இஸ்ரோவே இந்த ராக்கெட் இன்ஜினை பயன்படுத்தல! கெத்து காட்டிய தனியார் நிறுவனம்!

சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான அக்னிக்குள் காஸ்மோஸ் என்ற நிறுவனம் நேற்று வெற்றிகரமாக தனது அக்னிப்பான் என்ற ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சொந்த லான்ச் பேரில் இருந்து விண்ணில் ஏவியுள்ளது. இந்தியாவில் தனியார் ராக்கெட் ஏவுவது இது இரண்டாவது முறையாகும். இப்படியாக ஏவப்பட்ட இந்த ராக்கெட் என்பது தனித்துவம் வாய்ந்த பல்வேறு அம்சங்கள் கொண்டதாக இருக்கிறது. இஸ்ரோ ஏவும் ராக்கெட்டிற்கும் இந்த ராக்கெட்டிற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கின்றன. இது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காண போகிறோம்.

வெளிநாடுகளில் தனியார் நிறுவனங்கள் ராக்கெட் ஏவுவது என்பது ஒரு சாதாரண விஷயமாக மாறிவிட்டது. முக்கியமாக அமெரிக்காவில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் விண்வெளி ஆய்வுகளை நடத்தி வருகிறது. இதற்காக பல்வேறு விதமான ராக்கெட் ஏபி வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் தற்போது இரண்டாவது முறையாக தனியார் நிறுவனம் ஒன்று விண்ணில் ராக்கெட் ஒன்றை ஏவியுள்ளது.

agnibaan launch

இஸ்ரோவின் அனுமதியுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் சொந்தமாக ஒரு ஏவுதல் மையத்தை அமைத்து அதன் மூலம் இந்த ராக்கெட்டை ஏவியுள்ளது. அக்னிக்குள் காஸ்மோஸ் என்ற நிறுவனம்தான் இந்த ஏவுதளை செய்துள்ளது. இந்த ராக்கெட்டிற்க்கு அக்னிப்பான் என அந்நிறுவனம் பெயரும் வைத்துள்ளது. இஸ்ரோ ஏவும் ராக்கெட்டிற்கும் இந்த ராக்கெட்டிற்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன.

இந்த அக்னிப்பான் ராக்கேட் ஏவுதலைப் பொறுத்தவரை இதற்கு முன்னர் ஐந்து முறை ஏவுகனைகளுக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு ஏவுதளுக்கு ஒரு சில வினாடிகளுக்கு முன்னர் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக நிறுத்தப்பட்டது. ஐந்து முறை நிறுத்தப்பட்ட ராக்கெட் ஆறாவது முறை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு உள்ளது. திட்டமிட்டபடி ராக்கெட் விண்ணில் சென்று அதன் செயல்பாடுகளை முடித்துள்ளது.

agnibaan launch

இந்த அக்னிப்பான் ராக்கெட்டை பொருத்தவரை 300 கிலோ எடை கொண்ட பேலோடு சுமார் பூமியிலிருந்து 700 கிலோ மீட்டர் உயரத்திற்கு எடுத்துச் சென்று அங்கு நிலை நிறுத்தியுள்ளது. இந்த ராக்கெட்டில் செமி கிரையோஜினிக் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் திரவம் மற்றும் காற்று அடிப்படையிலான எரிபொருளை கலந்து பயன்படுத்தி இந்த ராக்கெட்டை செயல்படுத்தி உள்ளது. இப்படியான இன்ஜினை இதுவரை இஸ்ரோ தனது ராக்கெட்டில் பயன்படுத்தியதே கிடையாது.

இந்த இன்ஜினுக்கான எரிபொருளை திரவமாக்கப்பட்ட ஆக்ஸிஜன் மற்றும் விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் பெட்ரோல் எரிபொருள் ஆகிய இரண்டையும் சேர்த்து வைத்து உருவாக்கியுள்ளார்கள். இந்த எரிபொருளை வைத்து தான் இந்த ராக்கெட் இன்ஜின் செயல்படுகிறது. சிங்கிள் ஸ்டேஜ் ராக்கெட் இன்ஜினாக இந்த ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது.

agnibaan launch

இந்த ராக்கெட் இன்ஜின் உலகிலேயே முதன்முறையாக 3டி பிரிண்டிங் மூலம் தயாரிக்கப்பட்ட ராக்கெட் இன்ஜின் ஆகும். இது செமி கிரையோஜினிக் ராக்கெட் இன்ஜினாக செயல்படுத்தப்படுகிறது. உலகில் வேறு எங்கும் இந்த ராக்கெட் இன்ஜினை இதுவரை பயன்படுத்தியது இல்லை. இந்த தனியார் நிறுவனம் தான் தற்போது பயன்படுத்தி வருகிறது. இஸ்ரோவே இந்த ராக்கெட் இன்ஜினை தற்போது சோதனை கட்டத்தில் தான் வைத்துள்ளது.

இந்த ராக்கெட் மொத்தமே இரண்டு நிமிடம் தான் விண்ணில் பயணம் செய்கிறது. இரண்டு நிமிடத்திற்குள் குறிப்பிட்ட எல்லையை தொட்டு இந்த ராக்கெட் இன்ஜின் தேவையான வேலைகளை செய்து முடித்து விடுகிறது. ஒரு நிமிடம் 29 நொடியில் தேவையான உயரத்தை அடைந்து, பின்னர் இலக்கை நோக்கி நகர்ந்து இரண்டு நிமிடத்திற்குள் ஒட்டுமொத்த வேலையையும் இந்த ராக்கெட் முடித்து விட்டது.

தற்போது அக்னிக்குள் நிறுவனம் இந்த ராக்கெட்டை இஸ்ரோவின் துணைவியுடன் விண்ணில் செலுத்தி மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது என்று சொல்லலாம். பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு இந்த ராக்கெட் ஏவுதல் என்பது வெற்றிகரமாக நடந்துள்ளது. இதில் இஸ்ரோவின் பங்கும் ஒரு முக்கிய பங்காக இருக்கிறது. இது போன்று இனி இஸ்ரோ தனியார் நிறுவனங்கள் ராக்கெட் அனுப்புவதற்கும் விண்வெளியில் சேட்டிலைட்டை அனுப்புவதற்கும், மிகப்பெரிய உதவியை செய்ய திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தனியார் ராக்கெட் என்பது இந்தியாவில் மிகப் பெரிய புரட்சியை செய்யப்போகிறது. ஏற்கனவே அமெரிக்காவில் தனியார் நிறுவனங்கள் விண்வெளி ஆய்வில் மிகப்பெரிய புரட்சியை செய்துள்ள நிலையில், இந்தியாவிலும் தனியார் நிறுவனங்கள் விண்வெளி தொடர்பான சேவைகளை செய்யும் பட்சத்தில் இந்தியாவில் தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, May 31, 2024, 12:35 [IST]
English summary
Agnibaan launch agnikul cosmos made 3d rocket engine
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X