அணுகுண்டையும் ஊதித்தள்ளும் அமெரிக்க அதிபர் ஒபாமா விமானம் - ரகசியங்கள்!

Posted By:

அமெரிக்க அதிபர் ஒபாமா இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருக்கிறார். அவர் தனது அதிகாரப்பூர்வமான ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் இந்தியா வருகை தர இருக்கிறார்.

அவரைவிட அவரது விமானத்தை பற்றித்தான் மீடியாக்கள் அதிக கவனம் கொடுத்து எழுதி வருகின்றன. அப்படி என்னதான் இருக்கிறது ஒபாமா விமானத்தில்! பல சுவையான தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

பெயர் காரணம்

பெயர் காரணம்

1953ம் ஆண்டு அமெரிக்க அதிபர் எல்சென்ஹோவர் சென்ற விமானம், வர்த்தக விமானங்கள் செல்லும் வழித்தடத்தில் சமிக்ஞை குளறுபடியால் தவறுதலாக சென்றுவிட்டது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி அமெரிக்க அதிபருக்காக உருவாக்கப்பட்ட சங்கேத பெயர்தான் ஏர்ஃபோர்ஸ் ஒன்.

தகவல் தொடர்பு வசதி

தகவல் தொடர்பு வசதி

இந்த விமானத்தில் 87 தொலைபேசிகளும், 19 தொலைக்காட்சி திரைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய தகவல் தொடர்பு வசதி இருக்கிறது.

இரண்டு விமானங்கள்

இரண்டு விமானங்கள்

அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் விமான மாடல் போயிங் 747- 200பி ஜம்போ ரக விமானமாகும். அவர் பயணிக்கும் விமானத்தை எளிதில் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத வகையில், ஒரே மாதிரியான இரண்டு விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மூன்றாவது விமானத்தில் பாதுகாப்பு அதிகாரிகளும், அலுவலக பணியாளர்களும் வருகை தருவர்.

பயணிகள் எண்ணிக்கை

பயணிகள் எண்ணிக்கை

அமெரிக்க அதிபர் பயணிக்கும் விமானத்தில் 78 பேர் பயணிக்க முடியும். அதில், 2 பைலட்டுகள் உள்பட 26 பணியாளர்கள் இருக்கின்றனர்.

மருத்துவ வசதி

மருத்துவ வசதி

அதிபர் ஒபாமா பயணிக்கும் விமானத்திலேயே அவசர மருத்துவ உதவி மற்றும் சிகிச்சைகளுக்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஒரு மருத்துவர் மற்றும் செவிலியர்களும் இருப்பர். மேலும், உணவுப் பொருட்கள் தயாரிப்பதற்காக இரண்டு சமையலறைகளும் உள்ளன.

இதர வசதிகள்

இதர வசதிகள்

படுக்கையறை, குளியலறை, வரவேற்பு அறை, சிறிய ஆலோசனைக் கூடம் என அனைத்தும் இந்த விமானத்தில் உள்ளன. ஆலோசனைக் கூடத்தில் இருக்கும் பிளாஸ்மா டிவி மூலம் வீடியோ கான்ஃபரன்சிங் வசதி மூலம் தொடர்பு கொள்ள முடியும். மேலும், நாட்டு மக்களுக்கு கூட உரை நிகழ்த்த முடியும்.

அணுகுண்டு தாக்குதல்

அணுகுண்டு தாக்குதல்

அணுகுண்டு தாக்குதல் மூலம் ஏற்படும் கதிரியக்கத்தை தடுக்கும் வசதிகளுடன் இந்த விமானம் கட்டமைக்கப்பட்டுள்ளது. பறக்கும்போது ஏவுகணை தாக்குதல்களை கூட சமாளிக்கும் வசதிகள் கொண்டது.

வேகம்

வேகம்

மணிக்கு அதிகபட்சமாக 925 கிமீ வேகத்தில் பறக்கும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 13,000 கிமீ தூரத்திற்கு இடைநில்லாமல் செல்லும். 70.6 மீட்டர் நீளமும், 59.8 மீ அகலமும், 19.3 மீ உயரமும் கொண்ட இந்த விமானம் 37.5 டன் எடை கொண்டது.

 விலை மதிப்பு

விலை மதிப்பு

இந்த விமானம் ரூ.2,000 கோடி மதிப்பு கொண்டது. அத்துடன் அதிபரின் ஒவ்வொரு பயணத்தின்போது பல மில்லியன் டாலர்களை அந்நாட்டு பாதுகாப்புத் துறை செலவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

 
English summary
Barack Obama, the President of the United States will visit India during the Republic Day celebrations, as the Chief guest.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark