இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
தாயின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, நடு வானில் சிறுவன் ஒருவனால் ஏர் இந்தியா விமானத்தில் ஓர் சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. அது என்ன என்பதையும், இதுகுறித்து இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவை பற்றியும் இனி இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம், வாங்க.
விமானங்களில் பயணம் செய்வது எப்போதுமே சுவாரஸ்யமானவை. ஒரு சிலர் இதனை மேலும் ஸ்பெஷலானதாக மாற்றுவதற்காக வித்தியாசமான செயல்களில் ஈடுப்படுவதும் உண்டு. அந்த வகையில், ஏர் இந்தியா விமானத்தில் தாயுடன் பயணம் செய்த சிறுவன் ஒருவன், தனது தாயின் பிறந்தநாளை புதுமையானதாக கொண்டாடும் முயற்சியாக ஒரு செயலில் ஈடுப்பட்டுள்ளான்.

நம் எல்லாருக்குமே பிறந்த நாளின்போது நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடுவது பிடிக்கும். அவ்வாறே, இந்த சிறுவனும் தனது தாயின் பிறந்த நாளை இரவு 12 மணிக்கு விமர்சையாக கொண்டாட திட்டமிட்டுள்ளான். ஆனால், அந்த சமயத்தில் அவர்கள் இருவரும் விமானத்தில் நடு வானில் பறந்துக் கொண்டிருந்ததால், அங்கேயே தனது அம்மாவுக்கு பிறந்தநாள் சர்பிரைஸ் கொடுக்க முடிவு செய்தான்.
அதன்படி, விமானத்தின் கேபின் பணியாளர்களிடம் இதுகுறித்து தெரிவித்த அந்த சிறுவன், பணியாளர்களின் அனுமதியை பெற்ற பின் அவனது தாயை சர்பிரைஸ் செய்துள்ளான். விமானத்தினுள் இருந்ததால் கேக் வெட்டி, கிராண்டாக பிறந்த நாளை கொண்டாட முடியவில்லை. இருப்பினும், விமான கேபின் பணியாளர் இதுகுறித்து மைக்கில் அறிவிக்கவே, விமானத்தினுள் இருந்த மற்ற பயணிகள் பலரும் சிறுவனின் தாயாருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
விமான பணி பெண்கள் ஒரு தட்டில் சில சாக்லெட்களையும், வாழ்த்து குறிப்புகளையும் கொண்டுவர, பயணிகள் கைத்தட்டி வாழ்த்து தெரிவித்தனர். இதனால் விமானத்தினுள் சிறிது நேரத்தில் பரபரப்பாகி விட்டது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், "இந்த பையன் என்னிடம் வந்து, அவனுடைய அம்மாவின் பிறந்தநாள் என்று கூறி, அவர்களுக்கு ஒரு சர்பிரைஸ் கொடுக்க விரும்பினான்.
அவனுடைய அம்மாவின் பிறந்தநாளுக்காக நாங்கள் முழு விமானத்தையும் கைத்தட்ட வைத்தோம்" என குறிப்பிடப்பட்டு உள்ளது. அம்மாவுக்காக சிறுவன் செய்த இந்த செயல் விமானத்தினுள் பலரது கவனத்தை ஈர்த்தது. அதுமட்டுமின்றி, இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவையும் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டு உள்ளனர். இந்த வீடியோவிற்கு பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதேபோன்று, கடந்த ஆண்டிலும் விஸ்தாரா விமானத்தில் ஒரு சம்பவம் நடந்தது. அந்த விமானத்தில் அழைத்து செல்லப்பட்ட ஒரு கைக்குழந்தைக்கு விமான பணியாளர்கள் ஒரு சிறிய பிறந்தநாள் பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்தனர். மாலத்தீவுக்கு சென்று கொண்டிருந்த தம்பதியின் கைக்குழந்தை 1 வயதை எட்டியதை கொண்டாடும் விதமாக அந்த கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு, குறிப்பிட்ட பயணிகள் சிலருக்காக பயணிகள் அனைவரையும் கொண்டாட்டத்தில் ஈடுப்படுத்த பெரும்பாலான ஏர்லைன் நிறுவனங்கள் விரும்ப மாட்டார்கள். ஏனெனில், இது மற்ற பயணிகளுக்கு தொந்தரவாக அமைய கூடும். இருப்பினும், பயணிகள் உடனான தங்களது பிணைப்பை வெளிக்காட்டும் விதமாக சில சமயங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடக்கின்றன.


Click it and Unblock the Notifications








