Air India அடையாளமே தெரியாம மாறப்போது! பணியாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!
ஏர் இந்தியா விமான நிறுவனம் இந்திய அரசாங்கம் நடத்தி வந்தது. தற்போது இந்நிறுவனத்தை டாடா குழுமத்திடம் விற்பனை செய்து விட்டது. டாடா குழுமம் தற்போது ஏர் இந்தியாவுடன் சேர்த்து, விஸ்தாரா, ஏர் ஏசியா இந்தியா ஆகிய விமான நிறுவனங்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ கேம்ப்பெல் வில்சன், ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார். அதன்படி ஏர் இந்தியா நிறுவனம் தனது பிராண்டிங் மற்றும் நிறுவனத்தின் கட்டமைப்பை முழுவதுமாக மாற்றியமைக்கப்போவதாக எனத் தெரியவந்துள்ளது.

முதலில் ரீ பிராண்டிங்கை பொருத்தவரை ஏர் இந்தியா நிறுவனம் தனது லோகோ, கலர் ஸ்கீம், கேபின் உட்கட்டமைப்புகள், பணியாளர்களுக்கு வழங்கப்படும் சீருடை, ஆகியவற்றை மொத்தமாக மாற்றி புதிய லுக் கொடுக்கப்படவிருக்கிறது. இதன் மூலம் ஏர் இந்தியா நிறுவனம் அடையாளமே தெரியாமல் மாறப்போகிறது.
இது மட்டுமல்ல இந்நிறுவனத்தின் ஊழியர்கள் கட்டமைப்பிலும் மிகப்பெரிய மாற்றங்கள் வரப்போகிறது. இந்திய அரசிடமிருந்து ஏர் இந்தியாவை டாடா குழுமம் வாங்கிய பிறகு 470 புதிய விமானங்களுக்கான ஆர்டர்கள் போடப்பட்டுள்ளது. இதற்காக புதிய பணியாளர்களை எடுப்பது மட்டுமல்லாமல் ஏற்கனவே வேலை செய்யும் பணியாளர்களுக்கு மாற்றங்களை அறிவித்துள்ளது.

முதற் கட்டமாக ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் கேபின் க்ரூ மற்றும் பைலட்களுக்கான சம்பளம் மாற்றியமைக்கப்படவுள்ளது. பெரிய அளவில் சம்பள உயர்வு நடக்கும் என எதிர்பார்க்கலாம். இது மட்டுமல்ல விமானப் பணியாளர்களுக்கான புதிய ரோஸ்டரிங் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோஸ்டரிங் சிஸ்டம் என்பது ஒரு விமானி, அல்லது விமானப் பணியாளர் அவர் எந்த விமானத்தில் பறக்க வேண்டும். அவர் எங்குச் செல்கிறார். அவரது பணி நேரம் என்ன? அடுத்த விமானத்திற்கு இடையே இவருக்கு எவ்வளவு நேரம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட திட்டங்களைப் போடும் முறை தான் ரோஸ்டிங் சிஸ்டம். இதில் புதிய முறையை ஏர் இந்தியா அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
இந்த புதிய ரோஸ்டிங் சிஸ்டம் மூலம் ஒழிவு மறைவற்ற பணி முறையும், அனைத்து ஊழியர்களுக்கும் சமமான அளவு பணியும், சமநிலையான பணிகளும், விமானப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கோல்டன் ஆஃப் எனப்படும் விடுமுறைகள், மற்றும் ஒரு விமான பணத்திற்கும் மற்றொரு விமான பயணத்திற்கும் போதுமான இடைவெளி ஆகியவை மாற்றியமைக்கப்பட்டு சீராக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்ல இந்த 2023ம் ஆண்டே ஏர் இந்தியா நிறுவனம் 4200 கேபின் க்ரூ பணியாளர்களையும், 900 பைலட்களையும் புதிதாக வேலைக்கு எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய மாற்றத்தை ஒவ்வொன்றாக மாற்றியமைக்க ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்த மாற்றம் காரணமாக அடுத்த 6 மாதங்களுக்கு பணியாளர்களுக்கு சில சிரமங்கள் ஏற்படலாம். ஆனால் இது முழுமையாக மாற்றியமைக்கப்பட்டவுடன் பணியாளர்களுக்கு அதிக வசதிகள் கிடைத்துவிடும் என இதன் சிஇஓ அறிவித்துள்ளார்.
அடுத்த மிக முக்கிய மாற்றமாக சினீயாரிட்டி அடிப்படையில் பார்த்தால் தற்போது டாடா குழுமத்தின் ஏர் இந்தியா, விஸ்தாரா, ஏர் ஏசியா இந்தியா ஆகிய நிறுவனங்கள் தனித்தனியாக தங்கள் பணியாளர்களைக் கையாளுகின்றனர். இனி இது இந்த சீனியாரிட்டி பட்டியல் 3 நிறுவனங்களையும் சேர்த்து விகித அடிப்படையில் பிரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விமானிகளுக்கு வேகமாக புரோமோஷன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
கடைசியாக ஏர் இந்தியா நிறுவனத்தில் வழங்கப்படும் மஹாராஜா கிளப் வசதியில் அந்நிறுவனம் எந்த மாற்றமும் செய்யவில்லை. இந்த மஹாராஜா கிளப் உறுப்பினர்களுக்கு அதிகமான சலுகைகளை ஏர் இந்தியா நிறுவனம் வழங்கி வருகிறது. இது தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏர் இந்தியா கொண்டு வரப்போகும் இந்த மாற்றம் நீண்ட நாட்களாக அதன் பணியாளர்கள் எதிர்பார்த்தது. தான் டாடா குழுமம் வந்த பின்பு பல மாற்றங்களை முன் வைத்து பணியாளர்களுக்கும் பயணிகளுக்கும் பல விதமான சலுகைகை வழங்கவுள்ளது. இது நிச்சயம் வரவேற்றக்கப்பட வேண்டிய மாற்றம் தான்.


Click it and Unblock the Notifications








