எதிரிக்கு கூட இப்படி நடக்கக் கூடாது!! ஏஐ கேமராவினால் ஒவ்வொண்ணா வெளிவரும் இரகசியங்கள்!
பெண்ணுடன் பைக்கில் சென்றதை படம்பிடித்து தனது அம்மாவிடம் அளித்ததற்காக ஏஐ கேமராவுக்கு இளைஞர் ஒருவர் நன்றி தெரிவித்துள்ளார். நியாயமாக பார்த்தால், ஏஐ கேமரா மீது கோபப்படதானே செய்ய வேண்டும், இவர் என்ன நன்றி கூறுகிறார்?
மனிதர்களின் உலகம் போய், ரோபோக்களின் உலகம் உருவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது போன்றே தோன்றுகிறது. பயன்படுத்தி வந்த இரு ரோபோக்கள் தங்களது சொந்த மொழியில் தன்னிச்சையாக உரையாடல் செய்ய துவங்கியதை அடுத்து ஃபேஸ்புக் நிறுவனம் அந்த ரோபோக்களை செயலிழக்க செய்துள்ளதாக பரவிவரும் செய்தி அதற்கு ஓர் சாட்சி ஆகும்.

ஒரு காலத்தில் நமது அன்றாட வேலைகள் அனைத்தையும் ரோபோக்கள் மற்றும் இயந்திரங்களின் உதவியுடன் செய்வோம் என பல அறிஞர்கள் யூகித்து உள்ளனர். அந்த காலம் எப்போதுவரும் என்பது தெரியவில்லை. ஆனால், ஏஐ கேமராக்களின் பயன்பாடு இப்போதே அதிகரித்துவிட்டது. தற்போதைக்கு, ஏஐ கேமராக்களை அதிகளவில் சாலை போக்குவரத்தை ஒழுங்கு செய்வதற்கும், போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கவும் அதிகளவில் பயன்படுத்துகிறோம்.
ஏஐ கேமராக்கள் என்பவை செயற்கை நுண்ணறிவுடன் செயல்படக்கூடிய கேமராக்கள் ஆகும். ஆனால், இவையும் மனிதனால் கண்டுப்பிடிக்கப்பட்ட தொழிற்நுட்பமே. ஆதலால், சூழலுக்கு ஏற்ப செயல்பட அதற்கு தெரியாது. எவ்வாறு புரோகிராம் செய்யப்பட்டுள்ளதோ அவ்வாறே அது செயல்படும். ஏஐ கேமராக்களின் இத்தகைய செயல்பாடுகள் சில முறை சர்ச்சைகளிலும், தவறுகளிலும் சென்று முடிகின்றன.
அதேநேரம், சிலமுறை ஏஐ கேமராக்களால் சுவாரஸ்யமான நிகழ்வுகளும் நடந்துள்ளன. சில வாரங்களுக்கு முன்பு கேரளாவில், ஹெல்மெட் அணியாத காரணத்தினால் பைக்கில் சென்ற இளம் காதல் ஜோடியை படம் பிடித்து, பைக் உரிமையாளருக்கு அனுப்பியது. பைக் உரிமையாளரும் அந்த காதல் ஜோடியில் ஒருவர்தான். சிறப்பாக எடுக்கப்பட்டிருந்த அந்த படத்தை பார்த்த அவர் ஏஐ கேமராவை பாராட்டி இருந்தார்.

ஆனால் தற்போது நமக்கு தெரியவந்துள்ள செய்தியில், ஸ்கூட்டரில் பெண்ணுடன் சென்ற நபரை படம் பிடித்து, அதனை அந்த நபரின் அம்மாவிடம் ஏஐ கேமரா வழங்கியுள்ளது. ஏனெனில், அவர் பெயரில் தான் இந்த ஹோண்டா டியோ ஸ்கூட்டர் ஆர்டிஓ-இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை ஏஐ கேமரா படம்பிடித்ததற்கு காரணம், பயணத்தின்போது இருவரும் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை.
இந்த சம்பவம் நடைபெற்றது கேரளாவில் ஆகும். ஏனெனில், இந்தியாவிலேயே கேரளாவில் தான் தற்சமயம் ஏஐ கேமராக்கள் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் பொருத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே, இவ்வாறான சுவாரஸ்யமான விஷயங்கள் வெளிவருகின்றன. இந்த குறிப்பிட்ட சம்பவம் குறித்த வீடியோ எஸ்.என்.பி விலாக் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஃபேஸ்புக் பக்கத்தை நடத்துபவர் தான் ஸ்கூட்டரில் பெண்ணுடன் ஏஐ கேமராவிடமும், அவரது அம்மாவிடமும் மாட்டிக் கொண்டவரா என்பது தெரியவில்லை. இதற்காக, ஏஐ கேமராக்கு நன்றி கூறுவதை எல்லாம் வைத்து பார்த்தால், ஸ்கூட்டரில் பெண்ணுடன் பயணித்தவர் வேறு ஒருவராக இருக்கலாம். இந்த வீடியோ இணையத்தில் சுற்றி திரிந்து இந்த எஸ்.என்.பி விலாக் ஃபேஸ்புக் பக்கத்தை நடத்துபவரின் கண்ணில் பட்டிருக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கீழே பதிவிடப்பட்டுள்ள அந்த ஃபேஸ்புக் வீடியோவை சற்று உன்னிப்பாக கவனீத்தீர்கள் என்றால், ரைடர் மற்றும் அவருக்கு பின்னால் அமர்ந்திருக்கும் பெண் இருவரிடமும் ஹெல்மெட் இருப்பதை காணலாம். இருவரிடமும் ஹெல்மெட் உள்ளது, ஆனால் அணியவில்லை என்பதை பார்த்தால், இணையத்தில் வைரலாகுவதற்காக இந்த வீடியோ திட்டமிட்டு நடத்தப்பட்டதாக கூட இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








