ஊருக்கு செல்ல வேண்டியவரை வேறு ஊரில் இறக்கிவிட்ட ஏர் இந்தியா! நடந்தது என்ன?

ஏர் இந்தியா நிறுவனம் பயணி ஒருவரை மேற்கு வங்க மாநிலம் பக்டோராவிற்கு செல்ல வேண்டிய பயணியை ஓடிசா மாநிலம் புவனேஷ்வருக்க அனுப்பி வைத்த சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.இந்த பிரச்சனையை கண்டறிந்து மீண்டும் அவர் செல்ல வேண்டிய இடத்திற்கே அனுப்பிய சுவரஸ்யமான சம்பவமும் நடந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் கடந்த 30ம் தேதி ஸ்ரீநகரிலிருந்து மேற்கு வங்க மாநிலம் Bagdogra என்ற பகுதிக்கு செல்ல இளைஞர் ஒருவர் விமானத்தில் டிக்கெட் புக் செய்திருந்ததார். அவர் டெல்லி வரை ஒரு விமானத்தில் வந்து அங்கிருந்து அவர் வேறு விமானத்திற்கு மாறி செல்ல வேண்டும்.

Air India Express

இந்நிலையில் அந்த இளைஞர் ஸ்ரீ நகரில் ஏறிய பிறகு விமானத்தில் படுத்து தூக்கிவிட்டார். விமானம் டில்லியில் தரையிறங்கிய பிறகும் இவர் விமானத்தில் இருந்து இறங்கவில்லை. விமானத்தில் உள்ள பணியாளர்களும் விமானத்தில் இவர் தூங்கிக்கொண்டிருப்பதை கவனிக்கவில்லை.

மதியம் 3 மணி டில்லியில் தரையிறங்கிய இந்த விமானம் மதியம் 3.55 மணிக்கு டில்லியிலிருந்து ஓடிசா மாநிலம் புவனேஷ்வர் பகுதிக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி புவனேஷ்வருக்கு செல்ல வேண்டிய பயணிகள் விமானத்தில் ஏற்றப்பட்டனர். வழக்கமாக விமானத்தை கிளப்புவதற்க முன்னர் பயணிகள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.

Air India Express

ஆனால் குறிப்பிட்ட சம்பவத்தில் இது செய்யப்படவில்லை என தெரிகிறது. இந்நிலையில் விமானம் மீண்டும் பறக்க துவங்கிய பிறகு தான் விமானத்தில் தவறதாக பயணி இருப்பது தெரியவந்தது. இதன் பிறகு புவனேஷ்வர் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய பிறகு அந்த பயணியை மீண்டும் டில்லிக்கு அனுப்பிவைத்தனர்.

அவர் இரவு அங்கு தங்க ஹோட்டல் வழங்கப்பட்டது. மறுநாள் அவரை பாக்டோக்ராவிற்கு செல்லும் விமானத்தில் ஏற்றிவிட்டனர். இந்த சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. வழக்கமாக விமானங்களில் இது போன்ற குழப்பங்கள் இருக்கும், சில நேரம் பயணிகள் வேறு விமானத்திற்கு மாற வேண்டியது இருக்கும் அவர்கள் மாறாமல் என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பார்கள்.

Air India Express

இந்த மாதிரியான சூழ்நிலைகளில் விமான பணியாளர்கள் ஒவ்வொரு பயணிகளையும் கண்காணித்து அவர்களுக்கான தேவையையும் வழிகாட்டுதல்களையும் வழங்குவார்கள். குறிப்பிட்ட சம்பவத்தில் பயணி தூங்கியதால் விமானம் டில்லியில் தரையிறங்கியதும், பின்னர் புவனேஷ்வருக்கு டேக் ஆஃப் ஆனதும் தெரியவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமானத்தில் பயணம் செய்யும் போது பயணிகள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். விமானம் மாறும் தருணங்களில் இப்படியான சம்பவம் நடக்காமல் இருக்க விமான பணியாளர்களும் ஒவ்வொரு பயணி மீதும் கவனம் செலுத்த வேண்டும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, August 1, 2025, 10:05 [IST]
English summary
Air india express wrong flight passenger sent to bhubaneswar
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X