நம்ம ஊர் சாலைக்கு இந்த டெக்னாலஜி சரிப்பட்டு வராதுனு இப்போ புரிஞ்சி இருக்குமே! கார் நிறுவனத்தை மட்டும் நம்புங்க

இந்தியாவின் நெரிசலான போக்குவரத்தில் அடாஸ் (ADAS) தொழிற்நுட்பத்தால் கூட முறையாக செயல்பட முடியாது என்கிற கருத்து பரவலாக வாகன ஓட்டிகள் மத்தியில் இருக்கும் நிலையில், கார் ஒன்றின் அடாஸ் தொகுப்பு பரபரப்பான ஓர் இந்திய சாலையில் பாதசாரிகளையும், மற்ற வாகன ஓட்டிகளையும் அடையாளம் காண திணறியுள்ளது.

தொழிற்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து வருகிறது. இதன்படி, கார்களில் வழங்கப்படும் தொழிற்நுட்பங்களும் பரிணாம வளர்ச்சியை சமீப காலங்களில் கண்டுள்ளன. இந்த வகையில், இந்த கால மாடர்ன் கார்களில் அடாஸ் தொகுப்பு இடம்பெற ஆரம்பித்துள்ளது. அடாஸ் தொகுப்பின் மூலம் பல்வேறு அட்வான்ஸ்டு வசதிகளை கார் ஓட்டிகள் பெற முடிகிறது.

adas behaved abnormally in india

இந்தியாவில் அடாஸ் உடன் அறிமுகம் செய்யப்பட்ட முதல் கார் எம்ஜி க்ளோஸ்டர் ஆகும். அதன்பின் வேறு சில கார் நிறுவனங்களும் தங்களது கார்களில் அடாஸ் வசதிகளை வழங்க ஆரம்பித்துள்ளன. இந்த வகையில், இந்த 2024ஆம் ஆண்டில் பல புதிய கார்கள் அடாஸ் உடன் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

இவ்வாறு கார்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மட்டுமின்றி, ஆஃப்டர்-மார்க்கெட் சந்தையிலும் அடாஸ் வசதிகள் கிடைக்கின்றன. அதாவது, கார் உதிரி பாகங்கள் கிடைக்கும் சந்தையிலும் அடாஸ் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும், கார் நிறுவனங்கள் வழங்கும் அடாஸ் அளவிற்கு ஆஃப்டர்-மார்க்கெட் அடாஸ் இருப்பது இல்லை.

adas behaved abnormally in india

ஏனெனில், கார் நிறுவனங்கள் பல்வேறு கட்ட சோதனைகளுக்கும், ஆய்வுகளுக்கும் பிறகே தங்களது கார்களில் அடாஸை வழங்குகின்றன. அத்தகைய அடாஸ் தொழிற்நுட்பங்களின் அளவிற்கு, ஆஃப்டர்-மார்க்கெட் அடாஸ் துல்லியமாக இருப்பதில்லை. இதனை வெளிக்காட்டும் விதமாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை பற்றிதான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

இந்த வீடியோவில், ஆஃப்டர்-மார்க்கெட் 70 எம்.ஏ.ஐ டேஷ் கேமராவை கொண்ட ஒரு கார் இந்தியாவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஒரு சாலையில் இயங்கிக் கொண்டிருப்பது காட்டப்பட்டுள்ளது. இந்த காரின் டேஷ்கேம் சாலைக்கு குறுக்காக வரும் பாதசாரிகளை அடையாளம் கண்டு, அதுகுறித்து எச்சரிக்கையை வழங்கும் திறன் கொண்டது. ஆனால், நம் ஊர் சாலைகளை பற்றிதான் நமக்கு நன்றாக தெரியுமே.

adas behaved abnormally in india

சாலைக்கு குறுக்கே ஆட்கள் வருவதை கண்ட இந்த காரின் டேஷ்கேம் அதுகுறித்து தொடர்ச்சியாக எச்சரிக்கை ஒலியை எழுப்புவதை இந்த வீடியோவில் காண முடிகிறது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், இந்த காரின் ஆஃப்டர்-மார்க்கெட் அடாஸ் சிஸ்டம் பாதசாரிகளின் நடமாட்டத்தை அடையாளம் காண்வதில் சற்று அதிகமாகவே திணறுகிறது.

சாலைக்கு ஓரத்தில் உள்ள பிளாட்ஃபாரம் கடைகளில் இருப்பவர்களையும் பாதசாரிகளாக அடையாளம் கண்டு எச்சரிக்கை செய்கிறது. சாலையில் செல்லும் மற்ற வாகனங்களின் வேகத்தை முறையற்ற விதத்தில் இந்த டேஷ்கேம் மதிப்பிடுவதையும் வீடியோவில் காண முடிகிறது. கார்ஸ் இந்தியா என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவை கீழே செய்தியின் இறுதியில் காணலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், கடந்த சில வருடங்களாகவே அடாஸ் வசதிகள் கார்களில் வழங்கப்பட்டு வருகின்றன. அடாஸை தவறாக பயன்படுத்திய வாகன ஓட்டிகளை பற்றி சிலமுறை நமது செய்தித்தளத்தில் கூட பார்த்துள்ளோம். ஆனால், இவ்வாறு திறன் குறைப்பாடு கொண்ட அடாஸ் சிஸ்டத்தை இதற்கு முன்னர் பார்த்ததே இல்லை. ஆதலால், ஆஃப்டர்-மார்க்கெட் அடாஸின் திறனை வெளிக்காட்டுவதாகவே இந்த சம்பவம் அமைந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 3, 2024, 22:08 [IST]
English summary
After market adas behaved abnormally on indian road check all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X