300இல் இருந்து 400 பேரை அசால்ட்டா ஏற்றிக் கொண்டு செல்லலாம்!! ஏர் இந்தியா வாங்கி இருக்கும் புதிய விமானம்!

ஏர் இந்தியா (Air India)-இன் முதல் ஏ350 விமானம் சிங்கப்பூரில் செயல்பட ஆரம்பித்துள்ளது. இதனை தெரிவிக்கும் வகையிலான படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. ஏர் இந்தியா பயணிகளை உற்சாகப்படுத்தியுள்ள இந்த செய்தி குறித்த கூடுதல் விபரங்களையும், ஏ350 விமானங்களை பற்றியும் இனி பார்க்கலாம்.

உலகளவில் பிரபலமான மற்றும் பிரம்மாண்டமான விமானம் என்றால், தற்போதைக்கு அது ஏ350-900 ஆகும். ஏர்பஸ் நிறுவனம் உற்பத்தி செய்யும் இந்த விமானத்தை எப்படியாவது தனது ஏர்லைன்ஸ் சேவையில் சேர்க்க வேண்டும் என்பதற்காக பல முன்னணி ஏர்லைன் நிறுவனங்கள் போட்டிப் போட்டு வருகின்றன.

air indias first airbus a350

ஒரு சில ஏர்லைன் நிறுவனங்கள் ஏற்கனவே தங்களிடம் ஏ350 விமானங்கள் இருக்கும்போதிலும், கூடுதலாக அடுத்தடுத்து ஏ350 விமானங்களை வாங்கிக் கொண்டு இருக்கின்றன. உதாரணத்திற்கு சமீபத்தில்தான் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த எமிரேட்ஸ் ஏர்லைன் புதியதாக 15 ஏ350-900 விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. சமீபத்தில், துபாயில் நடைபெற்ற ஏர்ஷோவில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

ஆனால், நம் இந்தியாவை சேர்ந்த ஏர் இந்தியா இப்போதுதான் தனது முதல் ஏ350 விமான சேவையை துவங்கியுள்ளது. ஏர் இந்தியாவின் முதல் ஏ350 விமான சேவை ஆனது சிங்கப்பூரில் இருந்து பிரான்ஸில் உள்ள துலூஸுக்கு நகரத்திற்கு கடந்த நவம்பர் 18ஆம் தேதி முதல்முறையாக இயக்கப்பட்டு உள்ளது. இதனை ஏர் இந்தியா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் படங்களுடன் உறுதிப்படுத்தி உள்ளது.

air indias first airbus a350

"இந்தியா மிகவும் எதிர்பார்க்கும் விமானத்தை கொண்டுவருவதில் நெருங்கியுள்ளோம். எங்களின் ஏர்பஸ் ஏ350-900 சிங்கப்பூரில் இருந்து துலூஸுக்கு புதிய 'ஏர் இந்தியா' வண்ணங்களில் தனது முதல் பயணத்தை துவங்கியது" என்றார். ஆனால் உண்மையில், இந்த பயணம் ஆனது தொழில்ரீதியாகவே மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதாவது, இந்த பயணத்தில் விமான குழுவை தவிர்த்து, பயணிகள் யாரும் அழைத்தச் செல்லப்படவில்லை என கூறப்படுகிறது.

ஏர் இந்தியா நிறுவனத்தில் இருந்து நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஏர் இந்தியாவின் முதல் ஏ350 விமானத்திற்கு புதிய 'ஏர் இந்தியா' பெயிண்ட் சிங்கப்பூரில் அடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கூடுதல் பணிகளுக்காக பிரான்ஸின் துலூஸுக்கு ஏர் இந்தியாவின் ஏ350 விமானம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாம்.

air indias first airbus a350

அங்கு வேலைகள் அனைத்தும் நிறைவடைந்த பின் அதிகாரப்பூர்வமாக, பயணிகளுடன் முதல் ஏர் இந்தியா ஏ350 விமான பயணம் 2023 டிசம்பரில் துவங்கப்படும். ஏ350 விமானங்களை எதிர்காலத்தில் அதிகளவில் பயன்படுத்த ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்காக, கிட்டத்தட்ட 40 ஏர்பஸ் ஏ350 விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது, ஏர் இந்தியா நிறுவனம்.

இந்த 40 ஏ350 விமானங்களில் 6 ஏ350-900 விமானங்களும், 34 ஏ350-1000 விமானங்களும் அடங்குகின்றன. 6 ஏ350-900 விமானங்களில் முதல் விமானம் அடுத்த டிசம்பரில் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என கூறிவிட்டோம். அதனை தொடர்ந்து, மீதி 5 ஏ350-900 விமானங்கள் 2024 மார்ச் மாதத்திற்குள் ஒன்றன்பின் ஒன்றாக ஏர் இந்தியா நிறுவனத்திடம் டெலிவிரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

air indias first airbus a350

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏர் இந்தியா வெளியிட்டுள்ள படங்களில், 'ஏர் இந்தியா' ஸ்டிக்கர்களுடன் பிரம்மாண்ட ஏ350 விமானம் பார்ப்பதற்கே கம்மீரமாக உள்ளது. இது, ஏர் இந்தியாவின் வரலாற்றில் புது அத்தியாயத்தை உருவாக்க உள்ளதாக கூறப்படுகிறது. பயணிகளுக்கு மாடர்னான மற்றும் பிரம்மாண்டமான பயண அனுபவத்தை வழங்க வேண்டும் என ஏர் இந்தியா நிறுவனம் எண்ணுவது இதில் இருந்து புலப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, November 20, 2023, 11:25 [IST]
English summary
Air indias first airbus a350 flight with new livery check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X