ஒன்றல்ல.. ரெண்டல்ல.. 100விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்திருக்காங்க.. ரோல்ஸ் ராய்ஸ் எஞ்சினுடைய விமானமும் அடங்கும்!
இந்தியாவின் முன்னணி விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றாக ஏர் இந்தியா (Air India) உள்ளது. இந்த நிறுவனமே அதன் விமான போக்குவரத்து சேவையை விரிவுப்படுத்தும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையில் அது புதிய விமானங்களை53. மிகப் பெரிய எண்ணிக்கையில் வாங்க முன் வந்திருக்கின்றது. 100 புதிய விமானங்களையே அது தன்னுடைய விமான போக்குவரத்து சேவையில் இணைக்க இருக்கின்றது. இதற்கான ஆர்டரையே முன்னணி விமான உற்பத்தி நிறுவனத்திடம் வழங்கி இருப்பதாக ஏர் இந்தியா தற்போது அறிவித்திருக்கின்றது.
ஏர்பஸ் (Airbus) நிறுவனமே இந்த பிரமாண்ட ஆர்டரை ஏர் இந்தியாவிடம் இருந்து பெற்றிருக்கின்றது. ஏர் இந்தியா கொடுத்திருக்கும் 100 விமானங்களுக்கான ஆர்டர்களில் 10 அகலமான உடல் அமைப்பைக் கொண்ட ஏர்பஸ் ஏ350எஸ் (Airbus A350)-ம் அடங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மீதமுள்ள 90-ம் நீளமான உடல் அமைப்பைக் கொண்ட ஏர்பஸ் ஏ320 (Airbus A320) விமானம் ஆகும்.

விமான பயணிகளைக் கவரும் பொருட்டே ஏர் இந்தியா நிறுவனம் புதிய விமானங்களை தன்னுடைய சேவையில் இணைக்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. ஏற்கனவே இந்த நிறுவனம் தன்னுடைய விமான போக்குவரத்து சேவையில் இணைப்பதற்காக 470 புதிய விமானங்களுக்கான ஆர்டரை ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனங்களிடம் கடந்த ஆண்டில் வழங்கியது குறிப்பிடத்தகுந்தது.
இந்த நிலையிலேயே மேலும் 100 புதிய விமானங்களுக்கான ஆர்டரை ஏர் இந்தியா நிறுவனம், ஏர்பஸ்-ஸிடம் வழங்கி இருக்கின்றது. இந்தியாவில் விமான போக்குவரத்து சேவைக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. வேகமாக அதிகரித்து வரும் இந்த தேவையை பூர்த்தி செய்யும் நோக்கிலேயே இவ்வளவு மிகப் பெரிய ஆர்டர்களை ஏர் இந்தியா வழங்கி வருகின்றது.

குறிப்பாக, ஏர் இந்தியா, அரசாங்கத்தின் கை வசத்தில் இருந்து டாடா குழுமத்தின் கைகளுக்கு வந்த பின்னர் மிகப் பெரிய மேம்படுத்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் மிக முக்கியமான நடவடிக்கையாக இந்த பிரமாண்ட எண்ணிக்கையிலான புதிய விமானங்களுக்கான ஆர்டர் அமைந்து இருக்கின்றது.
மேலும், இந்த புதிய ஆர்டரின் வாயிலாக ஏர்பஸ் ஏ350 விமானத்தை பயன்படுத்த இருக்கும் முதல் விமான போக்குவரத்து நிறுவனமாக ஏர் இந்தியா மாறியிருக்கின்றது. ஆமாங்க இந்த விமானத்தை வேறு எந்த இந்தியா விமான போக்குவரத்து நிறுவனமும் தங்களின் சேவையில் பயன்படுத்தவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது.
இந்த விமானத்தில் பயன்படுத்தப்பட்டு இருப்பது ரோல்ஸ் ராய்ஸ் டிரெண்ட் எக்ஸ்டபிள்யூபி (Rolls-Royce Trent XWB) வகை எஞ்சின் ஆகும். அதிக பவர்ஃபுல்லான எஞ்சின் இதுவாகும். நீண்ட தூர பயணம், ஸ்மூத்தான பயணம் மற்றும் சிறந்த எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றிற்கு உகந்த எஞ்சினாகவும் இது அறியப்படுகின்றது.
இத்தகைய விமானத்தையே மிகப் பெரிய எண்ணிக்கையில் வாங்க முன் வந்திருக்கின்றது ஏர் இந்தியா. ஏர்பஸ் ஏ350 சிறந்த பிரீமியம் வகை விமானமாகவும் அறியப்படுகின்றது. இந்த விமானத்தை டெல்லியில் இருந்து லண்டன் மற்றும் நியூயார்க் நகரங்களுக்கு இயங்கும் வகையில் ஏற்கனவே ஏர் இந்தியா நிறுவனம் தன்னுடைய சேவையில் ஈடுபடுத்தி வருகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
இதேபோல், மிக பெரிய எண்ணிக்கையில் வாங்கப்பட இருக்கும் ஏர்பஸ் ஏ320 விமானமானது குடும்பங்களுக்கான விமானமாக இருக்கும். இதில் சிஎஃப்எம் லீப் 1-ஏ (CFM LEAP 1-A) வகை எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கும். இதுவும் ஓர் உலக தரம் வாய்ந்த விமானம் ஆகும். இந்த விமானத்தை உள்ளூர் போக்குவரத்திற்கும், குறைவான இடைவெளிக் கொண்ட நகரங்களை இணைக்கும் வகையிலும் ஏர் இந்தியா பயன்படுத்த இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விரைவிலேயே ஏர் இந்தியா தன்னுடைய விமான போக்குவரத்து சேவையை புதிய விமானங்களால் அலங்கரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் வாயிலாக வாடிக்கையாளர்களும் அதற்கு அதிகரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மிக முக்கியமாக உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கான பயணங்களுக்கு ஏர் இந்தியா சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








