வெளிநாட்டுக்கு கொஞ்சமும் குறைஞ்சது இல்ல!! ஏர் இந்தியா புதுசா வாங்கி இருக்கும் விமானத்தை பற்றிதான் பேச்சு!
ஏர் இந்தியா (Air India), இந்தியாவின் முன்னணி ஏர்லைன் என்பதில் எந்த மாற்றும் கருத்தும் இல்லை. ஆனால், ஏர் இந்தியாவில் இன்னமும் எந்த ஏ350 ரக விமானமும் பயன்பாட்டில் இல்லை. அளவில், பெரிய தோற்றத்தினால் பிரபலமானவைகளாக உள்ள ஏ350 ரக விமானங்கள் உலகின் பல ஏர்லைன்களில் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால், ஏர் இந்தியாவில் முதல் ஏ350 விமானம் விரைவில் சேவைக்குவர உள்ளது. இந்த நிலையில், ஏர் இந்தியாவின் ஏ350 விமானத்தின் உட்புற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளன. ஏர் இந்தியாவின் முதல் ஏ350 விமானம் சில தினங்களுக்கு முன்புதான் பிரான்ஸில் இருந்து பயன்பாட்டிற்காக டெல்லிக்கு வந்தது.

ஏர் இந்தியா வாங்கி இருப்பது ஏ350-900 விமானம் ஆகும். டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த விமானம் வருகிற 2024 ஜனவரி மாதம் முதல் ஏர் இந்தியாவின் சேவையில் இடம்பெறவுள்ளது. ஏ350-900 விமானத்தில் மொத்தம் 264 எக்கனாமி இருக்கைகள் உள்ளன.
இந்த 264 இருக்கைகளில் அமரும் பயணிகள் அனைவரும் எச்டி திரையை கொண்ட நவீன பானாசோனிக் இ.எக்ஸ்3 இன்-ஃப்ளைட் பொழுதுப்போக்கு சிஸ்டத்தை பெறலாம். இந்த எக்கனாமி இருக்கைகள் இல்லாமல், தனியாக 24 பிரீமியம் தர எக்கனாமி இருக்கைகள் உள்ளன. இவற்றில் பயணிப்பவர்கள் மேற்கூறப்பட்ட பொழுதுப்போக்கு திரை உடன் அதிக லெக்ரூம் இடவசதி உள்பட சில கூடுதல் அம்சங்களை அனுபவிக்கலாம்.

அப்படியே, பிஸ்னஸ் வகுப்புக்கு சென்றால், அங்கு 28 இருக்கைகள் உள்ளன. விமானங்களின் பிஸ்னஸ் வகுப்பில் எத்தகைய இருக்கை வசதிகள் கொடுக்கப்படும் என்பது உங்களில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். ஏ350-900 விமானத்திலும் பிஸ்னஸ் கிளாஸில் படுக்கை வசதி உடன் இருக்கைகள் பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன.
இந்த அகலமான உடலை கொண்ட விமானத்தை பயன்படுத்தவுள்ள முதல் இந்திய ஏர்லைன், ஏர் இந்தியா ஆகும். ஏற்கனவே கூறியதுபோல், அகலமான உடல் அமைப்பே ஏர்பஸ் ஏ350 விமானங்கள் இந்த அளவிற்கு உலகம் முழுவதும் பிரபலமானதாக இருப்பதற்கு முக்கிய காரணம் ஆகும். இதன் காரணமாக, இந்த விமானங்களில் வழக்கத்தை காட்டிலும் நிறைய பயணிகளை அழைத்துச் செல்ல முடியும் என்பதால், பல ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் போட்டிப் போட்டு ஏர்பஸ் ஏ350 விமானங்களை வாங்குகின்றன.

மொத்தம் 20 ஏர்பஸ் ஏ350-900 விமானங்களுக்கு ஏர் இந்தியா ஆர்டர் செய்துள்ளது. இதில், முதல் 5 விமானங்கள் 2024 மார்ச் மாதத்திற்குள் டெலிவிரிகள் செய்யப்பட உள்ளன. ஆரம்பத்தில், ஏ350 விமானங்கள் குறுகிய தொலைவிற்கு மட்டுமே இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. ஏ350-900 மட்டுமின்றி, 20 ஏர்பஸ் ஏ350-1000 விமானங்களுக்கும் ஏர் இந்தியா ஆர்டர் கொடுத்துள்ளதாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏர்பஸ் ஏ350 விமானம் ஏர் இந்தியாவுக்கு தான் புதியது. ஆனால், இந்தியாவில் மற்ற வெளிநாட்டு ஏர்லைன்ஸின் ஏர்350 விமானங்கள் தினந்தோறும் வந்துக் சென்றுக் கொண்டுத்தான் இருக்கின்றன. வருகிற ஜனவரி மாதம் முதல் ஏர் இந்தியாவின் உடையிலும் ஏ350 விமானங்கள் வானில் பறக்கவுள்ளன. இந்த விமானங்களின் உட்பக்க கேபினின் தோற்றத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.



Click it and Unblock the Notifications









