இனி ஒரு பய லஞ்சம் குடுத்து எஸ்கேப் ஆக முடியாது! தேசிய நெடுஞ்சாலைகளை ஏஐ கண்காணிக்கும்!

இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் டிராஃபிக் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இந்த பிரச்சனையை சரிய செய்ய இந்தியாவில் முதன் முறையாக செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி முதன் முறையாக அட்வான்ஸ்டு டிராஃபிக் மேனேஜ்மென்ட் சிஸ்டத்தை டில்லியில் உள்ள ஒரு சாலையில் பொருத்தியுள்ளனர். இது எந்த அளுவிற்கு செயல்படும். இதனால் டிராஃபிக் பிரச்சனை எப்படி குறையும் என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் உள்ள டிராஃபிக் பிரச்சனையை சரி செய்ய செற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.அதன்படி அட்வாஸ்டு டிராஃபிக் மேனேஜ்மென்ட் சிஸ்டத்தை இந்திய நெடுஞ்சாலை மேனேஜ்மென்ட் என்ற நிறுவனம் செய்துள்ளது. இதை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்பார்வை செய்தது.தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த தொழிற்நுட்பத்தை டில்லியில் உள்ள சாலையில் பொருத்தியுள்ளனர்.

AI Smart Traffic System

இந்த சிஸ்டம் சுமார் 56.46 கி.மீ நீளம் கொண்ட சாலையில் உள்ள போக்குவரத்தை கண்காணிக்கும். இது தேசிய நெடுஞ்சாலை 48ல் ஷிவ் மூர்த்தி முதல் கேக்கேரி துவாலா என்ற பகுதி வரையிலான 28 கி.மீ தூரத்தையும், துரஹா எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள 2846 கி.மீ தூரத்தையும் கண்காணிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்டாவும், பாதுகாப்பாகவும், அதிக திறன் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இது எப்படி என காணலாம்.

110 ஹைரெசல்யூஷன் பிடிஇசட் கேமராக்கள் ஒவ்வொரு கி.மீக்கு ஒரு கேமரா என பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் டிராஃபிக் குறித்து 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும். நெருக்கடி ஏற்படுகிறதா? அப்படி ஏற்பட்டால் எந்த இடத்தில் பிரச்சனை இருக்கிறது என்பதை கண்காணிக்க உதவும்.

AI Smart Traffic System

வீடியோ இன்சிடென்ட் டிடெக்ஷன் மற்றும் அலாக்க சிஸ்டம்: இந்த தொழிற்நுட்பம் சாலையில் வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை மீறி வாகனம் இயக்குவதை கண்காணிக்கும். சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவது, டூவீலரில் 3 நபர்கள் பயணிப்பதை கண்காணித்து அந்த நபருக்கு அவரது வாகன நம்பர் பிளேட் மூலம் அபராதம் விதிக்கும்.

வாகன வேக டிஸ்பிளே: சாலையில் வாகனங்கள் பயணிக்கும் போது வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் பயணிக்கிறது என்பதை வாகன ஒட்டிகளுக்கு காட்டுவதற்காக ஆங்காங்கே டிஸ்பிளேகள் வழங்கப்படும். அதில் வாகனம் அதிக வேகமாக செல்லும் பேஆது வாகன ஓட்டிகளுக்கு இது குறித்த எச்சரிக்கையையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த முடியும்.

AI Smart Traffic System

டிஜிட்டல் வேரியபிள் அறிவிப்பு பலகைகள்: வாகன ஓட்டிகள் சாலையில் பயணிக்கம் போது அவர்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த டிஜிட்டல் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் எப்பொழுது வேண்டுமானாலும் அதில் அறிவிக்கப்படும் தகவல்களை மாற்றிக்கொள்ள முடியும். திடீர் அவசர அறிவிப்புகளை செய்ய இது ஏற்றதாக இருக்கும்.

சென்டரல் கமெண்ட் சென்டர்: இந்த தனித்தனி தொழிற்நுட்பத்தை ஒரு இடத்தில் ஒருகிணைக்கம் இடம் தான் கமெண்ட் சென்டர். இங்கிருந்து செய்யப்படும் மாற்றம் முழு சிஸ்டத்திலும் மாறிவிடும். மேலே உள்ள தொழிற்நுட்பம் தனித்தனியாக செயல்படாமல் ஒரு இடத்தில் மாற்றம் செய்தால் தானியங்கியாக மற்ற இடங்களில் மாறும்படி இந்த தொழிற்நுட்பம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்த கமெண்ட் சென்டர் நெடுஞ்சாலையில் டிஜிட்டல் மூளையாக செயல்படும். இதன் மூலம் அதிக பனி, சாலையில் போக்குவரத்து நெருக்கடி உள்ளிட்ட விஷயங்கள் ஏற்பட்டால் உடனடியாக அதிகாரிகளுக்க அலர்ட் சென்று விடும். மேலும் இந்த சாலையில் விதிமுறைகளை மீறும் வாகன ஒட்டிகள் மீது ஆதாரத்துடன் என்ஐசி இ-செல்லான் போர்டல் மூலம் அபராதம் விதிக்கப்படும். இது அனைத்தும் தானியங்கியாக செயல்படும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இப்படியாக செயற்கை நுண்ணறிவு மூலம் டிராஃபிக்கை கட்டுப்படுத்தும் தொழிற்நுட்பம் முதலன் முறையாக இங்குதான் கொண்டு வரப்பட்டுள்ளது. இது எந்த அளவிற்கு துள்ளியமாக செயல்படுகிறது என்பதை பொருத்தி நாட்டில் முக்கியமா பகுதிகளுக்கு இது அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 26, 2025, 14:30 [IST]
English summary
Ai smart traffic system launched in delhi to improve road safety
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X