல்கத்தா, சண்டிகரை தொடர்ந்து பெங்களூரு வந்தது ஆர்எஸ்எஸ்.. சென்னைக்கு எப்போது?

இதன்மூலம் வாகன ஓட்டிகள் வேகத்தை குறைத்து கொண்டு, மிதமான வேகத்தில் பயணம் செய்ய முடியும். முதற்கட்டமாக பெங்களூரு நகரில் உள்ள ஹெப்பல்-எலஹங்கா ப்ளைஓவரின் (சர்வதேச விமான நிலைய சாலை) இரு புறமும், ஆர்எஸ்எஸ் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறது.

MOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...!!

கொல்கத்தா, சண்டிகரை தொடர்ந்து பெங்களூரு வந்தது ஆர்எஸ்எஸ்.. சென்னைக்கு எப்போது?

இந்த ப்ளைஓவரில் கார்கள் அதிகபட்சமாக மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான கார்கள், மணிக்கு 80 கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட வேகத்தில்தான் சென்று வருகின்றன.

கொல்கத்தா, சண்டிகரை தொடர்ந்து பெங்களூரு வந்தது ஆர்எஸ்எஸ்.. சென்னைக்கு எப்போது?

இனி கார்கள் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் சென்றால், ஆர்எஸ்எஸ் அறிவிப்பு பலகை அதனை டிஸ்ப்ளே செய்யும். இதன்மூலம் கார் டிரைவர்கள் வேகத்தை குறைத்து கொள்ள முடியும். கார்கள் மட்டுமல்லாது அனைத்து வாகனங்களின் வேகத்தையும் இது கணக்கிட்டு காட்டும்.

கொல்கத்தா, சண்டிகரை தொடர்ந்து பெங்களூரு வந்தது ஆர்எஸ்எஸ்.. சென்னைக்கு எப்போது?

ஆனால் ஆர்எஸ்எஸ்-ஸை அடிப்படையாக வைத்து, அதிவேகத்தில் பயணிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் இதை வைத்து வாகனங்களின் வேகம் தொடர்பான மூன்று மாத டேட்டாபேஸை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கொல்கத்தா, சண்டிகரை தொடர்ந்து பெங்களூரு வந்தது ஆர்எஸ்எஸ்.. சென்னைக்கு எப்போது?

அதன்பின்பே ஆர்எஸ்எஸ்-ஸை அடிப்படையாக கொண்டு அபராதம் விதிப்பது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் வெகு விரைவில், பெங்களூரு நகரின் முக்கியமான 50 சந்திப்புகளில், ஆர்எஸ்எஸ்-ஐ இன்ஸ்டால் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கொல்கத்தா, சண்டிகரை தொடர்ந்து பெங்களூரு வந்தது ஆர்எஸ்எஸ்.. சென்னைக்கு எப்போது?

ஆர்எஸ்எஸ்ஸில் உள்ள சென்சார்கள், சுமார் 50 மீட்டர்கள் தொலைவில் இருந்து வாகனங்களின் வேகத்தை கணக்கிட கூடிய திறன் வாய்ந்தவை. பெங்களூரு மாநகரில் அதிவேகம் தொடர்பாக கடந்த 2017ம் ஆண்டில் மட்டும் சுமார் 1.35 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன.

கொல்கத்தா, சண்டிகரை தொடர்ந்து பெங்களூரு வந்தது ஆர்எஸ்எஸ்.. சென்னைக்கு எப்போது?

எனவேதான் இதுபோன்ற வித்தியாசமான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெங்களூரு போக்குவரத்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''வாகன ஓட்டிகள் சரியான வேகத்தில் பயணிக்க ஆர்எஸ்எஸ் உதவி செய்யும். இதுதவிர வேறு எதாவது செய்ய முடியுமா? என்பதையும் ஆராய்ந்து வருகிறோம்.

கொல்கத்தா, சண்டிகரை தொடர்ந்து பெங்களூரு வந்தது ஆர்எஸ்எஸ்.. சென்னைக்கு எப்போது?

உதாரணமாக ஹைதராபாத் நேரு அவுட்டர் ரிங் ரோட்டில், அனுமதிக்கப்பட்டதை காட்டிலும் அதிவேகத்தில் பறக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அங்கு வாகனம் உள்நுழைந்த மற்றும் வெளியேறிய நேரத்தை அடிப்படையாக கொண்டு, அதிவேகத்தில் பயணித்ததா? என்பது கண்டறியப்படுகிறது.

கொல்கத்தா, சண்டிகரை தொடர்ந்து பெங்களூரு வந்தது ஆர்எஸ்எஸ்.. சென்னைக்கு எப்போது?

திருமலையில் செயல்படுத்தப்படும் ஒரு திட்டத்தையும் உதாரணமாக கூற முடியும். 18 கிலோ மீட்டர் மலைப்பாதையை கடக்க ஒவ்வொரு வாகனமும் எவ்வளவு நேரம் எடுத்து கொண்டது? என்பதை டிஸ்ப்ளே செய்யும் ஆர்எஸ்எஸ் அறிவிப்பு பலகைகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.

கொல்கத்தா, சண்டிகரை தொடர்ந்து பெங்களூரு வந்தது ஆர்எஸ்எஸ்.. சென்னைக்கு எப்போது?

ஏதேனும் ஒரு வாகனம் அதிவேகத்தில் மலைப்பாதையை கடந்திருந்தால் கூட, அந்த வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்படும். இதுபோன்ற திட்டங்களை எல்லாம் நிச்சயமாக தேவை என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இதன்மூலம் உயிரிழப்புகளை தடுக்க முடியும்'' என்றார்.

கொல்கத்தா, சண்டிகரை தொடர்ந்து பெங்களூரு வந்தது ஆர்எஸ்எஸ்.. சென்னைக்கு எப்போது?

இதுதவிர விபத்து அதிகம் நடைபெறும் இடங்கள் என ஒரு சில பகுதிகளை போலீசார் கண்டறிந்து வைத்துள்ளனர். அந்த பகுதிகளுக்கு 6 கிலோ மீட்டர்கள் முன்பிருந்தே ஆர்எஸ்எஸ்-ஐ இன்ஸ்டால் செய்யும் திட்டமும் போலீசார் வசம் உள்ளது.

கொல்கத்தா, சண்டிகரை தொடர்ந்து பெங்களூரு வந்தது ஆர்எஸ்எஸ்.. சென்னைக்கு எப்போது?

இதன் மூலம் விபத்து பகுதிகளுக்கு முன்னதாகவே வாகனங்களின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு விடும் என போலீசார் எதிர்பார்க்கின்றனர். தற்போது பெங்களூரு ஏர்போர்ட் சாலையில் பொருத்தப்பட்டுள்ள ஆர்எஸ்எஸ் வாகன ஓட்டியில் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா, சண்டிகரை தொடர்ந்து பெங்களூரு வந்தது ஆர்எஸ்எஸ்.. சென்னைக்கு எப்போது?

அதே சமயம் போலீசாரின் முயற்சியை வாகன ஓட்டிகள் வரவேற்கவும் செய்துள்ளனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் சிலர் கூறுகையில், ''நெடுஞ்சாலைகள் என்றாலே, போலீசார் யாரும் இருக்க மாட்டார்கள் எனக்கருதி, அதிவேகத்தில் பயணிப்பது வாகன ஓட்டிகளின் வழக்கமாகி விட்டது.

கொல்கத்தா, சண்டிகரை தொடர்ந்து பெங்களூரு வந்தது ஆர்எஸ்எஸ்.. சென்னைக்கு எப்போது?

தற்போது போலீசார் எடுத்துள்ள முயற்சியின் மூலமாக வாகன ஓட்டிகள் வேகத்தை குறைத்து கொண்டு மிதமான வேகத்தில் பயணிக்க முடியும்'' என்றனர். இந்த ஆர்எஸ்எஸ் தொழில்நுட்பம் வெளிநாடுகளில் மிக பிரபலமான ஒன்றாக உள்ளது.

கொல்கத்தா, சண்டிகரை தொடர்ந்து பெங்களூரு வந்தது ஆர்எஸ்எஸ்.. சென்னைக்கு எப்போது?

குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த இந்த முறையே கையாளப்பட்டு வருகிறது. இந்தியாவை எடுத்து கொண்டால், கொல்கத்தா, சண்டிகர் உள்ளிட்ட நகரங்களில், சமீபத்தில் ரேடார் ஸ்பீட் சைன்போர்டுகள் இன்ஸ்டால் செய்யப்பட்டன.

கொல்கத்தா, சண்டிகரை தொடர்ந்து பெங்களூரு வந்தது ஆர்எஸ்எஸ்.. சென்னைக்கு எப்போது?

தமிழக தலைநகர் சென்னையின் முக்கியமான இடங்களிலும் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலை (இசிஆர்) உள்ளிட்ட இடங்களில் ஆர்எஸ்எஸ் இன்ஸ்டால் செய்யப்பட்டால், விபத்துக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட்
English summary
after-kolkata-and-chandigarh-radar-speed-signboards-installed-in-bengaluru
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X