"அந்த ஸ்விட்சை ஏன் ஆஃப் பண்ணீங்க" ஆமதாபாத் விமானத்தின் கருப்பு பெட்டியில் சிக்கிய ரகசியம்!

கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனிற்கு கிளம்பிய ஏர் இந்தியாவ விமானம் டேக்ஆஃப் செய்யப்பட்ட சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சுமார் 260 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் விமானத்தில் கருப்பு பெட்டி மீட்கப்பட்ட நிலையில் இந்த விபத்து குறித்த முதல் கட்ட ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கடந்த மாதம் நடந்த விமான விபத்து குறித்து ஏர்கிராஃப்ட் விபத்து விசாரணை பிரிவு தரப்பில் இருந்து முதற்கட்ட ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. சுமார் 15 பக்கம் கொண்ட இந்த ரிப்போர்ட்டில் விபத்திற்கான மூல காரணம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்த கருப்பு பெட்டி மீட்கப்பட்ட நிலையில் அதில் முக்கிய தகவல் இடம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

Air India 171 Black Box Recording

இதில் உள்ள தரவுகளின்படி விமானம் டேக் டேக் ஆஃப் ஆன சில நொடிகளில் விமானத்தின் இன்ஜினிற்கு எரிபொருளை செலுத்துவதற்கான ஸ்விட்ச் RUN போஷிசனில் இருக்க வேண்டியது CUT OFF போஷிசனிற்கு மாறியுள்ளது. அதுவும் இரண்டு இன்ஜின்களுக்கான ஸ்விட்ச் அடுத்தடுத்து 0.1 நொடி இடைவெளியில் இந்த மாற்றம் நிகழ்ந்தள்ளதாக பதிவுகள் இருப்பதாக இந்த ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதன் பிறகு விமானத்தின் உயரம் குறைந்து விபத்து ஏற்பட்டதாகவும் தெரிகிறது. விமானத்தின் காக்பிட் பகுதியில் பதிவான வாய்ஸ் ரெக்கார்டரை சோதனை செய்து பார்த்த போது விமானத்தில் உள்ள ஒரு விமானி மற்றொரு விமானியிடம் "ஏன் இன்ஜின் ஃப்யூயல் ஸ்விட்சை ஆஃப் செய்தீர்கள்" என கேட்டுள்ளார். அதற்கு மற்ற விமானி "நான் செய்யவில்லை என பதிலளித்துள்ளார்" என ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Air India 171 Black Box Recording

மேலும் விமானம் பறக்கும்போது எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை வைத்து பார்க்கும் போது விமானம் டேக் ஆஃப் ஆனதும் இன்ஜினிற்கு செல்லும் ஃப்யூயல் கட் ஆனதால் உடனடியாக ரேம் ஏர் டர்பைன் என்ற (RAT) தானாக ஆட்டிவேட் ஆகியிருப்பது தெரியவந்துள்ளது. விமானத்தின் மீது பறவை மோதியதாகவும் தெரிவயில்லை.

மேலும் இந்த அறிக்கையில் சரியாக சம்பவம் நடந்த தினந்தன்று மதியம் 1.38 மணி 39 நொடியில் விமானம் 155 நாட்ஸ் வேகத்தை எப்படி விண்ணில் பறக்க துவங்கியது. 1.38 மணி 42 நொடியில் விமானம் அதிகபட்ச வேகமான 180 நாட்ஸ் வேகத்தை எப்படியது. உடனடியாக ஒரு விநாடி இடைவெளியில் இரண்டு இன்ஜினிற்கான ஸ்விட்ச்கள் RUN போஷிசனில் இருந்து CUT OFF போஷிசனிற்கு மாறியது.

Air India 171 Black Box Recording

1.38 மணி 42 நொடியில் விமானத்தின் வேகம் குறைந்து உயரம் குறைவதை அறிந்து RAT ஆக்டிவேட் ஆகியளு்ளது. சரியாக 1.38 மணி 52வது நொடியில் முதல் இன்ஜின் ஸ்விட்ச் CUT OFF ல் இருந்து RUNக்கு மாற்றப்பட்டுள்ளது. RUN போசிஷனிற் மாறிய பிறகு இன்ஜினிற்குள் எரிபொருள் செல்லும் டோர் 1.38 மணி 56 நொடிகளில் திறந்துள்ளது. அதன் பிறகு இன்ஜின் கண்ட்ரோல் சிஸ்டம் விமானத்தின் இன்ஜினை திறம்பட இயங் வைக்கும் பணிகளை துவங்கியுள்ளது. அதன்படி விமானத்தின் இன்ஜின் இயக்கமும் சரியாக துவங்கி விமானம் உயரம் குறைவது நின்று, உயரத்தை அதிகரிக்கும் பணிகள் நடந்துள்ளது.

ஆனால் விமானத்தின் இரண்டாவது இன்ஜின் சரியாக இயங்க துவங்கவில்லை விமானத்தின் இன்ஜினிற்குள் எரிபொருளை செலுத்த பல முறை முயற்சித்தும் இன்ஜின் மீண்டும் செயல்பாட்டிற்கு வருவது சிறப்பாக இருந்தது. சரியாக 1.39 மணி 11 நொடிகளில் விமானத்தின் இன்ஜின் திறனை ஆய்வு செய்யும் கருவி செயல் இழந்துவிட்டது. அதாவது விமானம் விபத்தில் சிக்கி விட்டது.

அதற்கு சுமார் 6 நொடிகளுக்கு முன்னர் சரியாக 1.39 மணி 5வது நொடியில் விமானி ஒருவர் "மேடே மேடே மேடே" என ஏர் டிராஃபிக் கண்ட்ரோலுக்கு அறிவித்துள்ளார். அதற்கு ஏர் டிராஃபிக் கண்ட்ரோல் பதில் கேட்ட போது எந்த விதமான பதிவும் வரவில்லை. அதற்குள் விமானம் விபத்தில் சிக்கிவிட்டது. என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விமானி தெரியாமல் இந்த ஸ்விட்சை ஆஃப் செய்திருக்கலாம் என கூறி வருகின்றனர். ஆனால் விமானிகள் இது சாத்தியம் இல்லை. இந்த பட்டனை தெரியாமல் கை பட்டு எல்லாம் மாற்ற முடியாது. முதலில் இந்த பட்டனை இழுத்து அன்லாக் செய்து மீண்டும் போசிஷனை மாற்றி லாக் செய்தால் தான் மாறும் என கூறுகின்றனர். அதனால் இது தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை.

அதே நேரம் இது எலெக்ட்ரிக்கல் பிரச்சனை காரணமாக தானாக நடத்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர். இந்த விமானத்தில் ஏதாவது எலெக்ட்ரிக்கல் பிரச்சனை ஏற்பட்டு விமானம் பறக்கும் தருணத்தில் இந்த பிரச்சனை டிரிகராகி தானாக ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமானிகள் இருவரும் காக்பிட்டில் இது குறித்து பேசியதை வைத்து பார்க்கும் போது இரண்டு ஸ்விட்ச்களும் ஆஃப் போசிஷனிற்கு மாறியது இருவருக்குமே தெரியவில்லை. அப்படி என்றால் இது தானாக நடந்திருக்க வாய்ப்பு உள்ளது விமானத்தின் மற்ற தரவுகளையும் சோதித்தால் விமான விபத்திற்கான மூல காரணம் தெரியவரும்.

More from DriveSpark

Article Published On: Sunday, July 13, 2025, 13:00 [IST]
English summary
Air india 171 black box recording revealed know full details
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X