ஏர் இந்தியா மொத்தமா வேற லெவலுக்கு மாறுது - ஒரு முறையாவது டிராவல் செய்து பார்த்திடணும்!!

ஏர் இந்தியா (Air India), இந்தியாவின் முன்னணி ஏர்லைன் நிறுவனம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியாவில் இருந்து பல நாடுகளுக்கு விமான சேவையை ஏர் இந்தியா வழங்கி வருகிறது. இந்த ஏர்லைன் நிறுவனத்தின் சேவையில் அவ்வப்போது சில புகார் எழுந்தாலும், பயணிகளுக்கான சேவையை மேம்படுத்துவதில் ஏர் இந்தியா எப்போதும் மறந்ததில்லை. இந்த வகையில் தற்போது, ஏர் இந்தியா நிறுவனம் அதன் ஏ320நியோ விமானத்தின் கேபினை புத்தம் புதியதாக அப்டேட் செய்துள்ளது. இதன்படி, எந்த மாதிரியான கேபின் இந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை பற்றி இனி பார்க்கலாம்.

ஏர் இந்தியா நிறுவனம் சமீபத்தில்தான் புதியதாக ஏ320நியோ விமானத்தை சேவையில் புகுத்தி இருந்தது. ஏர்பஸ் நிறுவனம் உருவாக்கும் ஏ320 விமானம் ஆனது உலகம் முழுவதும் பல ஏர்லைன் நிறுவனங்களில் சேவையில் உள்ளது. அந்த அளவிற்கு, எடை குறைவானதாகவும், நன்கு இலாபத்தை தரக்கூடியதாகவும் ஏ320 விமானங்கள் விளங்குகின்றன.

new cabin for a320 neo

இன்னும் சொல்லப்போனால், ஏ320 விமனத்தை ஏர் இந்தியா சற்று தாமதமாகவே வாங்கியுள்ளது என சொல்ல வேண்டும். இந்த நிலையில், இந்த புதிய விமானத்தின் கேபினை மொத்தமாக ஏர் இந்தியா தனது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியுள்ளது. அதாவது, விமானத்தினுள் பிஸ்னஸ் கிளாஸில் இருந்து, பிரீமியம் எக்கனாமி கிளாஸ் மற்றும் குறைவான டிக்கெட் விலையை கொண்ட எக்கனாமி கிளாஸ் வரையில் அனைத்து பிரிவு கேபின்களும் புதியதாக மாற்றப்பட்டுள்ளன.

ஏர் இந்தியாவின் ஏ320 நியோ விமானங்கள் உள்நாட்டு சேவைகளுக்கு மட்டுமின்றி, சர்வதேச பயணங்களுக்கும் பயன்படுத்தப்பட உள்ளன. ஏ320 விமானங்களை அதிக எண்ணிக்கையில் ஏர் இந்தியா வாங்கியுள்ளது. இதில் சில விமானங்கள் ஏற்கனவே டெலிவிரி செய்யப்பட்டுவிட்டன. சில விமானங்கள் ஏர்பஸ் நிறுவனத்தால் இன்னும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

new cabin for a320 neo

ஆனால் தற்போதைக்கு, இரு ஏ320 நியோ விமானங்களின் கேபினை மட்டுமே ஏர் இந்தியா மாற்றியுள்ளது. இந்த இரு ஏ320 நியோ விமானங்களை விடி-ஆர்.டி.டபிள்யூ மற்றும் விடி-ஆர்.டி.இசட் என ஏர் இந்தியா அழைக்கிறது. இந்த விமானங்களில் பிஸ்னஸ் கிளாஸில் 8 லக்சரி இருக்கைகளும், பிரீமியம் எக்கனாமி கிளாஸில் கால்களுக்கு கூடுதல் இடவசதி உடன் 24 இருக்கைகளும், எக்கனாமி கிளாஸில் 132 சவுகரியமான இருக்கைகளும் வழங்கப்படுகின்றன.

இந்த 3 கிளாஸிலும் பயணிகள் மூட் விளக்குகள், போதுமான அளவிற்கு லெக்ரூம், அகலமான இருக்கைகளை பெறலாம். இவற்றுடன், மொபைல் போன், டேப்லெட், லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை வைப்பதற்கு ஹோல்டர்கள் மற்றும் அவற்றை சார்ஜ் செய்வதற்கான யுஎஸ்பி சார்ஜிங் வசதிகளும் விமானத்தின் 3 வகுப்புகளிலும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

new cabin for a320 neo

அதிக டிக்கெட் விலையை கொண்ட பிஸ்னஸ் கிளாஸில் 40-இன்ச்சில் இருக்கைகள் 7-இன்ச் வரையில் மடக்கும் வசதி உடன் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், இருக்கைகளுடன் சேர்த்து ஆர்ம்ரெஸ்ட்ஸ், ஃபுட்ரெஸ்ட்ஸ் மற்றும் பேக்ரெஸ்ட்ஸையும் அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ளலாம். பொருட்களை வைப்பதற்கான அலமாரியை ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலமாக எளிதாக பயன்பாட்டிற்கு கொண்டுவர முடியும்.

பிரீமியம் எக்கனாமி கிளாஸை பொறுத்தவரையில், இந்த கிளாஸிலும் 32 இன்ச்சில் இருக்கைகள் நன்கு அகலமானதாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இருக்கைகளை 4-இன்ச்கள் வரையில் மடக்கிக் கொள்ளலாம். பயணிகளுக்கான தலையணையை 4 விதமாக அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ளலாம். பிரீமியம் எக்கனாமி கிளாஸில் பயணிப்பவர்கள் உணவுகளை தங்களது விருப்பத்திற்கு ஏற்ப பெறலாம் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வரும் ஆண்டுகளில் இத்தகைய கேபின்களை தனது அனைத்து விமானங்களிலும் வழங்க ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது. மேலும், இனி ஏர் இந்தியா சேவைக்கு கொண்டுவரப்படும் புதிய விமானங்கள் இவ்வாறான கேபினை கொண்டவைகளாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் இனி வரும் காலங்களில் இந்தியர்களும் லக்சரியான விமான பயணத்தை எக்கனாமி கிளாஸில் இருந்து பெறலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 20, 2024, 23:10 [IST]
English summary
Air india introduces new 3 class configuration for a320 neo aircrafts
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X