பாத்ரூமில் பண்ண வேண்டியதை எல்லாம் விமானத்தின் சீட்டில் அமர்ந்து கொண்டே செய்த பயணி!

ஏர் இந்தியா விமானத்தில் சீட்டிலேயே சிறுநீர் கழித்த பயணியை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். இது ஏர் இந்தியா விமானத்தில் நடக்கும் இரண்டாவது சம்பவமாகும். ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் இது போன்ற ஒரு சம்பவத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டிருந்தார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கடந்த ஜூன் 24 ஆம் தேதி மும்பையில் இருந்து டெல்லி நோக்கி ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஏஐசி 866 என்ற விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 17f என்ற சீட்டில் அமர்ந்திருந்தவர் ராம் சிங். இவர் ஆப்பிரிக்க நாட்டில் சமையல் கலைஞராக பணியாற்றி வருகிறார். இவரும் மும்பையில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்தார்.

air india Defecating

இந்நிலையில் விமானம் மும்பையில் இருந்து புறப்பட்டு நடுவானில் பறக்கத் துவங்கிய போது இவர் விமானத்திற்குள் மிக மோசமாக நடந்துள்ளார். விமானத்தில் இவர் அமர்ந்திருந்த சீட்டிலேயே சிறுநீரைக் கழித்துள்ளார். மேலும் வரிசை 9 உள்ள டி,இ,எப் ஆகிய சீட்டில் அமர்ந்திருந்தவர்கள் மீது எச்சில் துப்பியுள்ளார்.

இதை பார்த்ததும் விமான பணியாளர்கள் கேபின் சூப்பர்வைசர்கள் மூலம் அவருக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விமானத்தின் கேப்டனிடமும் தெரிவித்தனர். விமானத்தின் கேப்டன் இது குறித்து கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் அனுப்பி டெல்லி விமான நிலையத்தில் இவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தார்.

air india Defecating

விமானம் டெல்லி விமான நிலையத்தில் தரை இறங்கியதும் ஏர்போர்ட் போலீசார் குறிப்பிட்ட விமானத்திற்கு வந்து ராம் சிங்கை கைது செய்து அழைத்து சென்றனர். பின்னர் விமானத்தின் கேப்டன் டெல்லி விமான நிலைய போலீசில் இது குறித்து புகார் அளித்ததன் பெயரில் ராம் சிங்கை கைது செய்யப்பட்டு டில்லி கோட்டில் ஆஜர் படுத்தினர்.

பின்னர் அவருக்கு கோர்ட் மூலம் ஜாமீன் வழங்கப்பட்டது. ராம் சிங் எதற்காக இப்படி செய்தார் அவர் மது போதையில் இதை செய்தாரா? அல்லது இதற்கு பின்னால் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்ற தகவல் இதுவரை உறுதியாக தெரியவில்லை. இது குறித்த விசாரணை நடந்து வருகிறது.

விமானத்தில் பயணிகள் இப்படியாக சீட்டிலேயே சக பயணிகளுக்கு தொந்தரவு தரும் வகையில் சிறுநீர் கழிப்பது, அல்லது அந்தரங்க உறுப்புகளை வெளியே காட்டுவது போன்ற சம்பவங்கள் ஒன்றும் முதன் முறையல்ல. இதற்கு முன்னர் இதே போல ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானத்தில் ஒரு சம்பவம் கடந்த ஜனவரி மாதம் நடந்தது.

அதில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார். அப்பொழுதே இந்த சம்பவம் பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. பலர் இது குறித்து சமூகவலைத்தளங்களில் விவாதங்களாக்கினர். அதன் பின்னும் கடந்த மார்ச் மாசமும் இதே போன்ற ஒரு சம்பவம் டெல்லியிலேயே நடந்தது. தற்போது மூன்றாவது முறையாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

முதன்முறை சம்பவம் நடந்த போது சிவில் ஏவியேஷன் அமைச்சகம் விமானத்திற்குள் மோசமாக நடந்து கொள்ளும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பல முக்கிய விதிமுறைகளை கொண்டு வந்தது. இருந்தாலும் இது போன்ற சம்பவங்கள் குறையவில்லை. தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விமானத்தில் மோசமாக நடந்து கொள்ளும் பயணிகளும் எண்ணிக்கை குறைவுதான் என்றாலும். சமீபகாலமாக இது அதிகரித்து வருகிறது. இதற்காக பயணிகளை மட்டும் குறை சொல்லி விட முடியாது. பயணிகள் இவ்வாறு நடந்து கொள்ள ஏதோ ஒரு வகையில் சக பயணியோ அல்லது விமான நிறுவனமோ காரணமாக இருக்கலாம். இதை ஆய்வு செய்து இதிலிருக்கும் பிரச்சனையை கண்டறிந்து அதை சீர் செய்வதே இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளியை கொண்டு வரும்

More from DriveSpark

Article Published On: Tuesday, June 27, 2023, 11:30 [IST]
English summary
Air india passenger apprehended for engaging in inappropriate behavior on mumbai delhi flight
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+