கோர விபத்தில் அசால்டாக உயிர் தப்பிய பயணி! இந்த சீட் தான் அவர் உயிரை காப்பாத்தியிருக்குது!
நேற்று ஆமதாபாத்தில் இருந்து லண்டனிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கிளம்பிய 3வது நிமிடத்திலேயே டேக் ஆஃப் ஆகும் போது பிரச்சனை ஏற்பட்டு விபத்தில் சிக்கி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஒருவர் கூட உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என பலர் அதிர்ச்சிடையந்த நிலையில் இந்த விமானத்தில் பயணித்த ஒரு பயணி மட்டும் படு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். மிகப்பெரிய விபத்தில் இவர் மட்டும் உயிர் தப்பியது எப்படி? இதற்கு காரணம் இவர் அமர்ந்திருந்த சீட் தான். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஒரு விமானம் விபத்தில் சிக்கிவிட்டால் அதில் பயணிப்பவர்கள் உயிர் தப்புவது என்பது மிக அதிர்ஷ்டவசமான விஷயம் தான். இந்நிலையில் ஆமதாபாத்திலிருந்து லண்டனிற்கு இன்று மதியம் கிளம்பிய விமானம் டேக் ஆஃப் ஆன அடுத்த சில நொடிகளிலேயே விபத்தில் சிக்கி வெடித்து சிதறியது. இந்த விமானம் விபத்தில் சிக்கியதும் வெடித்ததால் அப்பகுதி முழுவதும் தீ பரவியது. அடுத்த சில நிமிடங்களிலேயே விமான நிலைய தீயணைப்பு படையினர் மற்றும் அப்பகுதியில் உள்ள மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி வைரலான நிலையில் மக்கள் பலர் இந்த விமானத்தில் பயணித்தவர்கள் எல்லோரும் உயிரிழிந்திருப்பார்கள் என்றே கருதினர்.ஆனால் இதுவரை 200 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 41 பேர் பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த விபத்து மீட்பு பணியில் போது உயர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். அவர் மற்றவர்கள் போல இல்லாமல் காயம் குறைவாக இருந்தது. இவரால் எழுந்து நடந்து செல்ல முடிந்தது.
இவரை பற்றி மீட்பு படையினர் விசாரித்த போது அவர் விமானத்தில் பயணி என சொன்னார். அவரிடம் சிலர் மற்றவர்கள் எங்கே என கேட்ட போது அவர்கள் உள்ளே சிக்கியுள்ளனர். என கூறினார். அவர் நடந்தே ஆம்புலன்ஸில் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. பலர் உயிரிழந்த விபத்தில் இவர் மட்டும் எப்படி தப்பினார் என் ஆச்சரியம் பலருக்கும் எழுந்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் அவர் அமர்ந்திருந்த சீட் தான்.

இந்த விமானத்தில் அவருக்கு 11 ஏ என்ற சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. இது விமானத்தின் எமர்ஜென்ஸி எக்ஸிட் கதவுக்கு அருகில் இருந்தது. இது மட்டுமல்ல விமானத்தின் வெடித்த பாகமான எரிபொருள் இருக்கும் இறக்க பாகம் இவரது சீட்டிற்கு பின்னால் தான் இருந்தது. இதனால் அதற்கு பின்னால் இருக்கும் பகுதி தான் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இவர் இவரால் எளிதாக எமர்ஜென்ஸி கதவு வழியாக வெளியே தப்பி வர முடிந்தது. இதனால் இந்த பகுதியில் பாதிப்பு குறைவாக இருக்கிறது. இப்படி தான் இவர் விமானத்திலிருந்து உயிரிருடன் பெரிய பாதிப்பு இல்லாமல் தப்பியுள்ளது. தற்போது உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் மற்றொரு சுவாரஸ்யமான சம்பவமும் நடந்துள்ளது. இந்த விமானத்தில் பயணிக்க வேண்டிய பூமி செளகான் என்ற பெண் ஒருவர் கடைசி நேரத்தில் விமானத்தில் ஏற முடியாமல் தவற விட்டார். இவர் வரும் வழியில் டிராஃபிக்கில் சிக்கியதால் சரியான நேரத்திற்கு விமானத்திற்கு வர முடியவில்லை. இவர் வந்து சேர்வதற்கு 10 நிமிடங்களுக்கு முன்ரே விமானத்தின் கேட் மூடப்பட்டது. இதனால் இவரால் விமானத்தில் ஏற முடியவில்லை. நல்லவேளையாக இவர் விமானத்தை மிஸ் செய்தது இவரது உயிரை காப்பாற்றியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் இருக்கும் மிகப்பெரிய கேள்வியே விமானத்தில் பாதுகாப்பான சீட் எது என்பத தான். தற்போது போயீங் 787 டிரீம் மைலனர் விமானத்தில் 11 ஏ சீட்டில் அமர்ந்தவர் உயிருடன் தப்பியுள்ளார். இந்த சம்பவம் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் காணலாம் வாருங்கள்.


Click it and Unblock the Notifications









