விவசாயிகளை காக்க ஒன்னு கூடிட்டாங்க.. ராகவா லாரன்ஸை தொடர்ந்து எஸ்ஜே சூர்யாவும் கை கொடுக்க ஆரம்பிச்சுட்டாரு!
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிய 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்தில் இணைந்து நடித்ததைப் போல நடிகர்கள் ராகவா லாரன்ஸ்-ம், எஸ்ஜே சூர்யா-வும் தற்போது இணைந்து விவசாயிகளுக்கு நல்லது செய்யத் தொடங்கி இருக்கின்றனர். இந்த படத்திலும் இவர்கள் இருவரும் இணைந்து ஓர் கிராம மக்களையே காக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே திரையை போலவே நிஜ வாழ்க்கையிலும் இருவரும் இணைந்து மக்கள் நலபணியில் களமிறங்கி இருக்கின்றனர். ஏற்கனவே இந்த பணிகளை நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழைகளுக்கு மிக சிறப்பாக செய்ய தொடங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
அந்தவகையில், அண்மையில் 10 ஏழை விவசாயிகளை தேர்வுச் செய்து அவர்களுக்கு தன்னுடைய சொந்த பணத்தில் புத்தம் புதிய டிராக்டர்களை வாங்கிக் கொடுத்தார். அவர் வாங்கிக் கொடுத்த 10 டிராக்டர்களுமே மஹிந்திரா 575 டிஐ (Mahindra 575 DI) ஆகும். இதனையே ஏழை விவசாயிகளுக்கு சமீபத்தில் இலவசமாக வழங்கினார், நடிகர் ராகவா லாரன்ஸ்.

இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 7 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. முன்னதாக ஏழை மற்றும் மாற்றுத் திறனாளி இளைஞர்களுக்கு இரண்டு சக்கர வாகனங்களை இவர் வாங்கிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தநிலையிலேயே டிராக்டர்களை ஏழை மற்றும் எளிய விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் ராகவா லாரன்ஸ்.
இவரைத் தொடர்ந்து, நடிகர் எஸ்ஜே சூர்யா அவருடைய தற்போது ஏழை விவசாயிக்கு உதவும் நோக்கில் ஓர் டிராக்டரை வாங்கி நடிகர் ராகவா லாரன்ஸிடம் வழங்கி இருக்கின்றார். ராகவா லாரன்ஸின் 'மாற்றம்' திட்டத்தின் வாயிலாகவே இந்த டிராக்டரும் வழங்கப்பட இருக்கின்றது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோருக்கு உதவும் விதமாக தொடங்கப்பட்ட ஓர் அறக்கட்டளையே மாற்றம் ஆகும்.
மேலும், நடிகர் ராகவா லாரன்ஸ்க்கே தெரியாமலேயே இந்த டிராக்டரை எஸ்ஜே சூர்யா அவருடைய வீட்டிற்கு எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகின்றது. செய்தியாளர்களுடனான சந்திப்பில் நடிகரும் இதை உறுதிச் செய்துள்ளார். காலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் வீட்டின் வாசலில் டிராக்டர் நின்றிருக்கின்றது. இதனை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸின் மேனேஜர், சார், "மேலும் டிராக்டரை ஆர்டரை செய்திருக்கின்றீர்களா", நம்முடைய வீட்டு வாசலில் ஓர் டிராக்டர் நிற்கின்றது" என கேட்டிருக்கின்றார்.
அதற்கு பதிலளித்த அவர், "இல்லையே பத்து ஆர்டர் கொடுத்திருந்தோம். அதை எப்போதோ உரிய நபர்களுக்கே கொடுத்து விட்டோம்" என ராகவா கூறி இருக்கின்றார். இந்த நிலையிலேயே வெளியில் வந்து பார்த்தபோது டிராக்டருடன் எஸ்ஜே சூர்யா நின்றிருக்கின்றார். மேலும், அந்த டிராக்டரை தேவைப்படும் நபருக்கு வழங்கும்படி அவர் கூறி இருக்கின்றார்.
ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே இதுபோன்று உதவிகளை தான் வழங்க விரும்புவதாக எஸ்ஜே சூர்யா தன்னிடத்தில் தெரிவித்ததாக ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். இந்த நிலையிலேயே நடிகர் எஸ்ஜே சூர்யாவும் மஹிந்திரா 575 டிஐ மாடல் டிராக்டரையே வாங்கிக் கொடுத்துள்ளார். ஒற்றை யூனிட்டே வாங்கிக் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த டிராக்டர் நிலத்தை ஒழுங்குப்படுத்த, விளைச்சலுக்கு ஏற்றவாறு நிலத்தை தோண்டிவிடுதல் என பல்வேறு முக்கிய பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. 8 விதமான முன்னோக்கி நகர்வதற்கான கியர்களும், இரண்டு விதமான ரிவர்ஸ் செய்வதற்கான கியர்களும் இந்த டிராக்டரில் வழங்கப்பட்டு இருக்கும். எஞ்சினைப் பொருத்த வரை 2,730 சிசி திறன வெளியேற்றும் 4 சிலிண்டர் மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யாவைப் போல ஒட்டுமொத்த நடிகர்களும் ஏழை விவசாயிகளை காக்கும் பணியில் களமிறங்கிவிட்டால், என்றைக்கும் விவசாயம் பொய்க்காது. மேலும், அவர்களின் வருமை நிலையும் மாறும். குறிப்பாக, கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்வது தடுக்கப்படலாம்.


Click it and Unblock the Notifications








