ஏழைகளும் இனி விமானத்தில் பறக்கலாம்! ஏர் கேரளா விமான சேவைக்கு அனுமதி!
இந்தியாவில் புதிதாக விமான சேவை வழங்குவதற்காக விண்ணப்பம் செய்திருந்த ஏர் கேரளா என்ற நிறுவனத்திற்கு மத்திய சிவில் அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி இந்நிறுவனம் வரும் 2025ம் ஆண்டு தனது விமான சேவைகளை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவில் மையமாகக் கொண்டு நிறுவனம் விமான சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் விமான சேவை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தியாவில் மக்கள் அதிகம் விமான சேவைகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக செல்ல விமானம் மட்டும்தான் ஒரே வழி என்பதால் பலர் விமான சேவையை பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். ஒரு காலத்தில் பெரும் பணக்காரர்கள் மட்டுமே விமானத்தில் பயணிக்க முடியும் என்ற நிலை இருந்தது.

ஆனால் விமான சேவை நிறுவனங்கள் இன்று டிக்கெட் விலைகளை குறைத்து குறைந்த விலையிலும், விமான பயணம் செய்ய முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் விமான சேவை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் துபாயை சேர்ந்த அபி அகமது மற்றும் அய்யூப் கல்லடா ஆகியோர் சேர்ந்து ஏர் கேரளா என்ற பெயரில் புதிய விமான சேவை நிறுவனத்தை துவங்க திட்டமிட்டுள்ளார்கள்.
இவர்கள் விமான சேவை துவங்குவதற்காக விண்ணப்பித்திருந்த நிலையில் தற்போது மத்திய சிவில் ஏவியேசன் அமைச்சகம் ஏர் கேரளா நிறுவனம் இந்தியாவில் விமான சேவையை துவங்க அனுமதி வழங்கியுள்ளது. ஏர் கேரளா என்ற விமான சேவையை ஏவியேசன் என்ற நிறுவனம் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனம் கேரளாவை மையமாகக் கொண்டு விமான சேவையை துவங்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. முக்கியமாக டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களை விமானங்கள் மூலம் இணைக்கும் சேவையில் இந்நிறுவனம் களமிறங்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இந்நிறுவனம் குறைந்த விலையில் விமான சேவையை வழங்க திட்டமிட்டு உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதற்கட்டமாக இந்நிறுவனம் ஏடிஆர் 72-600 ரக விமானங்களை பயன்படுத்தி விமான சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. படிப்படியாக இந்நிறுவனம் புதிய விமானங்களை வாங்கி தனது விமான சேவையை விரிவுபடுத்தும் என்ற கருத்து நிலவி வருகிறது. முதல் கட்டமாக இந்நிறுவனம் இந்தியாவிற்கு மட்டும் விமான சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. பின்னர் படிப்படியாக சர்வதேச விமான சேவைக்கு இந்நிறுவனம் முன்னேறி செல்லும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
சர்வதேச அளவில் சேவை வழங்குவதற்காக 20 புதிய விமானங்களை வாங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக கேரளாவில் இருந்து துபாய்க்கு இந்நிறுவனம் விமான சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன் பிறகு கேரளாவில் உள்ள மக்கள் எந்த வெளிநாட்டிற்கு அதிகம் பயணம் செய்கிறார்கள் என்பதை பார்த்து அந்த நாட்டிற்காக விமான சேவையை வழங்க இந்நிறுவனம் முடிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏர் கேரளா விமான சேவையை பொறுத்தவரை தற்போது முதல் படியில் தான் இருக்கிறது. இனி அடுத்தடுத்த படிகளை எடுத்து வைத்தால் மட்டுமே விமான சேவைக்கான முழு அனுமதியையும் பெற்று விமான சேவையை துவங்கும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. இதற்கு அதிக பணம் தேவைப்படும் என்பதால் தற்போது நிதியை திரட்டும் முயற்சியில் நிறுவனம் இறங்கியுள்ளது.
2025ம் ஆண்டு ஏர் கேரளா நிறுவனம் இந்தியாவில் தனது விமான சேவையை துவங்கும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. அதன் பிறகு இந்த விமானத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இதன் விமான சேவை விரிவாக்கம் என்பது திட்டமிடப்படும் என எதிர்பார்க்கலாம். இந்தியாவில் தென் மாநிலத்தின் பெயரில் ஒரு விமான சேவை துவங்கப்படுவது இதுதான் முதல் முறை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏர் கேரளா நிறுவனம் குறைந்த டிக்கெட் விலையில் விமான சேவை வழங்க திட்டமிட்டுள்ளது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது. இதனால் விமானத்தில் பயணம் செய்யும் கனவுடன் இருக்கும் பலர் தங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்வார்கள் விரைவில் இந்த விமான சேவை நிறுவனம் பயன்படுத்த வரும் பட்சத்தில் நிச்சயம் இது மிகப்பெரிய மாற்றத்தை விமான போக்குவரத்து துறையில் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








