அகமதாபாத் விமான விபத்தில் இதில் எந்த தவறுமே நடக்கல! விமானிக்கு இது தெரியாமல் போக வாய்ப்பே இல்ல!
குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்றுள்ள விமான விபத்து இந்தியா மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. 850 அடி உயரத்தில் மிகவும் தாழ்வாக பறந்துக் கொண்டிருந்த விமானம் எவ்வாறு தரையில் விழுந்து அடுத்த சில வினாடிகளிலேயே வெடித்து சிதறியது என்பதை காட்டும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி இந்த விமான விபத்தின் பயங்கரத்தை மக்களுக்கு கடத்தியுள்ளன. இந்த விமான விபத்துக்கு காரணம் என்ன என்பதையும், விமான விபத்துகள் பெரும்பாலும் எந்தெந்த காரணங்களினால் நடக்கின்றன என்பதை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
புவியீர்ப்பு விசையையே ஏமாற்றி அந்தரத்தில் பறக்கக்கூடியதாக இருந்தாலும், போக்குவரத்துகளிலேயே பாதுகாப்பானதாக விமான போக்குவரத்து கருதப்படுகிறது. இரயில் போக்குவரத்து கூட இதற்கு அடுத்துதான் வருகிறது. அந்த அளவிற்கு மிகவும் அரிதாக நடக்கக்கூடிய விமான விபத்துகளில் உலகளவில் இதுவரையில் சில ஆயிரம் பேர் மட்டுமே உயிரிழந்திருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, இந்தியாவில் சில மாதங்களில் சாலை விபத்துகளில் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளின் எண்ணிக்கைக்கு இணையானது இதுவரையில் உலகளவில் விமான விபத்துகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆகும். விமான விபத்துகள் மிகவும் பயங்கரமானதாகவும், அதிக தீப்பிழம்புடன் ஏற்படுவதினாலேயே மிகவும் அரிதாக நடப்பினும் விமான விபத்துகள் எப்போதும் மக்களின் மனதில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்திவிடுகிறது.
ஆய்வுகளின்படி பார்க்கும்போது, பெரும்பாலான விமான விபத்துகளுக்கு விமானி அல்லது துணை விமானியின் கவனக்குறைவே 50% காரணமாக உள்ளது. விமானத்தை ரன்வே-இல் இயக்குவதற்கு முன்னர் பல கட்ட சரிப்பார்ப்புகளை விமானிகள் செய்ய வேண்டும். அவ்வாறு சரிபார்ப்பின்போது ஏதேனும் ஒன்றை கவன குறைவாக விடும்போது அது விபத்துக்கு காரணமாக அமைகிறது. சில நேரங்களில் எல்லாம் சரியாக இருந்தாலும், பயணத்தின்போது ஏற்படும் தொழிற்நுட்ப பிரச்சனைகள் விமான விபத்துக்கு காரணமாக அமைகின்றன.

இவ்வாறான பழுதுகள் நடுவழியில் ஏற்படாமல் இருக்க, உலகின் பல்வேறு கால சூழலை எதிர்கொள்ளும் விமானங்களை அவ்வப்போது பராமரிப்பது அவசியமாகும். தற்போது, அகமதாபாத்- இலண்டன் ஏர் இந்தியா (Air India) விமானம் விபத்தில் சிக்கியதற்கு கூட விமானம் சரிவர பராமரிக்கப்படவில்லை என்பதுதான் காரணம் என பரவலாக ஒரு பேச்சு உள்ளது.
விமான போக்குவரத்து ஆனது இரு வகைப்படுகிறது. கமர்ஷியல் மற்றும் ஜெனரல் என்பன அவை ஆகும். இதில், கமர்ஷியல் விமான போக்குவரத்து ஆனது பொது மக்களின் பயன்பாட்டிற்காக பெரிய பெரிய விமானங்களில் மேற்கொள்ளப்படுவது ஆகும். ஒவ்வொரு நாளும் என்னென்ன கமர்ஷியல் விமானங்கள் புறப்பட உள்ளன என்பதை முந்தைய நாளிலேயே அட்டவணை போட்டுவிடுவர். அதுவே, ஜெனரல் விமான போக்குவரத்து ஆனது சிறிய அளவிலான தனியார் விமானங்களில் மேற்கொள்ளப்படுவது ஆகும்.
கமர்ஷியல் விமான போக்குவரத்து தான் உலகம் முழுவதும் அதிகமாக பயன்பாட்டில் உள்ளது மற்றும் பெரிய அளவிலான விமானங்கள் உடன் இயங்குகிறது என்றாலும், கமர்ஷியல் விமான போக்குவரத்தை காட்டிலும் ஜெனரல் விமான போக்குவரத்தில்தான் இதுவரையில் அதிக விபத்துகள் பதிவாகி உள்ளன என்பது ஆச்சிரியமான விஷயம் ஆகும். இதற்கு காரணம், ஏற்கனவே கூறியதுபோல் மனித தவறுகள் ஆகும்.

கமர்ஷியல் விமானம் என வரும்போது விமானிகள் இன்னும் விழிப்புடன் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போது அகமதாபாத்தில் விபத்தில் சிக்கி இருப்பது, கமர்ஷியல் விமானம் ஆகும். விமானிகளை போன்று, பாதுகாப்பான விமான பயணத்திற்கு விமான பணியாளர்களும் முக்கியமான பங்களிக்கின்றனர். விமானிகள் அளவிற்கு முக்கியமான சரிப்பார்ப்புகளை விமான பணியாளர்கள் மேற்கொள்வது இல்லை என்றாலும், சில நேரங்களில் விமான பணியாளர்களின் கவன குறைவினாலும் விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
இவற்றிற்கு அடுத்து, விமான விபத்துகளுக்கு பரவலாக காரணமாக இருப்பது வான்வெளி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் குழுவின் அஜாக்கிரதை ஆகும். அதேபோல், மோசமான வானிலை, பறவைகளின் குறுக்கீடு, விமானத்தின் டிசைனில் குறைப்பாடு, முறையாக விமான பராமரிக்கப்படாதது மற்றும் விமானத்திற்கு வழிக்காட்டும் & ஆட்டோ பைலட் வசதியை வழங்கும் ஜிபிஎஸ் (GPS)-இல் பிரச்சனை உள்ளிட்டவையும் விமான விபத்துக்கு காரணமாக அமைகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமான விபத்துக்கு இத்தனை விஷயங்கள் காரணமாக அமையலாம் என்றாலும், அகமதாபாத்தில் தற்போது நடந்துள்ள விபத்துக்கு என்ன காரணம் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. இதற்கு, 'கருப்பு பெட்டி' எனப்படும் விமானத்தின் செயல்பாடுகளை குறித்து வைக்கும் தரவுகள் அடங்கிய பெட்டி கிடைத்தால்தான் விபத்துக்கான காரணம் தெரியவரும். விமானத்தை முறையாக பராமரிக்காததுதான் விபத்துக்கு காரணம் என ஒருபக்கம் கூறப்பட்டுவரும் நிலையில், பறவைகள் மோதியதால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (DGCA) தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications









