நாட்டையே உலுக்கிய சம்பவம்... பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற ரிக்ஸா டிரைவர்... ஏன் தெரியுமா?

ரிக்ஸா டிரைவர் ஒருவர் பினாயில் குடித்து தற்கொலை முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நாட்டையே உலுக்கிய சம்பவம்... பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற ரிக்ஸா டிரைவர்... ஏன் தெரியுமா?

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டம் வாகன ஓட்டிகளை பாடாய்படுத்தி வருகிறது. கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அமலுக்கு வந்துள்ளது. இதில் போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.

நாட்டையே உலுக்கிய சம்பவம்... பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற ரிக்ஸா டிரைவர்... ஏன் தெரியுமா?

எனவே போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் கெடுபிடி காட்டி வருகின்றனர். அபராத தொகைகள் மிகவும் கடுமையாக உள்ளதால், அதனை செலுத்த பயந்து கொண்டு வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பார்கள் என மத்திய அரசு நம்புகிறது. எனவே இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறையும் என்பது மத்திய அரசின் திட்டம்.

நாட்டையே உலுக்கிய சம்பவம்... பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற ரிக்ஸா டிரைவர்... ஏன் தெரியுமா?

ஆனால் கடுமையான அபராத தொகைகளால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவார்கள் என ஒரு சில மாநில அரசுகள் கூறியுள்ளன. எனவே அந்த மாநிலங்களில் எல்லாம் போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் குறைக்கப்பட்டுள்ளன. இது ஒரு புறம் இருக்க மறுபுறம் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் தொடர்ந்து கடுமையான அபராதங்களை விதித்து வருகின்றனர்.

நாட்டையே உலுக்கிய சம்பவம்... பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற ரிக்ஸா டிரைவர்... ஏன் தெரியுமா?

சில சமயங்களில் அபராத தொகை லட்சக்கணக்கில் செல்கிறது. இது தொடர்பான செய்திகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டே இருக்கின்றன. இந்த சூழலில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் ரிக்ஸா டிரைவர் ஒருவருக்கு போலீசார் கடுமையான அபராதத்தை விதித்தனர். அவருக்கு 18 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

நாட்டையே உலுக்கிய சம்பவம்... பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற ரிக்ஸா டிரைவர்... ஏன் தெரியுமா?

ராஜூ சோலங்கி என்ற ரிக்ஸா டிரைவருக்குதான் போலீசார் இந்த கடுமையான அபராதத்தை விதித்தனர். ராஜூ சோலங்கி பி.காம் படித்துள்ளார். ஆனால் சரியான வேலை கிடைக்காத காரணத்தால், அவர் ரிக்ஸா ஓட்ட தொடங்கினார். இப்படிப்பட்ட சூழலில்தான் அவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். ஆனால் அவரது குடும்ப சூழலோ வறுமையில் வாடி வருகிறது.

நாட்டையே உலுக்கிய சம்பவம்... பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற ரிக்ஸா டிரைவர்... ஏன் தெரியுமா?

எனவே 18 ஆயிரம் ரூபாய் அபராதம் என்றதும் ராஜூ சோலங்கி அதிர்ச்சியடைந்து விட்டார். போதாக்குறைக்கு அபராத தொகையை செலுத்த தவறியதால், ராஜூ சோலங்கியின் ரிக்ஸா பறிமுதலும் செய்யப்பட்டு விட்டது. எனவே தனது வாழ்க்கையை முடித்து கொள்ளும் விபரீத முடிவை ராஜூ சோலங்கி எடுத்து விட்டார்.

நாட்டையே உலுக்கிய சம்பவம்... பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற ரிக்ஸா டிரைவர்... ஏன் தெரியுமா?

அவர் பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். ''எனது ரிக்ஸா பறிமுதல் செய்யப்பட்டு விட்டதால் என்னால் வேலைக்கு செல்ல முடியவில்லை'' என ராஜூ சோலங்கி தெரிவித்துள்ளார்.

நாட்டையே உலுக்கிய சம்பவம்... பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற ரிக்ஸா டிரைவர்... ஏன் தெரியுமா?

இதன் காரணமாக ஏற்பட்ட விரக்தியால்தான் அவர் தற்கொலை முயற்சியை கையில் எடுத்துள்ளார். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பாக கடும் அபராத தொகைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வாகன ஓட்டி ஒருவர் தனது பைக்கை நடுரோட்டிலேயே தீ வைத்து கொளுத்தியது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, September 30, 2019, 13:21 [IST]
English summary
Ahmedabad Rickshaw Driver Tries Committing Suicide After He Was Challaned For Rs 18,000. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+