இளம் ஜோடியின் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகுது!! யார் எடுத்த படம் தெரியுமா இது?

கேரள மாநில அரசாங்கம் செயற்கை நுண்ணறிவு கொண்ட ஏஐ கேமராக்களை மாநிலம் முழுவதும் பொருத்துவதில் தீவிரமாக உள்ளது. இந்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் கேரளாவின் பல்வேறு பகுதிகளில், சாலைகளில் கிட்டத்தட்ட 726 ஏஐ கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஆனால், இதன் பிறகு கேரளாவில் ஏஐ கேமராக்கள் குறித்த செய்திகளை தினந்தோறும் பார்க்க முடிகிறது.

இந்த செய்திகள் பெரும்பாலும் ஏஐ கேமராவுக்கு எதிரானதாகவே இருக்கின்றன. அதாவது, சாலை விதிமுறைகளை மீறுவோருக்கு கேரள அரசாங்கம் ஏஐ கேமராக்களின் உதவியுடன் ஆட்டோமேட்டிக்காக அபராதங்களை விதிக்கும் முறையை பின்பற்றுவதாக கூறப்படுகிறது. இது சில சமயங்களில் தவறானதாக முடிவதாக சமுக ஆர்வலர்கள் இந்த விஷயத்தில் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர்.

AI Camera Captured Romantic Photo

ஏனெனில், ஏஐ கேமரா ஓர் மிஷின் ஆகும். அது தனக்கு வரையறுத்தாற் போன்றே செயல்படும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படாது. இதனால், சரியாக ஆராயாமல் தனக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கேரளாவில் பலர் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர். அதேநேரம், கேரளாவில் ஏஐ கேமராக்களினால் சில பல சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

அத்தகைய ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். இளம் ஜோடி ஒன்று மோட்டார்சைக்கிளில் இரவு நேரத்தில் சென்றுக் கொண்டிருந்துள்ளனர். சரியாக ஒரு ஏஐ கேமராவை அவர்கள் கடக்கும்போது, அந்த கேமரா அவர்களின் அழகான போஸை அப்படியே படம்பிடித்துள்ளது. அந்த புகைப்படத்தை சம்மந்தப்பட்ட நபர் இணையத்தில் வெளியிட, அதனை பலரும் விருப்பத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

ஆண், பெண் பைக்கில் செல்லும் ஓர் சாதாரண புகைப்படம் தானே இது, இதில் என்ன உள்ளது? என கேட்பதற்கு முன் இங்கே பதிவிடப்பட்டுள்ள அந்த படத்தை ஒருமுறை பார்த்துவிடுங்கள். திட்டமிட்டு, ஆசையாக பார்ப்பதுபோல் முகத்தை வைத்துக் கொண்டு புகைப்படம் எடுத்தால் கூட இந்த அளவிற்கு அருமையானதாக வந்திருக்குமா என்பது தெரியவில்லை. அந்த அளவிற்கு சூப்பராக, கேஷுவல் புகைப்படமாக இது உள்ளது.

கேஷுவல், இதுதான் இந்த புகைப்படத்தின் பிரபலத்திற்கு முக்கிய காரணம். பைக்கில் இருவரும் எப்போதும்போல் எதர்ச்சையாக பயணம் செய்யும்போது ஏஐ கேமரா படம் பிடித்துள்ளது. பைக்கை ஓட்டும் ஆண் நபர் ஹெல்மெட் அணிந்திருக்க, அவரை கட்டியணைத்தப்படி அவரது துணைவியார் பின்னால் அமர்ந்து பயணித்துள்ளார். அப்போது அந்த பெண் பயணியின் முகத்தில் ஓர் சின்ன புன்முறுவல் இருப்பது, இந்த படத்திற்கு மேலும் அழகூட்டியுள்ளது.

AI Camera Captured Romantic Photo

பைக்கை ஓட்டும் பிராந்தன்மர் தனது மெயிலுக்கு வந்த இந்த புகைப்படத்தை கண்டு ஆச்சிரியமடைந்தது மட்டுமின்றி, இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டுள்ளார். இந்த இன்ஸ்டாகிராம் பதிவில், "நான் ரூ.500 அபராதம் கட்டினாலும் பரவாயில்லை. ஏஐ கேமரா இந்த படத்தை வண்ண நிறங்களில் வழங்கினால், அதனை நான் எனது திருமண நிகழ்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்வேன்" என பிராந்தன்மர் குறிப்பிட்டுள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பைக்கின் பின்னால் அமர்ந்து பயணித்த பெண் ஹெல்மெட் அணியாமல் இருந்ததன் காரணமாகவே, பிராந்தன்மருக்கு அபராத செல்லான் சென்றுள்ளது. ரூ.500 அபராதம் அவரை சற்று கவலைக்கு உள்ளாக்கினாலும், அதனை காட்டிலும் சிறப்பான பரிசு ஒன்று அவருக்கு கிடைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 12, 2023, 20:10 [IST]
English summary
Ai camera captured couple on bike romantic photo
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+