ஃபாஸ்ட்டேக் கார்டே இனி வேணாம்! டோல்கேட்களை சூழப்போகும் ஏஐ டெக்னாலஜி!
இந்தியாவில் 2026ம் ஆண்டு இறுதிக்குள் சங்கசாவடிகள் எல்லாம் ஏஐ மூலம் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்படும் என மத்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இவர் தெரிவித்துள்ள கருத்து தற்போது பேசுபொருளாகியுள்ளது.இந்த ஏஐ டோல்கேட் என்றால் என்ன? தற்போது உள்ள டோல்கேட்டிற்கும் ஏஐ டோல்கேட்டிற்கும் என்ன வித்தியாசம்? விரிவாக காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகன ஒட்டிகள் கட்டாயம் சுங்க கட்டணம் செலுத்தியாக வேண்டும். இதற்காக ஆங்காங்க சுங்கசாவடிகளை அமைத்து சுங்க கட்டணத்தை வசூலித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சுங்கசாவடிகளை இனி ஏஐ மூலம் இயங்கும் சுங்கசாவடிகளாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்த பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது எழுப்பபட்ட கேள்விகளுக்கு மத்திய தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின்கட்கரி பதிலளித்தார். அப்பொழுது டோல்கேட்டில் வரப்போகும் அடுத்த தொழிற்நுட்பம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் இந்தியாவில் ஏஐ முறையில் இயங்கும் சுங்கசாவடி தான் அடுத்து வரப்போகும் மாற்றம் எனவும் இது 2026ம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து சுங்கசாவடிகளிலும் வந்துவிடும் என தெரிவித்துள்ளார்.
இந்த ஏஐ மூலம் இயங்கும் சுங்கசாவடி என்பது ஆங்கிலத்தில் MLFF என அழைக்கப்படுகிறது. டோல்கேட் போடப்பட்ட புதிதில் சுங்கசாவடியில் நேரடியாக பணம் செலுத்த வேண்டும் இதற்கு ஒரு வாகனத்தறி்கு 3-10 நிமிடங்கள் வரை நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்பின்னர் ஃபாஸ்ட்டேக் கார்டு வந்துவிட்டது. இது பணம் செலுத்தும் நேரத்தை வெறும் 60 நொடிகளுக்கும் சுருக்கியது. இந்நிலையில் இந்த MLFF முறையில் வாகனங்கள் சுங்கசாவடிகளை கடந்து செல்ல ஃபாஸ்ட்டேக் கார்டு அவசியம் இல்லை.
வாகனங்கள் சுங்கசாவடிகளை அதிகபட்சம் 80 கி.மீ வேகத்தில் கூட கடந்து செல்ல முடியும். இப்படியாக செல்லும் போது அங்கு பொருத்தப்பட்டுள்ள நம்பர் பிளேட் ரீடிங் கேமரா வாகனத்தின் பதிவெண்ணை அறிந்து அதற்கு சுங்ககட்டணத்தை நேரடியாக வங்கி கணக்கிலிருந்து கழித்துக்கொள்ளும். இந்த திட்டம் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டது. தற்போது சோதனை முயற்சியாக சில இடங்களில் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.இது 2026ம் ஆண்டு நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியாக இந்தியாவில் இந்த முறை அமலுக்கு வந்துவிட்டால் வாகனங்கள் தற்போது சுங்கசாவடியில் காத்திருக்கும் நேரம் வெகுவாக குறையும். அதனால் ஆண்டிற்கு ரூ1500 கோடி மதிப்பிலான எரிபொருள் மிச்சமாகும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொழிற்நுட்பத்தால் ரூ6,000 கோடி அரசுக்கு செலவு மிச்சமாகும் எனவும் தெரிவிக்கப்ப்டடுள்ளது.
இந்த தொழிற்நுட்பம் இந்தியாவில் பெரிய அளவில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழிற்நுட்பம் குறித்து எழுப்பபட்ட பல கேள்விகள் மாநில நெடுஞ்சாலைகள் குறித்தது. இது குறித்து தன்னிடம் பதில் இல்லை என அமைச்சர் கூறனார். மேலும் எதிர்காலத்தில் இன்னும் அதிக தொழிற்நுட்பத்தை புகுத்த அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். இதில் சுங்க கட்டணத்தை குறைக்கும் திட்டமும் அடங்கும் எனதெரிவித்திருந்தார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சுங்கசாவடியில் காத்திருந்து பலருக்கு பொறுமை இழந்துள்ளது.இதனால் அரசு பல யுக்திகளை கையாண்டது. ஆனால் இதில் பெரிய பலன் இல்லை. இந்நிலையில் இந்த ஏஐ தொழிற்நுட்பம் இதில் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









