இந்தியாவுக்கே முன் உதாரணமாக கேரளா கையில் எடுத்த திட்டம்!! இப்படி ஆகும்னு நெனைச்சே பார்க்கல!
ஏஐ கேமரா (AI Camera)-க்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிற்கே முன் உதாரணமாக பொருத்தப்பட்ட ஏஐ கேமராக்களை நீக்கும் முடிவில் ஒரு மாநில அரசாங்கம் உள்ளதாக அதிர்ச்சிக்கர தகவல் வெளியாகியுள்ளது. எந்த மாநில அரசாங்கம் அது? வாருங்கள் இந்த செய்தியில் இனி பார்க்கலாம்.
தொழிற்நுட்பங்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் வேகமாக விரிவடைந்து வருகிறது. இந்த வகையில், ஏஐ என சுருக்கமாக அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளின் தேவை நிறைய துறைகளில் நுழைந்துவிட்டது. கேமரா துறையிலும், கேமராவில் காட்சிப்படுத்தப்படும் பொருளை பற்றிய விபரங்களை உடனுக்குடன் அறியும் விதமாக ஏஐ கேமராக்கள் வந்துவிட்டன.

ஏஐ கேமராக்கள் குறிப்பாக போக்குவரத்து விதிமுறைகளை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பல வெளிநாடுகளில், போக்குவரத்து காவலர்களின் பணிகளை ஏஐ கேமராக்கள் வெகுவாக குறைத்துள்ளன. இருப்பினும், நம் இந்தியாவில் டிராஃபிக்கில் இத்தகைய கேமராக்களை பயன்படுத்துவது மிகவும் குறைவாகவே உள்ளது.
டெல்லி, மும்பை போன்ற மிகவும் முக்கிய மாநகரங்களில் மட்டுமே சில பகுதிகளில் ஏஐ கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில், கடந்த வருடத்தில் கேரளா அரசு மொத்த இந்தியாவிற்கும் முன்னோடியாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்தை கண்காணிக்க ஏஐ கேமராக்களை பொருத்தியது. மொத்தம் 726 ஏஐ கேமராக்கள் பாதுகாப்பான கேரளா திட்டத்தின் ஒரு பகுதியாக பொருத்தப்பட்டன.

ரூ.232 கோடி செலவில் செயல்படுத்தப்பட்ட பாதுகாப்பான கேரளா திட்டத்தின் முக்கிய நோக்கம் உயிரிழப்புகள் மற்றும் விதிமீறல்கள் அற்ற சாலை போக்குவரத்தை கொண்டுவருவது ஆகும். ஒரு நல்ல விஷயத்திற்காக கொண்டுவரப்பட்டாலும், பொருத்தப்பட்ட பிறகு கேரளாவில் தினந்தோறும் ஏஐ கேமரா பற்றிய செய்திகள் இடம்பெற ஆரம்பித்தன.
ஏஐ கேமராக்கள் பற்றி நிறைய வதந்திகள் வெளிவந்தன. அவற்றுள் குறிப்பாக, ஏஐ கேமரா தவறாக அபராதம் விதித்துவிட்டது என்பதுதான் பலர் தெரிவித்த புகாராக இருந்தது. இந்த நிலையில் தற்போது, கேரளா அரசு ஏஐ கேமராக்களின் பயன்பாட்டை நிறுத்திக் கொள்ள உள்ளதாக ஓர் அதிர்ச்சிக்கர செய்தி வெளியாகி உள்ளது.

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஏஐ கேமராக்களை பொருத்துவதற்கும், அவற்றை முறையாக பராமரிப்பதற்கும், நிர்வகிப்பதற்கும் ஒப்பந்தம் முறையில் நிர்ணயிக்கப்பட்ட கெல்ட்ரான் நிறுவனத்துக்கு நிலுவை தொகையை கேரள அரசு இன்னும் வழங்கவில்லையாம். ஆரம்பத்தில், பாதுகாப்பான கேரளா திட்டத்துக்காக கெல்ட்ரான் நிறுவனத்துக்கு ரூ.232 கோடியை வழங்குவதாக கேரளா அரசு ஒப்பந்தம் போட்டது.
ஆனால், இதுவரையில் கெல்ட்ரான் நிறுவனத்துக்கு கேரள அரசு சார்பில் ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஆனால், பணியாளர்களுக்கான சம்பளம், அபராத செல்லான்கள் மற்றும் ஏஐ கேமராக்களை பராமரிப்பதற்கு என மாதந்தோறும் ஏறக்குறைய ரூ.1 கோடியை கெல்ட்ரான் செலவழித்து வந்துள்ளது. ஆனால், கடந்த 1 மாதமாக சாலை விதி மீறுவோருக்கு கெல்ட்ரான் நிறுவனம் எந்தவொரு நோட்டீஸையும் அனுப்பவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விதி மீறுவோர்க்கு நோட்டீஸ் அனுப்பாததற்கு காரணம், கெல்ட்ரான் நிறுவனம் தனது சேவையை அரசாங்கத்துக்கு வழங்குவதை நிறுத்தி இருப்பதாகும். இதில் இருந்து, கேரள அரசுக்கும், கெல்ட்ரான் நிறுவனத்துக்கும் இடையே சிறிய உரசல்கள் இருப்பதை அறிய முடிகிறது. கெல்ட்ரான் நிறுவனத்தை கேரள அரசு ஓரங்கட்டுகிறதா அல்லது மொத்த ஏஐ கேமரா சிஸ்டத்தையும் ஓரங்கட்டுகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









