4 மணி நேரம் நடக்கப்போகும் திக் திக் சம்பவங்கள்! சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கியதும் நடக்கப்போவது இது தான்!

சந்திரயான் 3 விண்கலம் இன்று மாலை சரியாக 6:04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தருணத்திற்காக தான் இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இது மிகப்பெரும் உலக சாதனையாக இருக்கும் நிலையில் இப்படியாக நிலவில் தரையிறங்கும் சந்திரயான் 3 விண்கலம் தரை இறங்கியதற்கு பிறகு என்ன செய்யப் போகிறது என்பதை தான் இந்த பதிவில் நாம் விரிவாக காணப்போகிறோம்.

இந்தியாவின் மிகப்பெரிய கனவு திட்டமாக இருப்பது தான் சந்திரயான் நிலவில் சந்திராயன் 1 ஆய்வு செய்ய சென்றபோது நிலவின் தென் துருவப் பகுதியில் தண்ணீர் இருப்பதற்கான சாத்திய கூறுகள் இருப்பதை உறுதி செய்தது. இதையடுத்து உலக நாடுகள் முழுவதும் தற்போது நிலவே ஆய்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு சந்தரயான் 2 விண்கலம் இதற்காக விண்ணில் செலுத்தப்பட்டது.

chandrayaan 3 touchdown

ஆனால் சந்திரயாவ் 2 வெற்றிகரமாக அமையவில்லை அது நிலவில் சென்று மோதி விட்டது. இந்நிலையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் சந்திரயான் 2வில் இருந்த பிழைகள் எல்லாம் நீக்கப்பட்டு சந்திரயான் 3 உருவாக்கப்பட்டது. இந்த சந்திராயன் 3 கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இது ஒவ்வொரு கட்டங்களாக பயணித்து தற்போது நிலவில் தரையிறங்க தயாராகியுள்ளது. இன்று மாலை சரியாக 6:04 மணிக்கு நிலவு தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிகப்பெரிய சவாலான விஷயமாக இருக்கும் நிலையில் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்கு பல்வேறு யுக்திகளை இஸ்ரோ பயன்படுத்தி உள்ளது. இந்நிலையில் இப்படியான விண்கலத்தை வெற்றிகரமாக இஸ்ரோ தரையிறக்குவதை பெரும் சாதனை தான். அப்படியாக நிலவில் தரையிறங்கும் இஸ்ரோவின் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பின்பு என்னென்ன செய்யப் போகிறது என விரிவாக காணலாம்.

chandrayaan 3 touchdown

இதைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன் நாம் விக்ரம் லாண்டர் குறித்து முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இஸ்ரோ தயாரித்துள்ள இந்த விக்ரம் லேண்டர் இரண்டு மீட்டர் உயரம் கொண்ட சுமார் 1700 கிலோ எடை கொண்ட விண்கலமாகும். இது நிலவில் நொடிக்கு மூன்று மீட்டர் என்ற வேகத்தில் விழுந்தாலும் எந்த பிரச்சினையும் ஆகாதபடி வடிவமைத்துள்ளனர். இந்த விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய பின்பு இதன் பரிசோதனைகளை செய்ய துவங்கும்.

விக்ரம் லேண்டர் நிலவில் தொடர்ந்து 14 நாட்கள் செயல்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது .அதாவது நிலவில் விக்ரம் லண்டன் தரையிறங்கும் இடத்தில் இன்று துவக்கி அடுத்த 14 நாட்களுக்கு மட்டுமே வெயில் இருக்கும். அதன் பின்பு இருள் சூழ்ந்து விடும் விக்ரம் லேண்டர் முழுமையாக சூரிய ஒளி சக்தியின் திறனால் இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் சூரிய ஒளி இருக்கும் நேரத்தில் மட்டும்தான் அங்கு அதனால் செயல்பட முடியும்.

chandrayaan 3 touchdown

விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்கிய நான்கு மணி நேரத்திற்கு பிறகு அதன் ஒரு பக்க பேனல் பிரிந்து நிலவில் படும்படி கீழே சரியும். இது லேண்டர் உள்ளே உள்ள பிரக்யான் ரோவர் பத்திரமாக நிலவில் தர இயங்குவதற்கு ஒரு சறுக்கு போன்ற அமைப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். சுமார் நான்கு மணி நேரத்திற்கு பிறகு பிரக்யான் என்ற ரோவர் நிலவில் தரை இறங்கி விடும்.

நிலவில் தரையிறக்கும் போது அது இந்திய தேசிய கொடியையும் இஸ்ரோவின் லோகோவையும் நிலவில் பதிக்கும் வகையில் அதன் வீல்களில் அச்சுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி விக்ரம் லேண்டில் இருந்து வெளியேறும் பிரக்யான் ரோவர் மெது மெதுவாக நிலவில் தன் தடத்தை பதிக்கும் இது ஒரு நொடிக்கு ஒரு சென்டிமீட்டர் என்ற வேகத்தில் நிலவில் பல்வேறு இடங்களுக்கு பயணிக்கும்.

இந்த லேண்டரிலும் ரோவரிலும் பல்வேறு ஆய்வுகளை நடத்த சில அறிவியல் ரீதியான கருவிகளை பொருத்தியுள்ளனர். இது நிலவில் ஆய்வுகளை நடத்தி அங்குள்ள தகவல்களை சேகரித்து இஸ்ரோவிற்கு அனுப்பி வைக்கவும் விஞ்ஞானிகள் நிலவில் உள்ள சில முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்வார்கள். இதில் லேண்டரிலிருந்து வெளியேறும் ரோவர் எப்பொழுதும் லேண்டருடன் இணைப்பிலேயே இருக்கும்.

இந்த பிரக்யான் ரோவர் நிலவில் இறங்கி சில ஆய்வுகளை செய்து அந்த தகவல்களை லேண்டருக்கு அனுப்பும் லேண்டர்தான் இஸ்ரோவிற்கு அந்த தகவல்களை பரிமாற்றம் செய்யும். இப்படியாக இந்த விக்ரம் லேண்டரும் பிரக்கியான் ரோவரும் தரையிறங்கி தனது ஆய்வுகளை செய்து இஸ்ரோவிற்கு அதன் தகவல்களை பரிமாற்றம் செய்யும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இஸ்ரோ இன்று மாலை செய்யப் போவது நிச்சயம் மிகப்பெரிய உலக சாதனை தான். இது இந்தியாவிற்கே உலக அரங்கில் மிகப்பெரிய கௌரவத்தை ஏற்படுத்தி தரப் போகிறது. நிலவின் தென்புறவு பகுதியில் இதுவரை வெற்றிகரமாக எந்த ஒரு விண்கலமும் தரையிறங்கியது கிடையாது கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஷ்யாவின் லூனார் 25 விண்கலமும் இதற்கான முயற்சியில் ஈடுபட்டு தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 23, 2023, 12:08 [IST]
English summary
After the soft landing these are the tasks for the vikram lander rover
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X