எய்ட்ஸை விட கொடூரமானது.. இந்தியாவின் இந்த நகரங்களில் வசித்தால் உங்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை..

எய்ட்ஸ் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றை விட கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பிரச்னை ஒன்று இந்தியாவை அச்சுறுத்தி கொண்டுள்ளது.

எய்ட்ஸ் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றை விட கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பிரச்னை ஒன்று இந்தியாவை அச்சுறுத்தி கொண்டுள்ளது. இந்த நகரங்களில் நீங்கள் வசித்தால், வெகு விரைவாகவே உயிரிழக்க கூடிய அபாயம் நிலவி வரும் அதிர்ச்சிகரமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

எய்ட்ஸ், தீவிரவாதத்தை விட கொடூரமானது.. இந்த நகரங்களில் நீங்கள் வசித்தால் விரைவாக உயிரிழக்க நேரிடும்

சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற காரணங்களால்தான் ஒருவர் வெகு விரைவாக உயிரிழக்கிறார் என நீங்கள் நினைத்து கொண்டிருக்கிறீர்களா? நிச்சயமாக இல்லவே இல்லை. அதை காட்டிலும் பயங்கரமான பிரச்னை ஒன்றை பூதாகரமாக உருவெடுத்து கொண்டுள்ளது.

எய்ட்ஸ், தீவிரவாதத்தை விட கொடூரமானது.. இந்த நகரங்களில் நீங்கள் வசித்தால் விரைவாக உயிரிழக்க நேரிடும்

தீவிரவாதம், போர் ஆகியவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளை காட்டிலும் இந்த பிரச்னையின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளே அதிகம். அவ்வளவு ஏன்? அதி பயங்கர நோயான எய்ட்ஸை காட்டிலும், இந்த பிரச்னைதான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

எய்ட்ஸ், தீவிரவாதத்தை விட கொடூரமானது.. இந்த நகரங்களில் நீங்கள் வசித்தால் விரைவாக உயிரிழக்க நேரிடும்

சிகரெட் பிடிப்பதன் காரணமாக சர்வதேச அளவில் சராசரியாக மனிதர்களின் ஆயுட்காலம் 1.6 ஆண்டுகள் குறைகிறது. அதே நேரத்தில் மது அருந்துவதன் காரணமாக சர்வதேச அளவில் மனிதர்களின் ஆயுட்காலமானது 11 மாதங்கள் வரை குறைகிறது.

எய்ட்ஸ், தீவிரவாதத்தை விட கொடூரமானது.. இந்த நகரங்களில் நீங்கள் வசித்தால் விரைவாக உயிரிழக்க நேரிடும்

அதுவே சுகாதாரமற்ற குடிநீரை பருகுவதன் காரணமாக மனிதர்களின் ஆயுட்காலம் சர்வதேச அளவில் சராசரியாக 7 மாதங்கள் குறைந்து வருகிறது. சரி, எய்ட்ஸ் காரணமாக மனிதர்களின் ஆயுட்காலம் சராசரியாக எவ்வளவு குறைகிறது என கேட்கிறீர்களா?

எய்ட்ஸ், தீவிரவாதத்தை விட கொடூரமானது.. இந்த நகரங்களில் நீங்கள் வசித்தால் விரைவாக உயிரிழக்க நேரிடும்

இந்த கேள்விக்கு பதில் 4 மாதங்கள். உலகையே அச்சுறுத்து கொண்டுள்ள தீவிரவாதத்தின் காரணமாக மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 22 நாட்கள் வரை குறைகிறது. ஆனால் இவை எல்லாவற்றையும் காட்டிலும் ஒரு பிரச்னை தற்போது பூதாகரமாக உருவெடுத்து கொண்டுள்ளது.

எய்ட்ஸ், தீவிரவாதத்தை விட கொடூரமானது.. இந்த நகரங்களில் நீங்கள் வசித்தால் விரைவாக உயிரிழக்க நேரிடும்

காற்று மாசுபாடு. ஆம், காற்று மாசுபாடுதான் தற்போது பூதாகரமாகி கொண்டிருக்கும் ஒரு பிரச்னை. காற்று மாசுபாடு பிரச்னை காரணமாக சர்வதேச அளவில் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 1.8 ஆண்டுகள் வரை குறைந்து வருகிறது.

எய்ட்ஸ், தீவிரவாதத்தை விட கொடூரமானது.. இந்த நகரங்களில் நீங்கள் வசித்தால் விரைவாக உயிரிழக்க நேரிடும்

அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றினை நடத்தியது. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதன்மூலமாகதான் காற்று மாசுபாடு பிரச்னை பூதாகரமாக உருவெடுத்து கொண்டிருக்கும் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

எய்ட்ஸ், தீவிரவாதத்தை விட கொடூரமானது.. இந்த நகரங்களில் நீங்கள் வசித்தால் விரைவாக உயிரிழக்க நேரிடும்

தற்போதைய நிலையில், காற்று மிகவும் அதிகம் மாசுபாடு அடைந்த ஏதேனும் ஒரு நகரத்தில் நீங்கள் வசித்து கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்களின் ஆயுட்காலம் ஒட்டுமொத்தமாக சுமார் 4.3 ஆண்டுகள் வரை குறைந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எய்ட்ஸ், தீவிரவாதத்தை விட கொடூரமானது.. இந்த நகரங்களில் நீங்கள் வசித்தால் விரைவாக உயிரிழக்க நேரிடும்

குறிப்பாக காற்று மாசுபாடு பிரச்னையால் மிக அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது இந்தியாதான். உலக சுகாதார நிறுவனம் (World Health Organization-WHO) வகுத்துள்ள நெறிமுறைகளின்படி இந்தியாவில் காற்றின் தரம் இல்லை.

Recommended Video

மஹிந்திரா அல்டுராஸ் ஆஃப் ரோடு டிரைவ் - முதல் அபிப்ராயம்
எய்ட்ஸ், தீவிரவாதத்தை விட கொடூரமானது.. இந்த நகரங்களில் நீங்கள் வசித்தால் விரைவாக உயிரிழக்க நேரிடும்

உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ள நெறிமுறைகளுக்கு ஏற்ப மாறினால், இந்தியாவில் வசிக்கும் மக்களின் சராசரி ஆயுட்காலம் 4.3 ஆண்டுகள் வரை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதாவது இந்தியர்களின் சராசரி ஆயுட்களாலம் 69-73 ஆண்டுகளாக அதிகரிக்கும்.

எய்ட்ஸ், தீவிரவாதத்தை விட கொடூரமானது.. இந்த நகரங்களில் நீங்கள் வசித்தால் விரைவாக உயிரிழக்க நேரிடும்

ஆனால் இந்தியாவில் நாளுக்கு நாள் காற்றின் தரம் மோசமடைந்து கொண்டு செல்கிறது என்பதே உண்மை. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதும் காற்று மாசுபாடு பிரச்னைக்கு ஒரு முக்கியமான காரணமாக உள்ளது.

எய்ட்ஸ், தீவிரவாதத்தை விட கொடூரமானது.. இந்த நகரங்களில் நீங்கள் வசித்தால் விரைவாக உயிரிழக்க நேரிடும்

குறிப்பாக பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகை, சுற்றுச்சூழலுக்கு பேராபத்தை விளைவித்து கொண்டுள்ளது. எனவே பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

எய்ட்ஸ், தீவிரவாதத்தை விட கொடூரமானது.. இந்த நகரங்களில் நீங்கள் வசித்தால் விரைவாக உயிரிழக்க நேரிடும்

அதாவது பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் மற்றும் எத்தனால், மெத்தனால், சிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மிக தீவிரமாக எடுத்தே ஆக வேண்டும்.

எய்ட்ஸ், தீவிரவாதத்தை விட கொடூரமானது.. இந்த நகரங்களில் நீங்கள் வசித்தால் விரைவாக உயிரிழக்க நேரிடும்

இல்லாவிட்டால் தற்போது இருப்பதை காட்டிலும் இந்தியாவில் காற்றின் தரம் மிக மோசமான நிலைக்கு செல்லும். உலக சுகாதார நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, காற்று அதிகம் மாசுபாடு அடைந்த முதல் 20 நகரங்களின் பட்டியலை வெளியிட்டது.

எய்ட்ஸ், தீவிரவாதத்தை விட கொடூரமானது.. இந்த நகரங்களில் நீங்கள் வசித்தால் விரைவாக உயிரிழக்க நேரிடும்

இதில், 10 நகரங்கள் இந்தியாவில் இருக்கிறது என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் அதன்மூலம் தெரியவந்தது. குறிப்பாக இந்திய தலைநகர் டெல்லியே காற்று மாசுபாடு பிரச்னையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்திகளை நீங்கள் அடிக்கடி பார்த்திருக்க கூடும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட்
English summary
Air Pollution Is More Dangerous Than AIDS, Cigarette Smoking And Terrorism. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X