வீடியோவில் இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? இது நடுவானில் ஆக்டிவேட் ஆகியிருக்குது! விமானி சொன்ன அதிர்ச்சி தகவல்!
ஆமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லவிருந்த விமானம் டேக் ஆஃப் சில நொடிகளில் சரியாக டேக் ஆஃப் ஆகாமல் கீழே விழுந்து வெடித்து சிதறியது இந்த விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இந்த விபத்திற்கான காரணம் குறித்து தற்போது விமானத்தில் கருப்பு பெட்டியை கைபற்றி அதில் உள்ள தரவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் விமானத்தின் கோ-பைலட் செய்த தவறு தான் விமான விபத்திற்கு காரணமாக இருகு்கும் என கமர்ஷியல் விமான பைலட் ஒருவர் யூடியூபில் பேசியுள்ளது பரபரப்பாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கடந்த 12ம் தேதி ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏஐ 171 விமானம் ஆமதாபாத்தில் விபத்தில் சிக்கியது. இதில் பலர் பலியான நிலையில் இந்த விமானம் எப்படி விபத்தில் சிக்கியது என்பதற்கான காரணத்தை தற்போது அதன் கருப்பு பெட்டியை கைபற்றி விசாரணை நடந்து வரும் நிலையில் இந்த விமான விபத்து குறித்து விமானி ஒருவர் யூடியூபில் பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.அதில் இவர் சொன்ன விஷயம் பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கமர்ஷியல் விமானத்தை இயக்கும் விமானியான கேப்டன் ஸ்டீவ் யூடியூபில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் இவர் விமானம் விபத்திற்குள்ளானது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதை அவர் இப்படி தான் விமான விபத்து நடந்திருக்கும் என தான் அனுமானிப்பதாக தெரிவித்துள்ளார்.
அவரது கருத்துப்படி இந்த விமானம் விபத்திற்குள்ளாவதற்கு முன்பு சுமார் 600 அடி உயரத்தில் அதிகபட்சம் பறந்தது. இந்த உயரம் என்பது விமானம் டேக் ஆஃப் ஆன பிறகு விமானிகள் லேண்டிங் கியரை மேலே ஏற்றும் உயரம் ஆகும். அதனால் இந்த விமானம் குறிப்பிட்ட உயரத்தை தொட்டதும். விமானி, கோ-பைலட்டிற்கு விமானத்தின் லேண்டிங் கியரை மேலே ஏற்ற அறிவுறுத்தியிருப்பார் என்றும் ஆனால் கோ-பைலட் தவறுதலாக விமானத்தின் இறக்கை பகுதியில் உள்ள ஃபிளாப் எனப்படும் விமானத்தை தரையிறக்குவதற்கான கியரை போட்டிருக்கலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்த விபத்து குறித்த அடுத்த வீடியோ வெளியான போது அவர் தனது கருத்தை மாற்றிக்கொண்டார். அந்த வீடியோவில் விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பு விமானத்தின் RAT (Ram Air Turbine) கருவி ஆக்டிவேட் செய்யப்பட்டதாகவும் அது அந்த வீடியோவில் தெளிவாக தெரிவதாகவும் கூறியுள்ளார். இந்த கருவி 3 காரணங்களுக்கான ஆக்டிவேட் செய்யப்படும் இந்தகருவியை ஆக்டிவேட் செய்ய விமானிகளால் முடியும். விமானிகள் செய்ய வில்லை என்றால் குறிப்பிட்ட சிக்னலுக்கு ஏற்ப ஆட்டோமெட்டிக்காக கூட இது ஆக்டிவேட் ஆகலாம்.
இந்த கருவி முழுமையான எலெக்ட்ரிக்கல் ஃபெயிலியர், ஹைட்ராலிக் ஃபிபெயிலியர், டுயல் இன்ஜின் ஃபெயிலியர் ஆகிய காரணங்களுக்காக ஆக்டிவேட் ஆக வாய்ப்பு இருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த வீடியோவில் இது கிளியராக தெரியவிட்டாலும் இதில் உள்ள ஆடியோவில் இது ஆக்டிவேட் செய்யப்பட்டு செயல்படுவது மிக தெளிவாக கேட்பதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் இதில் எலெக்ட்ரிக் ஃபெயிலியர் அல்லது ஹைட்ராலிக் ஃபெயிலியர் காரணமாக இந்த Ram Air Turbine (RAT) ஆக்டிவேட் செய்யப்பட்டிருந்தால் விமானம் விபத்தில் சிக்க வாய்ப்பில்லை தொடர்ந்து பறந்திருக்கும். ஆனால் விமானம் பறக்க முடியாமல் விபத்தில் சிக்கியிருப்பதால் இரண்டு இன்ஜின்களும் ஒரே நேரத்தில் ஃபெயிலியராகி இருக்கும் என இவர் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்தையும் விமானம் விபத்தில் சிக்கிய சம்பவம் குறித்து வெளியான வீடியோ காட்சிகளை பார்க்கும் போது இது நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று தான் தோன்றுகிறது. இதை பற்றி விரிவான பார்க்க வேண்டும் என்றால் லேண்டிங் கியர் மற்றும் ஃபிளாப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும் அப்பொழுது தான் இந்த கருத்தை நாம் ஆழமாக புரிந்து கொள்ள முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்டீவ் சொன்ன கருத்து மற்றும் விமான விபத்து குறித்து வெளியான வீடியோவை வைத்து பார்க்கும் போது இது சரியாக இருக்கும் என்று தான் தெரிகிறது. ஆனால் உண்மையை நாம் கருப்பு பெட்டி தரவுகள் மூலம் கிடைக்கும் தகவலை வைத்து தான் உண்மையை கண்டறிய முடியும். இந்த விமானம் விபத்திற்குள்ளானது துரதிருஷ்ட வசமானது. இதற்கான காரணத்தை நாம் சரியாக கண்டறிய வேண்டும் இரண்டு இன்ஜினும் ஒரே நேரத்தில் எப்படி ஃபெயிலிராகும் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்


Click it and Unblock the Notifications









