சீனா வாலாட்டுனா ஒரே பட்டன் தான் ஒட்டு மொத்த சீனாவும் காலி! அக்னி 5 சோதனை வெற்றி!

இந்திய ராணுவத்திற்காக தயாரிக்கப்பட்ட அக்னி 5 ஏவுகணை மிஷன் திவ்யஸ்ரா சோதனையில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தற்போது அறிவித்துள்ளார். டிஆர்டிஓ நடத்திய இந்த சோதனை என்பது இந்தியாவை ராணுவ பாதுகாப்பில் மிக உச்சபட்ச இடத்திற்கு எடுத்து சென்றுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் உள்ள அணு ஆயுதங்களை ஏந்தி சென்று தாக்குதல் நடத்துவதற்காக ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்திய நாட்டின் பாதுகாப்பிற்காக இந்த ஏவுகணைகள் எல்லாம் பயன்படுத்த தயார் நிலையில் இருக்கிறது. இந்நிலையில் இந்த ஏவுகணைகள் எல்லாம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டு கொண்டே வருகின்றன.

agni 5

தற்போது இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஏவுகணையாக அக்னி 3 என்ற ஏவுகணை இருக்கிறது. இந்த ஏவுகணை தான் கிளம்பும் இடத்திலிருந்து சுமார் 3500 கிலோ மீட்டர் தூரத்திற்கு செட் செய்யப்பட்ட டார்கெட்டை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்தியாவிற்கு தற்போது மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தல் கொடுக்கும் நாடாக இருப்பது சீனா தான்.

எதிர்காலத்தில் போர் என வந்தால் சீனாவுடன் போரிட இந்தியா தற்போதே தயாராக வேண்டும். அதற்காக பல்வேறு ஆயத்த பணிகளை இந்திய ராணுவம் செய்து வருகிறது. தற்போது இருக்கும் அக்னி 3 என்ற ஏவுகணையை வைத்து சீனாவின் வடதுருவத்தில் உள்ள பகுதியையும் கிழக்கு துருவத்தில் உள்ள பகுதியையும் சரியாக குறி வைத்து தாக்குதல் நடத்துவது என்பது முடியாத காரியமாக இருக்கிறது.

இதனால் இந்திய ராணுவம் அக்னி 5 என்ற புதிய ஏவுகணை ஒன்றை தயாரிக்கும் பணியை துவங்கியது. இந்தியாவிற்காக ஆயுதங்களை தயாரித்து தரும் டிஆர்டிஓ என்ற அமைப்புதான் இந்த அக்னி 5 ஏவுகணை தயாரிப்பை முழுமையாக ஏற்று நடத்தியது. இந்நிலையில் இன்று மிஷன் திவ்யாஸ்ரா என்ற பெயரில் இந்த ஏவுகணை சோதனை என்பது நடந்துள்ளது.

இதன்படி அக்னி 5 ஏவுகணை தற்போது தான் கிளம்பிய இடத்திலிருந்து சுமார் 5000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல இந்த ஏவுகணை தான் பயணிக்கும் பாதையில் உள்ள மற்ற சில இலக்குகளையும் தாக்கும் வல்லமை கொண்டது. அதாவது ஒரே ஏவுகணை பல்வேறு விதமான இலக்குகளை குறிவைத்து தாக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணை ஆகும். இந்த ஏவுகணையின் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம் எதுவும் வெளிநாட்டிலிருந்து பெறப்படவில்லை. இது மட்டுமல்ல இந்த ஏவுகணையில் அதிக துல்லியம் கொண்ட சென்சார்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த ஏவுகணை வைக்கப்பட்ட குறியை மிகத் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாக உள்ளது.

அக்னி 5 சோதனை தற்போது வெற்றிகரமாக நிறைவு பெற்ற நிலையில் இந்தியா மல்டிபிள் இண்டிபெண்டன்ஸ் டார்கெட்டபுள் ரி என்ட்ரி வெஹிகிள் தொழில்நுட்பத்தை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. வெகு சில நாடுகளிடம் மட்டுமே இந்தத் தொழில்நுட்பம் என்பது இருக்கிறது. தற்போது இந்தியாவிடமும் இந்த தொழில்நுட்பம் என்பது அதிகாரப்பூர்வமாக இருப்பது உறுதியாகி உள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிடம் மட்டுமே இவ்வாறான ஏவுகணைகள் இருந்தது. தற்போது இந்தியாவிடமும் இந்த ஏவுகணை என்பது இருக்கிறது. இந்த ஏவுகணையை தயாரிக்க இந்தியா ரூபாய் 2500 கோடியை செலவு செய்துள்ளது. தற்போது இந்த ஏவுகணை வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

நாம் முன்னரே சொன்னது படி இந்த ஏவுகணையின் முக்கியமான சிறப்பம்சமே இந்த ஏவுகணை ஏவப்பட்டவுடன் இந்த ஏவுகணைக்குள் இருக்கும் ஒவ்வொரு ஆயுதங்களும் தனித்தனி டார்கெட்களை குறி வைத்து தாக்கக் கூடியதாக இருக்கிறது. இதனால் எதிரிகள் இந்த விஷயத்தை டார்கெட் செய்து இதை ஏவுகணை வருகிறது என்பதை கணிக்க முடியாமல் திணறிப் போவார்கள். இதனால் திட்டமிட்டபடி டார்கெட் நிச்சயம் தாக்கப்படும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ராணுவம் என்பது தற்போது பலம் பொருந்தியதாக மாறி வருகிறது. இந்த பலத்திற்கு அக்னி 5 ஏவுகணை மிக முக்கியமான ஒரு ஆயுதமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. இதை இந்திய ராணுவம் சோதனை செய்து வெற்றி பெற்றுள்ளது நிச்சயம் இந்தியர்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை தருகிறது. தொடர்ந்து இதுபோல இந்திய ராணுவம் மேம்பட நாம் வாழ்த்துவோம்.

More from DriveSpark

Article Published On: Monday, March 11, 2024, 19:15 [IST]
English summary
Agni 5 missile mission divyastra test mirv technology in india
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+