சிங்கப்பூர் மாதிரி மாறப்போகும் இந்தியா! இப்படி ஒரு ரயில் இந்தியாவிற்கு வரப்போகுதா?

டெல்லி விமான நிலையத்தில் பயணிகள் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனையத்திற்கு பயணம் செய்வதற்காக ஏர் டிரைன் என்ற புதிய வாகனத்தை அறிமுகப்படுத்த ஏர்போர்ட் நிர்வாக முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பயணிகள் டெல்லி விமான நிலையத்தில் உள்ள மூன்று முனையத்திற்கும் சுலபமாக பயணம் செய்ய முடியும். இந்த ஏர் டிரைன் என்றால் என்ன? இது எப்படி செயல்படுகிறது என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் விமானங்களில் எண்ணிக்கையை அதிகமாகிக் கொண்டே வருகிறது. முக்கியமாக பெருநகரங்களில் அதிக எண்ணிக்கையிலான விமானங்கள் தினமும் கையாளப்படுகின்றன பெரும்பாலான விமானங்கள் முழுவதுமாக பயணிகளுடன் பயணித்து வருகிறது.

Air Train

டெல்லி ஏர்போர்ட்டில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தை டெல்லி இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் என்ற அமைப்பு நிர்வாகம் செய்து வருகிறது. இந்நிலையில் டெல்லி விமான நிலையத்தில் மொத்தம் மூன்று விமான நிலையங்கள் தற்போது செயல்பாட்டில் இருக்கின்றன. இதில் முதல் முறையும் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டெல்லி விமான நிலையத்தில் விமானம் மாறுவதற்காக பல பயணிகள் வந்திரங்குவது வழக்கமாக இருக்கிறது. குறிப்பாக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லும் பயணிகள் முதல் விமான மூலம் டெல்லிக்கு வந்து டெல்லியில் இருந்து மற்றொரு விமானத்திற்கு மாறி செல்வார்கள். இப்படியாக செல்லும்போது அவர்கள் வரும் விமானம் ஒரு முனையத்தில் இறங்கும் அவர்கள் புறப்பட வேண்டிய விமானம் மற்றும் முனையத்தில் இருக்கும்.

Air Train

இதனால் இந்த விமான பயணிகள் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனையத்திற்கு கட்டாயம் சென்றாக வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இப்படியாக ஒரு முனையிலிருந்து மற்றொரு முனையத்திற்கு பயணம் செய்ய பல்வேறு வகையான வலிகளை பயணிகள் பின்பற்றி வருகிறார்கள். பெரும்பாலும் நடந்தே பயணம் செய்வதை விரும்புகிறார்கள். இதுபோக பேட்டரி கார் தொழில்நுட்பம் உள்ளிட்ட மற்ற சில ஆப்ஷன்களும் உள்ளன.

இந்நிலையில் விமானிகள் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனையத்திற்கு விரைவாகவும் பாதுகாப்பாகவும் செல்ல தற்போது டெல்லி விமான நிலையத்தில் ஏர் டிரைன் என்ற முறையை அறிமுகப்படுத்த தற்போது விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த ஏர்டிரைன் என்பது தானியங்கியாக இயங்கும். மெட்ரோ ரயில் போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும்.

Air Train

இந்த ரயிலில் ஏறினால் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனையத்திற்கு இது கொண்டு சென்று சேர்க்கும். இது தொடர்ந்து ஒவ்வொரு முனையுமாக பயணித்துக் கொண்டே வரும் அதனால் குறிப்பிட்ட முனையத்தில் ஏறி பயணிகள் எந்த முனையத்தில் அவர்கள் இறங்க வேண்டுமோ அந்த இணையத்தில் இறங்கிக் கொள்ள முடியும் வகையில் இது வடிவமைக்கப்படும்.

இந்நிலையில் டெல்லி விமான நிலையத்தில் இப்படியான ஏர் டிரைன் அமைப்பை உருவாக்குவதற்காக டெண்டர் தற்போது கோரப்பட்டுள்ளது. இந்த டென்டரின் படி விமான முனையம் ஒன்று இரண்டு மற்றும் மூன்று ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமைப்பை உருவாக்க வேண்டும்0 மேலும் இது ஏரோ சிட்டி மற்றும் கார்கோ சிட்டி ஆகியவற்றையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி பார்த்தால் மொத்தம் 7.7 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த ஏர் டிரைன் என்பது செயல்பட வேண்டும். இந்த ஏர் டிரைன் விமான நிலையத்தில் அறிமுகப்படுத்துவதன் மூலம் மாசு பெரிய அளவில் கட்டுப்படுத்தப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதன் காரணமாக இது விரைவாக கட்டமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. மேலும் இதை அனைத்து வயதில் உள்ளவர்களும் அனைத்து கண்டிஷனில் உள்ளவர்களும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட திட்டமிடப்பட்டு வருகிறது.

தற்போது டெல்லி விமான நிலைய அமைப்பை பொருத்தவரை முனையம் ஒன்று, முனையம் இரண்டு மற்றும் மூன்று ஆகியவற்றிலிருந்து சற்று தூரமாக இருக்கிறது. இந்த முனையத்தை கடக்கும் பயணிகள் சாலை வழியாக கடந்து சென்று வருகிறார்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி தான் விமான நிலையம் ஒன்று புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமான நிலையங்களில் இது போன்ற ரயில் அமைப்பு கொண்டு வருவது மக்களுக்கு மிகவும் சௌரியமாக இருக்கும். இது விரைவாகவும் அதே நேரம் பாதுகாப்பாகவும் பயணிகள் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனையத்திற்கு செல்வதற்கு வசதியாக இருக்கும். இந்தியாவில் இப்படியான வசதியை கொண்டு வருவது இந்தியாவின் வளர்ச்சியை காட்டுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 25, 2024, 19:08 [IST]
English summary
Air train delhi airport india first terminal connectivity
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X