மத்திய அரசுக்கு முன்பே சூப்பர் திட்டத்தை தட்டி தூக்கிய தமிழக அரசு! சென்னையே ஹைடெக் சிட்டியா மாறப்போகுது!
போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துக் கொண்டே வருகிறது. மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல கார், பைக், பஸ், ரயில், மெட்ரோ என பல்வேறு விதமான ஆப்ஷன்கள் இருக்கும் நிலையில், தற்போது புதிய ஆப்ஷனாக ஏர் டாக்ஸி என்ற விமான சேவையை சென்னை நகருக்குள் கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அதிகாரிகள் மத்தியில் கூட்டம் ஒன்றும் நடந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களையும் இந்த ஏர் டேக்ஸி குறித்த அனைத்து தகவல்களையும் காணலாம் வாருங்கள்.
உலகம் முழுவதும் பெருநகரங்களில் போக்குவரத்து நெருக்கடி மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறது. சென்னை இந்தியாவின் மிக முக்கியமான நகரம் என்பதால் சென்னையிலும் போக்குவரத்து நெருக்கடி அதிக அளவில் இருக்கிறது. சென்னை மக்களின் பெரும்பாலான நேரம் போக்குவரத்து டிராபிக் ஜாமிலேயே கழிகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு கொண்டு வர அரசு பல்வேறு யுக்திகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது சென்னை வாழ் மக்களுக்கு ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல சொந்தமாக பைக், கார் வைத்திருப்பவர்கள் அந்த வாகனங்களில் பயணம் செய்யலாம் அல்லது ஆட்டோ, டேக்ஸி, கேப் போன்ற சேவைகளும் சென்னையில் செயல்பட்டு வருகின்றன. இது போக பொது போக்குவரத்து சேவையாக பஸ், ரயில், மெட்ரோ உள்ளிட்ட சேவைகளும் சென்னையில் பயன்பாட்டில் இருக்கிறது.
இவ்வளவு விஷயங்கள் இருந்தும் சென்னையில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக தான் இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் தனிநபர் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகம் ஆகிவிட்டது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் விற்பனையாகின்றன. அந்த வாகனங்கள் எல்லாம் சாலையில் பயன்பாட்டிற்கு வரும்போது அதற்கு தகுந்தார் போல் சாலை விரிவடைய போதுமான வசதிகள் இல்லை.

பொதுப்புக்குவரத்தில் சிரமம் இருப்பதால் மக்கள் பணி வாகனங்களை வாங்கினால் அது மேலும் சிரமமாக இருக்கிறது. இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. இந்நிலையில் வேகமாக ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல சென்னை போன்ற பெருநகரங்களில் ஆப்ஷனே இல்லாத சூழ்நிலை தான் இருக்கிறது.
இந்நிலையில் சென்னை மாநகர பகுதியில் ஏர் டேக்ஸி என்ற ஹெலிகாப்டர் சேவையை அறிமுகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. தமிழக அரசின் அமைப்பான தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமான டிட்கோ சார்பில் இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து வருகின்றன. இதன்படி தனியார் நிறுவனங்கள் மூலம் ஹெலிகாப்டர் சேவைகளை சென்னையில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக டிட்கோ தற்போது நகர்ப்புற வான் போக்குவரத்து என்ற புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டம் குறித்து கடந்த வாரம் அதிகாரிகள் மத்தியில் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் ட்ரோன் மற்றும் குறுகிய தூரம் பயணிக்கும் விமானங்கள் மூலம் பாதுகாப்பான வான்வழி போக்குவரத்து சேவையை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள், வினாட ஏரோபிலிட்டி நிறுவன அதிகாரிகள், சென்னை ஐஐடியின் திஇபிளைன் நிறுவன தொழில் நுட்ப வல்லுநர்கள், சென்னை போக்குவரத்து காவல்துறை, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம், ஏர்போர்ட் அத்தாரிட்டி தமிழ்நாடு ஆளில்லா விமான கழகம் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், மருத்துவப் பணிகள் கழகம் சென்னை மாநகர சுகாதார திட்டம், தரப்பிலிருந்து முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதற்காக தற்போது சென்னையில் தற்காலிக ஹெலிகாப்டர் நிறுத்தும் மையம் அமைக்கப்பட்டு அதன் மூலம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஹெலிகாப்டரில் வேகமாக பயணம் செய்ய போதுமான வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. எதிர்காலத்தில் பறக்கும் கார்களாக ட்ரோன்கள் எல்லாம் பயன்பாட்டிற்கு வர உள்ளதால் அதற்கும் சேர்த்து தற்போது அனைத்து வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் பேசிய விபரங்களின்படி சென்னையில் அடுத்த ஓராண்டிற்குள் தனியார் நிறுவனங்கள் ஏர் டேக்ஸி ஹெலிகாப்டர் சேவையை துவங்கி விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் ஆரம்ப கட்டத்தில் சிறியதாக இது ஆரம்பிக்கப்பட்டாலும், பின்னர் படிப்படியாக இது விரிவுபடுத்தப்பட்டு சென்னையின் மிக முக்கியமான போக்குவரத்து வசதியாக மாற ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதுபோன்ற ஹெலிகாப்டர் ஏர் டேக்ஸி சேவை என்பது எதிர்காலத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலப் போக்குவரத்து என்பது வான் வழியில் அதிகமாக இருக்கும் என கூறப்படும் நிலையில், இந்த சேவையை தமிழக அரசு தற்போதை துவங்கியுள்ளது நிச்சயம் வரவேற்க வேண்டியது தான்.


Click it and Unblock the Notifications









