ரூ1 லட்சத்திற்கு லாரி சீட்! அப்படி இதுல என்னதாங்க இருக்குது?
லாரி டிரைவர் ஒருவர் தனது லாரிக்கு ரூ1 லட்சம் செலவு செய்து ஏர் சஸ்பென்சன் வசதி கொண்ட சீட்டை பொருத்தியுள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த அளவிற்கு காஸ்ட்லியான சீட்டை அவர் எப்படி வாங்கினார்? இதன் பின்னால் உள்ள முழுமையான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் ராவானி, இவர் லாரி ஓட்டுநராக இருந்து வருகிறது. இது மட்டுமல்ல இவர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு கண்டென்ட் கிரியேட்டராகவும் இருக்கிறார். இவரது வீடியோக்கள் பிரபலமாகி வருகிறது. இதன் மூலமே நல்ல வருமானத்தை பார்த்து வருகிறார். இவர் தனது லாரியில் அவ்வப்போது மாடிஃபிகேஷன் செய்வார். அதையும் அவர் வீடியோவாக எடுத்து வெளியிடுவார்.

லாரி ஓட்டுநராக பணியாற்றுவதால் கிடைக்கும் சம்பளம் மட்டுமல்லாமல் வீடியோ எடுப்பதால் கிடைக்கும் வருமானத்தால் இவரது வருமானம் பெருகிறது. இதை வைத்து இவர் சமீபத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ என் காரை சொநத்மாக வாங்கியிருந்தார். இந்த வீடியோவும் வைரலாக பரவியது. இந்நிலையில் இந்நிறுவனம் தனது லாரிக்கு ரூ1 லட்சம் மதிப்பு கொண்ட சீட்டை பொருத்தியுள்ளதாக வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவும் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில் அவரது லாரி புதிதாக பெயிண்ட் செய்யப்படுகிறது. இந்த லாரிக்கு என்ன மாற்றங்கள் செய்யப்படவுள்ளது என்பதை தெளிவாக அவர் விளக்குகிறார். இந்த லாரி வெள்ளை மற்றும் நீல நிற பெயிண்ட் அடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறிகிறார். இது போக பிராக்டிக்கல் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்காக வாகனங்களில் சில மாற்றங்கள் செய்யப்போவதையும் அவர் விளக்குகிறார்.
இந்த வீடியோவில் இவர் வாகனத்தின் டிரைவர் சீட்டில் புதிய ஏர்சஸ்பென்சன் சீட்டை பொருத்தியுள்ளதாக கூறி சீட்டை காட்டுகிறார். இந்த சீட்டீல் பாரத் பென்ஸ் என எழுதப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் தம்நெயிலில் இந்த கார் சீட்டின் விலை மட்டும் ரூ1 லட்சம் என குறிப்பிட்டுளு்ளனர். இந்த சீட் செகண்ட் ஹேண்ட் மார்கெட்டில் ரூ25,000த்திற்கு கூட கிடைக்கிறது.

இந்த வீடியோவில் இந்த சீட்டின் லுக்கை முழுவதுமாக காட்டுகிறார்கள். இந்த சீட்டிலேயே சீட் பெல்ட் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் சிங்கிள் பீஸ் சீட்டாக வழங்கப்பட்டுள்ளது. இந்த சீட்டிலேயே ஹெட்ரெஸ்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் சீட்டில் சாய்வு வசதி மற்றும் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதிகள் உள்ளது. சீட் சாஃப்டாக இருக்க வேண்டுமா? அல்லது ஹார்டாக இருக்க வேண்டுமா என்பதை பயனரே முடிவு செய்து கொள்ள முடியும்.
இந்த சீட்டில் முக்கிய அம்சமாக ஏர்சஸ்பென்சன் செட்டப் உடன் வருகிறது. இதனால் பள்ள மேடுகளில் வாகனம் செல்லும் போது அதன் அதிர்வுகள் சீட்டிற்கு செல்லாத வகையில் இந்த சீட் செயல்படும். பொதுவாக லாரிகள் நீண்டதூரம் பயணிக்கும் என்பதால் அதில் சீட் தவறாக இரந்தால் டிரைவருக்கு அசெளகரியம் மற்றும் உடல் நல பிரச்சனை ஏற்படலாம்.
ஏர்சஸ்பென்சன் சீட் ஆம்பிள் டேம்பிங் மற்றும் பயணிகளுக்கு சொகுசு வசதியை வழங்குகிறது. பல பாரத் பென்ஸ் வாகனங்களில் இந்த சீட் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த வீடியோவில் இதை எப்படி பொருத்தினார்கள் என்ற விபரங்களை காட்டவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகனங்களை கஸ்டமைஸ் செய்வது பலருக்கு பிடித்தமான விஷயம். இதில் சீட்டிற்காக லாரி டிரைவர் ஒருவர் ஒரு லட்சம் செலவு செய்துள்ளது பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications









