உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா விமானத்தை இயக்கி சாதனை படைத்த ஏர் இந்தியா!

Written By:

 உலகின் மிக நீண்ட தூரம் இடைநில்லாமல் பயணிக்கும் புதிய விமான சேவையை ஏர் இந்தியா துவங்கியிருக்கிறது. டெல்லியிலிருந்து பசிபிக் பெருங்கடல் வழித்தடத்தில் அமெரிக்காவிலுள்ள சான்பிரான்சிஸ்கோ நகருக்கு இந்த விமான சேவை துவங்கப்பட்டு இருக்கிறது.

அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக சென்றால் தூரம் குறைவு. ஆனால், ஆபத்தும், சவால்களும் நிறைந்த இந்த பசிபிக் பெருங்கடல் வழித்தடத்தை ஏர் இந்தியா எடுத்ததற்கான காரணங்களையும், அதுபற்றிய பல சுவாரஸ்யமானத் தகவல்களையும் தொடர்ந்து காணலாம்.

 உலகின் மிக நீண்ட தூர நான்- ஸ்டாப் விமானத்தை இயக்கும் ஏர் இந்தியா!

டெல்லியிலிருந்து அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து செல்லும் வழித்தடத்தில்தான் பெரும்பாலான விமானங்கள் இயக்கப்படுகின்றன. பசிபிக் பெருங்கடலைவிட தூரமும் குறைவு. ஆனால், பசிபிக் பெருங்கடல் வழித்தடத்தை தேர்வு செய்ததில் சில முக்கிய அனுகூலங்களை பயணிகளும், ஏர் இந்தியா நிறுவனமும் பெற்றிருக்கின்றனர்.

 உலகின் மிக நீண்ட தூர நான்- ஸ்டாப் விமானத்தை இயக்கும் ஏர் இந்தியா!

டெல்லியிலிருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு 13,900 கிமீ தூரமுடைய அட்லாண்டிக் வழித்தடத்தில் செல்லும்போது எதிர்காற்றை சமாளித்து விமானம் பறக்க வேண்டியிருக்கும். ஆனால், பூமி மேற்கு திசையிலிருந்து கிழக்கு நோக்கி சுற்றுவதால், பசிபிக் பெருங்கடல் வழித்தடத்தில் செல்லும்போது விமானம் பறக்கும் திசையிலேயே காற்று வீச்சு இருக்கிறது.

 உலகின் மிக நீண்ட தூர நான்- ஸ்டாப் விமானத்தை இயக்கும் ஏர் இந்தியா!

இதனை டெயில்விண்ட்ஸ் என்று விமானவியல் துறையில் குறிப்பிடுகின்றனர். நம்மூரில் பேச்சு வழக்கில் தள்ளுக் காற்று என்று கூறுவதுண்டு. இதுபோன்று பயணிக்கும்போது விமானத்தை எளிதாகவும், வேகமாகவும் இயக்க முடியும்.

 உலகின் மிக நீண்ட தூர நான்- ஸ்டாப் விமானத்தை இயக்கும் ஏர் இந்தியா!

அதன்படி, அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக செல்வதைவிட பசிபிக் பெருங்கடல் வழித்தடம் 1,400 கிமீ தூரம் அதிகம். ஆனால், விமானம் கிழக்கு திசை நோக்கி இயக்கப்படுவதால், தள்ளுக்காற்றின் உதவியால் விமானத்தை தரைப்பகுதியை கடக்கும் வேகம் மிக அதிகமாக இருக்கிறது. இதனால், பயண நேரம் 2 மணிநேரம் வரை குறைந்துள்ளது.

 உலகின் மிக நீண்ட தூர நான்- ஸ்டாப் விமானத்தை இயக்கும் ஏர் இந்தியா!

சரியாக சொல்ல வேண்டுமெனில், டெல்லியிலிருந்து சான்பிரான்சிஸ்கோ இடையிலான 15,300 கிமீ தூரத்தை இடைநில்லாமல் வெறும் 14.5 மணி நேரத்தில் ஏர் இந்தியா விமானம் கடந்தது.

 உலகின் மிக நீண்ட தூர நான்- ஸ்டாப் விமானத்தை இயக்கும் ஏர் இந்தியா!

அட்லாண்டிக் பெருங்கடலில் பறக்கும்போது மணிக்கு 24 கிமீ என்ற வேகத்தில் வீசும் எதிர்க்காற்றை விமானம் சமாளித்து பறக்கும். இதனால், மணிக்கு 800 கிமீ வேகத்தில் விமானம் பறந்தால் கூட, அதன் தரைப்பகுதியை கடக்கும் வேகம் என்பது மணிக்கு 776 கிமீ என்ற அளவில்தான் இருக்கும்.

 உலகின் மிக நீண்ட தூர நான்- ஸ்டாப் விமானத்தை இயக்கும் ஏர் இந்தியா!

ஆனால், கிழக்கு நோக்கி பசிபிக் பெருங்கடல் வழியாக செல்லும்போது மணிக்கு 138 கிமீ வேகத்தில் தள்ளுக்காற்று வீசுகிறது. அதாவது, விமானம் மணிக்கு 800 கிமீ வேகத்தில் பறந்தால் கூட, அது தரைப்பகுதியை கடக்கும் வேகமானது மணிக்கு 938 கிமீ என்ற அளவில் இருக்குமாம். விமானத்தின் உண்மையான வேகத்திற்கும், தரைப்பகுதியை கடக்கும் வேகத்திற்கும் வித்தியாசம் உண்டு.

 உலகின் மிக நீண்ட தூர நான்- ஸ்டாப் விமானத்தை இயக்கும் ஏர் இந்தியா!

இதன் காரணமாக பயண நேரம் 2 மணிநேரம் வரை குறைந்ததோடு, மிகச் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தையும் பெற்றிருக்கிறது ஏர் இந்தியா. கடந்த 16ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணிக்கு டெல்லியிலிருந்து புறப்பட்ட அந்த விமானம் 14.5 மணிநேரம் இடைநில்லாமல் பறந்து சான்பிரான்சிஸ்கோ நகரை அதே 16ந் தேதி உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணிக்கு அடைந்தது.

 உலகின் மிக நீண்ட தூர நான்- ஸ்டாப் விமானத்தை இயக்கும் ஏர் இந்தியா!

இவற்றைவிட மற்றொரு சுவாரஸ்யத் தகவல் என்னவெனில், விமானம் சான்பிரான்சிஸ்கோ நகரில் இருந்து டெல்லிக்கு அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக திரும்பியது. ஆம், அதே தள்ளுக்காற்று இப்போது கைகொடுக்கிறது. டெல்லியிலிருந்து செல்லும்போதும், திரும்பும்போது தள்ளுக்காற்று உதவியால் பயண நேரம் வெகுவாக குறைவதோடு, எரிபொருள் சிக்கனத்தையும் பெறமுடிகிறது.அதாவது, உலகை சுற்றி வந்துவிட்டது அந்த விமானம்.

 உலகின் மிக நீண்ட தூர நான்- ஸ்டாப் விமானத்தை இயக்கும் ஏர் இந்தியா!

அதிகபட்சமாக 17,500 கிமீ தூரம் வரை இயக்க முடியும் என்பதே இதன் மிகப்பெரிய ப்ளஸ். முழுவதும் கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் இயங்கும் விமானமாக அறிமுகம் செய்யபப்பட்டது. அதிக எரிபொருள் சிக்கனத்தையும், சொகுசான பயணத்தையும் வழங்கக்கூடியது. இதன் எக்கானமி வகுப்பு பயணம் கூட சிறப்பான அனுபவத்தை வழங்கும்.

 உலகின் மிக நீண்ட தூர நான்- ஸ்டாப் விமானத்தை இயக்கும் ஏர் இந்தியா!

பசிபிக் பெருங்கடல் வழியாக விமானத்தை பெரும்பாலான நிறுவனங்கள் இயக்க தயக்கம் காட்டுகின்றன. ஏனெனில், அவசர சமயத்திற்கு தரை இறக்குவதற்கான வாய்ப்புகள் குறைவு. விமானம் விபத்தில் சிக்கினால் தேடுவதும் கடினம் என்பதே காரணம்.

 உலகின் மிக நீண்ட தூர நான்- ஸ்டாப் விமானத்தை இயக்கும் ஏர் இந்தியா!

இந்த சாதனை வழித்தடத்தில் போயிங் 777-200 லாங் ரேஞ்ச் விமான மாடல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு மணிக்கு 9,600 லிட்டர் பெட்ரோலை இந்த விமானமானது உறிஞ்சித் தள்ளும். இந்த விமானத்தை ரஜ்னீஷ் ஷர்மா, கவுதம் வெர்மா, எம்ஏ கான் மற்றும் எஸ்எம் பலேகர் ஆகிய 4 விமானிகள் இயக்கினர். 10 பணியாளர்கள் சேவையில் இருந்தனர்.

 உலகின் மிக நீண்ட தூர நான்- ஸ்டாப் விமானத்தை இயக்கும் ஏர் இந்தியா!

இதுவரை, துபாயிலிருந்து ஆக்லாந்து நகருக்கு இடையிலான 14,120 கிமீ தூரத்திற்கு இயக்கப்பட்டு வரும் எமிரேட்ஸ் விமான சேவைதான் உலகின் மிக நீண்ட தூர சேவை என்ற பெருமையை பெற்றிருந்தது. தற்போது டெல்லியிலிருந்து சான்பிரான்சிஸ்கோ நகருக்கான ஏர் இந்திய விமான சேவை உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா விமான சேவை என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

 உலகின் மிக நீண்ட தூர நான்- ஸ்டாப் விமானத்தை இயக்கும் ஏர் இந்தியா!

இன்னும் இரண்டு ஆண்டுகளில் சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு இடையில் 16,500 கிமீ தூரம் இடைநில்லாமல் செல்லும் புதிய விமான சேவையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Air India Starts Delhi-San Francisco nonstop Flight Service over Pacific. Read in Tamil.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark