ஏர் இந்தியா விமானம் வெடித்து சிதறியதற்கு இதான் காரணமா? முன்னாடியே இப்படி ஆகும்ன்னு சொல்லிருக்காங்க!
ஆமதாபாத்திலிருந்து லண்டன் நோக்கி பயணித்த விமானம் ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து கிளம்பிய 3 நிமிடங்களில் சரியாக டேக் ஆஃப் ஆகாமல் மருத்துவகல்லூரிக்கு சொந்தமான கட்டிடத்தின் மீது மோதி வெடித்து சிதறியது. இந்த சம்பவம் தற்போது இந்தியாவையே உலுக்கி போட்டுள்ளது. 242 பயணிகளுடன் பயணித்த இந்த விமானம் எப்படி விபத்தில் சிக்கியது? இதில் என்ன பிரச்சனை ஏற்பட்டிருக்கும்? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இன்று மதியம் சரியாக 1.17 மணிக்கு ஆமதாபாத்திலிருந்து லண்டனுக்கு ஏர்இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான ஏஐ171 என்ற விமானம் புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது. இந்த விமானத்தில் பயணிப்பதற்காக 230 பயணிகள் டிக்கெட் புக் செய்திருந்தார்கள். இந்த விமானத்தை இயக்க 2 விமானிகளும், விமானத்தின் உள்ளே உள்ள பணிக்காக 10 விமான பணியாளர்களும் பணியில் இருந்தனர். விமானம் திட்டமிட்டபடி ஒடுபாதைக்கு வந்தது.

விமானம் டேக் ஆஃப் செய்ய அனுமதி கிடைத்த பிறகு விமானி ஓடுபாதையில் விமானத்தை செலுத்தி டேக்ஆஃப் செய்தார். விமானம் டேக் ஆஃப் ஆன 3வது நிமிடத்திலேயே சரியாக டேக் ஆஃப் ஆகாமல் அங்கிருந்த மருத்துவ கல்லூரி விடுதி கட்டித்தில் மோதி வெடித்து சிதறியது. இது தற்போது இந்தியா முழுவதும் பெரும் பரப்பப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த விமானம் வெடித்து சிதறிய வீடியோ காட்சிகள் கூட சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
ஏர் இ்நதியா நிறுவனம் இந்த விமானத்திற்காக போயீங் நிறுவனத்தின் 787 டிரீம் லைனர் விமானத்தை பயன்படுத்தியது. இந்த விபத்திற்கு என்ன காரணம் என பலர் தேடி வரும் நிலையில் இந்த விமானத்தை தயாரித்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த குறிப்பிட்ட ரக விமானத்தில் பிரச்சனையிருப்பதாக கூறியது தெரியவந்துள்ளது.
தி வீக் தளத்தில் வெளியாகியுள்ள தகவலின் படி போயீங் நிறவனத்தின் குவாலிட்டி இன்ஜினியராக இருந்த சாம் என்பவர் கடந்த 2021-22 ஆண்டுகளில் போயீங் 777 மற்றும் போயீங் 787 டிரிம் லைனர் விமானங்களில் பிரச்சனையிருப்பதாக கூறியிருந்ததாக தகவல் வெளியிட்டுள்ளனர். அவர் கூறியது படி போலீஸ் நிறுவனம் இந்த விமானத்தின் தயாரிப்பு செலவுகளை குறைக்கும் நோக்கில் சில நடவடிக்கைகள் எடுத்ததாகவும். இதன்காரணமாக விமானத்தின் பாடியான ஃப்யூஸ்லேக் பகுதியில் பிரச்சனை இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த விமானத்தில் உள்ள சில பாகங்கள் மிக குறுகிய இடைவெளியில் பொருத்தப்பட்டுள்ளதாகவும். சில பாகங்கள் ஒரு முடி அளவுள்ள இடைவெளியில் பெஆரத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால் விமான பயணத்தின் போது விமானிகளுக்கு கிடைக்கும் தரவுகள் தவறாக இருக்கலாம் எனவும் மேலும் தொடர்ந்து இந்த விமானத்தை பயன்படுத்தும் போது இதில் பிரச்சனை ஏற்படலாம் எனவும் கூறியிருந்தார்.

மேலும் இவர் கூறும் போது இந்த விமானத்தின் பாகங்கள் மிக குறுகிய இடைவெளியில் பொருத்தப்பட்டுள்ளததால் ஒரு சிறிய அலைன்மென்ட் பிரச்சனை ஏற்பட்டால் கூட இந்த விமானத்தில் பெரிய பிரச்சனைகள் வரக்கூடும் என எச்சரித்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்த விமானம் நடுவானில் பறக்க துவங்கும் போதே கீழே விழுந்து வெடித்துள்ளது.
இந்த விமானம் கீழே விழுந்து வெடிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாக பரவி வருகின்றன. அதன்படி இந்த வீடியோவில் விமானம் வெடித்ததும் பெரிய குண்டு வெடித்தது போல பெரிய அளவில் நெருப்பு கிளம்பியது. ஒரு விமானம் வெடித்தால் இவ்வளவு பாதிப்பு ஏற்படுமா? இதில் வெடி குண்டு இருந்ததா என பலர் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு முக்கியமான காரணம் விமானத்தில் இருந்த ஏரிபொருள் தான்.

இந்த விமானம் ஆமதாபாத்திலிருந்து லண்டன் வரை பயணிக்க வேண்டும். இதனால் விமானத்தில் அதிகமான எரிபொருள் நிரப்பபட்டிருக்கும். இதனால் விமானம் வெடிக்கும்போது இந்த எரிபொருளும் சேர்ந்து வெடிப்பதால் அதிகமான புகை கிளம்பியது. அதிக எரிபொருள் இருப்பதால் தீ வேகமாக பரவியது. இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விமானம் விபத்திற்குள்ளாது குறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணைக்கு பிறகே உண்மையான காரணம் தெரியவரும். தற்போது வெளியான தகவல், இந்த விமானம் விபத்திற்குள்ளான விதம் மற்றும் விமானம் குறித்த தகவலை வைத்தே இதுதான் காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. உண்மையான காரணம் விசாரணைக்கு பிறகு தெரிவிக்கப்படும்.
Source: The Week


Click it and Unblock the Notifications









