நடுரோட்டில் இளைஞர் செய்த காரியம்!! அகமதாபாத் போலீஸுக்கு குவியும் பாராட்டுகள் - வைரல் வீடியோ!

நடு ரோட்டில் சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரில் சாகசம் காட்டிய இளைஞரை போலீஸார் அதிரடியாக கைது செய்து, ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்துள்ளனர். எங்கு இவ்வாறான ஓர் சம்பவம் நடந்துள்ளது? போலீஸாரிடம் எவ்வாறு இந்த இளைஞர் சிக்கினார்? என்பதை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

சாலை போக்குவரத்தை பாதுகாப்பானதாக வைத்திருக்க போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளையும், அபராதங்களையும் நாள்தோறும் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் புதிய பிரச்சனைகள் உருவாக்கி கொண்டுதான் இருக்கின்றனர். குறிப்பாக, இன்றைய கால இளம் தலைமுறையினரின் இண்டர்நெட் மோகம் போலீஸாருக்கு பெரிய தலைவலியாக மாறிவருகிறது.

ahmedabad youth performed stunts on scooter

சமூக வலைத்தளங்களில் லைக்ஸையும், கமெண்ட்ஸையும் பெறுவதற்காக எந்தவொரு எல்லைக்கும் செல்ல சில இளைஞர்கள் தயாராக உள்ளனர். இதை ஏன் நான் இப்போது கூறுகிறேன் என்றால், குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் நடுரோட்டில் தனது சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரில் சாகசம் காட்டியுள்ளார். அகமதாபாத் நகரின் பரபரப்பான சிந்து பவான் சாலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தியாவில் தற்சமயம் வேகமாக வளர்ச்சிக் கண்டுவரும் நகரங்களுள் ஒன்றாக குஜராத்தின் அகமதாபாத்தை சொல்லலாம். இத்தகைய நகரத்தின் பரபரப்பான சாலையில் வாகனங்கள் எந்த அளவிற்கு அதிக எண்ணிக்கையில் இருக்கும் என்பதை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். அத்தகைய சாலையில் இளைஞர் ஒருவர், இயங்கி கொண்டிருந்த தனது ஸ்கூட்டரின் மீது நின்றவாறு பயணம் செய்துள்ளார்.

அதாவது, சாலையில் ஸ்கூட்டரை ஓட்டி கொண்டிருந்த அந்த நபர் திடீரென ஸ்கூட்டரின் மீது ஏறி நின்று பயணம் செய்துள்ளார். பார்ப்போரை பதற வைக்கும் இந்த சம்பவத்தை வேறொரு வாகனத்தில் வந்தவர்கள் தங்களது மொபைல் போனில் காட்சிப்படுத்தி இணையத்தில் பதிவிட அது தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவில், இவ்வாறு ஆபத்தான முறையில் சாலையில் இயக்கப்பட்ட ஸ்கூட்டர் முன்னால் சென்ற கார் மீது மோத வேண்டியது.

அந்த நேரத்தில் சரியாக ஹேண்டில்பாரை பிடித்தப்படி மீண்டும் இருக்கைக்கு வந்து ஸ்கூட்டரை அந்த இளைஞர் வேறு பக்கம் கொண்டு சென்றுவிட்டார். இந்த வீடியோவை சம்மந்தப்பட்ட அகமதாபாத் போலீஸாரும் கண்டுள்ளனர். பின்னர் ஸ்கூட்டரின் பதிவெண்ணை வைத்து உரிமையாளரை கண்டுப்பிடித்து இந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ahmedabad youth performed stunts on scooter

பயணத்தின்போது இந்த இளைஞர் ஹெல்மெட் கூட அணிந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கெல்லாம் சேர்ந்து இந்த நபருக்கு தண்டனைகளும் அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளன. இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலே நமக்கு கிடைத்துள்ள தவிர்த்து, அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை விபரங்கள் தெரியவரவில்லை. நிச்சயமாக பெரிய தொகையில் அபராதமும் விதிக்கப்பட்டு இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்திய சாலைகள் எந்த அளவிற்கு பாதுகாப்பற்றது என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த சாட்சி தேவையில்லை. ஆதலால் எந்தவொரு வாகனத்தை ஓட்டினாலும் சரி முன்னெச்சரிக்கை உடன் இருத்தல் அவசியம். நடுரோட்டில் இவ்வாறான செயல்களில் ஈடுப்படும் இவ்வாறான நபர்களுக்கு எத்தகைய தண்டனைகளை வழங்கலாம் என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 28, 2023, 16:42 [IST]
English summary
Ahmedabad youth performed stunts on suzuki access scooter
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+