புதிய ஏர் இந்தியா பிளைட்... டிக்கெட் புக்கிங் துவங்கியாச்சு!! சென்னையில் இருந்து எந்தெந்த ஊருக்கு பறக்கலாம்?
ஏர் இந்தியா (Air India)-இன் முதல் ஏர்பஸ் ஏ350 விமானம் வருகிற ஜனவரி 22ஆம் தேதி முதல் வானில் பறக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் ஏர் இந்தியா ஏ350 விமானத்தின் முக்கிய தொழிற்நுட்ப அம்சங்களை பற்றி இனி இந்த செய்தியில் விவாதிப்போம்.
உலகின் பல முன்னணி ஏர்லைன்ஸின் சேவையில் இருக்கும் ஏர்பஸ் ஏ350 விமானம் முதல்முறையாக ஏர் இந்தியாவின் சேவையில் பயன்படுத்தப்பட உள்ளது. கட்டிங்-எட்ஜ் தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்படும் ஏ350 விமானம் அதன் பெரிய உருவத்திற்காக புகழ் பெற்றதாக உள்ளது. இதற்கேற்ப இதன் கேபின் விசாலமானதாக வடிவமைக்கப்படுகிறது.

இத்தகைய விமானம் விரைவில் ஏர் இந்தியாவின் கவர்ச்சிக்கரமான சிவப்பு-வெள்ளை கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்ஸ் உடன் செயல்பட உள்ளது. முதற்கட்டமாக ஏ350 விமானத்தை உள்நாட்டில் மட்டும் பயன்படுத்த ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது. புது ரக விமானம் என்பதால், அதனுடன் பணியாளர்கள் பரீட்சையமாவதற்காக இவ்வாறு உள்நாட்டு சேவைகளில் மட்டும் பயன்படுத்தப்பட உள்ளது.
ஆனால், ஏர்பஸ் ஏ350 ஆனது அதன் செயல்திறனை பொறுத்தவரையில் பன்னாட்டு சேவைகளுக்கான விமானம் ஆகும். ஒரு சில ஏர்லைன்ஸ் கண்டம் விட்டு கண்டம் செல்வதற்காகவே இந்த ஏர்பஸ் விமானத்தை அதிகம் பயன்படுத்துகின்றன. இத்தகைய விமானத்தை பயன்படுத்த இருப்பது ஏர் இந்தியாவின் பரிணாம வளர்ச்சியை காட்டுவதாக அமைந்துள்ளது.

வி.டி-ஜே.ஆர்.ஏ என்ற பெயரில் ஏர் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள ஏர்பஸ் ஏ350 டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த டிசம்பர் 23ஆம் தேதி பிரான்ஸில் இருந்து கொண்டுவரப்பட்டது. மொத்தம் 20 ஏ350-900 விமானங்களுக்கு ஏர் இந்தியா ஆர்டர் செய்துள்ளது. இதில் முதல் விமானம் மட்டுமே தற்போது வந்துள்ளது.
மீதி 19 விமானங்கள் இந்த 2024ஆம் ஆண்டு முடிவதற்குள் ஏர் இந்தியாவின் விமான படையில் இணையவுள்ளன. ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் உருவாக்கிய டிரெண்ட் எக்ஸ்.டபிள்யூ.பி என்ஜின்கள் உடன் உருவாக்கப்படும் ஏ350-900 விமானங்கள் மற்ற விமானங்களை விட ஏறக்குறைய 20% அதிக எரிபொருள் திறனை வழங்கக்கூடியவைகளாக உள்ளன.

ஏ350 விமானங்கள் வேகமாக பிரபலமாகி வருவதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும். ஏனெனில், இத்தகைய விமானங்களை வெவ்வேறான சேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். ஏர் இந்தியா வாங்கி இருக்கும் ஏ350-900 விமானத்தில் கேபின் மொத்தம் 3 பிரிவுகளாக உள்ளது. இந்த 3 கேபின்களிலும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 316 இருக்கைகள் உள்ளன.
இதில், குறைந்த டிக்கெட் கட்டணத்தை கொண்ட 264 எக்கானமி இருக்கைகளும், 24 பிரீமியம் எக்கானமி இருக்கைகளும், 28 பிரைவேட் பிஸ்னஸ் கிளாஸ் இருக்கைகளும் அடங்குகின்றன. அனைத்து பயணிகளும், எச்.டி திரைகளை கொண்ட லேட்டஸ்ட்-ஜெனரேஷன் பானாசோனிக் இ.எக்ஸ்3 இன்-பிளைட் பொழுதுப்போக்கு சிஸ்டத்தை பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏர் இந்தியாவின் முதல் ஏ350 விமானத்தில் பறக்க இப்போதே உங்களுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். நம் சென்னையில் இருந்தும் முன்பதிவுகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. சென்னையில் இருந்து மும்பை, பெங்களூர் & ஹைதராபாத் நகரங்களுக்கு பறக்கவுள்ள புதிய ஏர் இந்தியா ஏ350 விமானத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications
