6 மணி நேரம் விமானத்தில் சும்மா உட்கார வைக்கப்பட்ட பயணிகள்! ஏர் இந்தியா கிட்ட இதை யாருமே எதிர்பார்க்கல!

மும்பையில் இருந்து அமெரிக்காவுக்கு பறக்க வேண்டிய ஏர் இந்தியா விமானத்தில் கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானத்தில் ஏறிய பயணிகள் சுமார் ஆறு மணி நேரம் விமானத்திலேயே அமர வைக்கப்பட்ட சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. இதனால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளார்கள். 6 மணி நேரத்திற்கு பிறகும் விமானம் கிளம்பாமல் மீண்டும் பயணிகளை இறக்கி விட்டு, மறுநாளுக்கு மாற்றி அமைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

மும்பையில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்திற்கு ஏர் இந்தியா விமானத்தின் ஏஐ179 என்ற விமானம் நேற்று மதியம் சரியாக 225 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக விமானத்தில் போர்டு இங்கே மதியம் 3:30 மணிக்கு தான் துவங்கியது.

Air india flight delay

இதையடுத்து அந்த விமானத்தில் பயணிக்க டிக்கெட் புக் செய்திருந்த பயணிகள் எல்லாம் வரிசையாக விமானத்தில் ஏறினார்கள். அவர்கள் லக்கேஜ்களும் விமானத்தில் ஏற்றப்பட்டது. பயணிகள் ஏறும் போது விமானத்தின் பயனட்டும் ஏறி விமானத்தின் அனைத்து விஷயங்களையும் சோதனை செய்தார். அப்பொழுதுதான் அவர் விமானத்தின் இன்ஜினில் ஒரு சிறிய பிரச்சனை இருப்பதை கண்டறிந்தார். உடனடியாக இதுகுறித்து விமான நிறுவனத்திற்கு அவர் தகவல் தெரிவித்தார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த விமானம் பறக்க முடியாமல் இருந்தது. இன்ஜினில் இருக்கும் பிரச்சனையை சரி செய்வதற்காக தொழில்நுட்ப வல்லுநர்கள் வந்திருந்தார்கள். இதற்கிடையில் விமானத்திற்குள் ஏறிய பயணிகள் எல்லாம் சீட்டிலேயே அமர வைக்கப்பட்டிருந்தார்கள். விமானத்தில் பணியாளர்கள் பணியாற்றி வந்ததால் அவர் விமானத்திற்கு உள்ளே இருக்கும் ஏசியை விமானியால் சரிவர இயக்க முடியவில்லை.

Air india flight delay

இதனால் விமானத்திற்குள் இருக்கும் பயணிகளுக்கு மிக அதிக அளவிலான வெப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மிகப்பெரிய சிரமத்திற்கு ஆளாகி இருந்தார்கள். இப்படியாக கிளம்ப வேண்டிய விமானம் தாமதமாகி கொண்டே இருந்தது. நீண்ட நேரம் விமானம் கிளம்பாததால் பல விமானிகள் விமானத்திற்குள் இருக்க முடியாமல் தங்கள் பயணிக்கவே இல்லை என விமானத்திலிருந்து இறங்குவதற்காக கோரிக்கை விடுத்தார்கள்.

இப்படியாக தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானத்தில் உள்ள பயணி கீழே இறங்குவதற்காக கோரிக்கை விடுத்தால், அவரது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டியது விமான சேவை நிறுவனத்தின் கடமையாகும். இதை எடுத்து வெளியே பயன் செல்ல விரும்பிய பயணிகள் எல்லாம் வெளியே சென்றதும் அவர்களுக்கான லக்கேஜ்கள் எல்லாம் எடுத்து மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு மேலும் காலதாமதம் ஆகியது.

Air india flight delay

ஒரு வழியாக மதியம் 2:25 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம், இரவு 7:25 மணிக்கு புறப்படுவதற்கு தயாராக இருந்தது. இறுதி நேரத்தில் விமானத்திற்குள் இருந்த பயணி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரையும் இறக்கி விட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் அவரது லக்கேஜை எடுக்க சில நேரம் தாமதம் ஆனது.

இவ்வளவு நேரத்திற்கு பிறகு விமானத்தை எடுத்து அமெரிக்காவுக்கு சென்று தர இயக்கும்போது அமெரிக்காவில் பிரான்சிஸ்கோ மாகாணத்தில் இந்த விமானம் தரையிறங்கும் விமான நிலையத்தில் இரவு நேர தர இயங்குவதற்கு தடை இருக்கிறது. அதனால் இந்த விமானம் அங்கு தரை இறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் விமானம் மொத்தமாக பறக்க முடியாத சூழ்நிலை நிலவியது.

இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனம் இந்த விமானத்தை ஒட்டுமொத்தமாக ரத்து செய்து விமானத்தில் இருந்த அத்தனை பயணிகளுக்கும் தங்குவதற்கு இடம் உணவு மற்றும் பிற வசதிகளையும் செய்து கொடுத்து அவர்களுக்கு மாற்று விமானத்தை மறுநாள் ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்கள். அதன் பிறகு விமானத்தில் ஆறு மணி நேரத்திற்கு மேல் அமர்ந்த பயணிகள் எல்லாம் பின்னர் பத்திரமாக அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமான சேவை நிறுவனங்கள் இப்படியான சிக்கல்களை சந்திப்பது வாடிக்கையாகி வருகிறது. இறுதி நேரத்தில் இன்ஜின் கோளாறுகளை சந்திப்பது எல்லாம் முற்றிலுமாக ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயமாக இருக்கிறது. இதுபோன்ற பிரச்சனைகள் இனி விமான சேவை நிறுவனங்களுக்கு ஏற்பட்டால் நிறுவனத்திற்கும் பெரிய நஷ்டம் ஏற்படும். பயணிகளுக்கும் பெரும் துயரம் ஏற்படும் என்பது மறுக்க முடியாத உண்மை.

More from DriveSpark

Article Published On: Saturday, May 25, 2024, 13:23 [IST]
English summary
Air india flight delay mumbai san francisco passengers wait 6 hours
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X