சமையல் ஆயிலில் வெற்றிகரமாக பறந்த விமானம்... எவ்ளோ நேரம் பறந்துச்சு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

சமையல் எண்ணெய் மற்றும் கொழுப்பு அமில கலவையால் உருவாக்கப்பட்ட எரிபொருளில் ஏர்பஸ் ஏ380 விமானம் வெற்றிகரமாக 3 மணி நேரம் வானில் பறந்திருக்கின்றது. இந்நிகழ்வுகுறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

சமையல் ஆயிலில் வெற்றிகரமாக பறந்த விமானம்... எவ்ளோ நேரம் பறந்துச்சு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றை போலவே சமீப காலமாக விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் ஏவியேசன் டர்பைன் எரிபொருளின் விலையும் தொடர்ச்சியாக உயர்ந்துக் கொண்டிருக்கின்றது. பல மாதங்களாக இதன் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஒரு கிலோ லிட்டருக்கு ரூ. 6,743 வரை அதிகரிக்கப்பட்டது.

சமையல் ஆயிலில் வெற்றிகரமாக பறந்த விமானம்... எவ்ளோ நேரம் பறந்துச்சு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இதற்கு அடுத்தபடியாக மாபெரும் விலையேற்றமாக கடந்த மார்ச் மாதம் ஒரு கிலோ லிட்டருக்கு 18 சதவீதம் வரை மத்திய அரசு விலை உயர்த்தியது. ஆகையால், ஒரு கிலோ லிட்டரின் விலை அதிரடியாக ரூ. 1.10 லட்சத்திற்கு விற்கும் நிலை உருவாகியது. இது நடப்பாண்டில் செய்யப்படும் ஆறாவது முறை விலையேற்றம் ஆகும்.

சமையல் ஆயிலில் வெற்றிகரமாக பறந்த விமானம்... எவ்ளோ நேரம் பறந்துச்சு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்த நிலையில் மீண்டும் 7வது முறையாக ஏவியேசன் டர்பைன் எரிபொருளின் விலை ஏப்ரல் 1ம் தேதி அன்று உயர்த்தப்பட்டது. இம்முறை 2 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. ஆகையால், தற்போது ஒரு கிலோ லிட்டர் ரூ. 1.12 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது.

சமையல் ஆயிலில் வெற்றிகரமாக பறந்த விமானம்... எவ்ளோ நேரம் பறந்துச்சு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இத்தகைய தொடர் விலையுயர்வின் காரணத்தினால் விமான போக்குவரத்திற்கான டிக்கெட்டின் விலையும் கடுமையாக உயர ஆரம்பித்துள்ளது. இதன் விளைவாக விமான பயணிகள் கடுமையாகப் பாதிப்படைய தொடங்கியிருக்கின்றனர். குறிப்பாக, அவசர போக்கவரத்திற்கு விமானங்களை பயன்படுத்துவோரை இந்த விலை உயர்வு சற்றே பாதிக்கச் செய்திருக்கின்றது.

சமையல் ஆயிலில் வெற்றிகரமாக பறந்த விமானம்... எவ்ளோ நேரம் பறந்துச்சு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்த மாதிரியான சூழ்நிலையில் ஓர் விமான நிறுவனம் வழக்கமான ஏவியேசன் டர்பைன் எரிபொருளுக்கு பதிலாக சமையல் ஆயிலை பயன்படுத்தி விமானத்தை இயக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த டெஸ்ட் விமானம், சோதனையோட்டமாக 3 மணி நேரம் வானத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

சமையல் ஆயிலில் வெற்றிகரமாக பறந்த விமானம்... எவ்ளோ நேரம் பறந்துச்சு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

மூன்று மணி நேர வட்டமடிப்பிற்கு பின்னர் வெற்றிகரமாக விமானம் மீண்டும் தரையை வந்தடைந்திருக்கின்றது. உலகின் மிக பெரிய விமான நிறுவனமான ஏர்பஸ்ஸே இந்த முன்முயற்சியை மேற்கொண்டிருக்கின்றது. ஏர்பஸ் ஏ380 ரக விமானத்தையே அது சோதனையோட்டத்திற்கு பயன்படுத்தியிருக்கின்றது. இது சூப்பர் ஜம்போ விமானம் ஆகும்.

சமையல் ஆயிலில் வெற்றிகரமாக பறந்த விமானம்... எவ்ளோ நேரம் பறந்துச்சு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான முயற்சியில் உலகமே களமிறங்கியிருக்கின்றது. இந்த முயற்சியில் தங்களின் பங்களிப்பை வழங்கும் செயல்பாட்டில் விமான போக்குவரத்துத்துறையும் களமிறங்கியிருக்கின்றது. 2050ம் ஆண்டிற்கு பூஜ்ஜியம் கார்பன் உமிழ்வை எட்ட இருப்பதாக விமான போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

சமையல் ஆயிலில் வெற்றிகரமாக பறந்த விமானம்... எவ்ளோ நேரம் பறந்துச்சு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

அதேநேரத்தில் இங்கிலாந்து அரசு 2030க்குள் 10 சதவீத சஸ்டைனபில் விமான எரிபொருள் பயன்பாட்டிற்கு மாற இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே சமையல் எண்ணெய் மற்றும் கொழுப்பு அமிலத்தால் விமானம் இயக்கப்பட்டுள்ளது.

சமையல் ஆயிலில் வெற்றிகரமாக பறந்த விமானம்... எவ்ளோ நேரம் பறந்துச்சு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

சென்ற மாதம் 25ம் தேதி அன்றே இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. ஃபிரான்ஸ் நாட்டின் டூலூஸ் நகரில் உள்ள பிளாக்னக் ஏர்போர்டில் தொடங்கிய பயணம் வெற்றிகரமான மூன்று மணி நேர பயணத்திற்கு பின் அதே விமான நிலையத்தில் வந்திறங்கியது. பயணத்தின்போது பிரத்யேகமாக சமையல் எண்ணெய் மற்றும் கொழுப்பால் வடிவமைக்கப்பட்ட எரிபொருளே பயன்படுத்தப்பட்டுள்ளது.

சமையல் ஆயிலில் வெற்றிகரமாக பறந்த விமானம்... எவ்ளோ நேரம் பறந்துச்சு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்த ஆயிலை டோட்டல் எனர்ஜிஸ் எனும் நிறுவனமே தயாரித்து வழங்கியிருக்கின்றது. நறுமணப் பொருட்கள் மற்றும் கந்தகம் இல்லாத ஹைட்ரோபிராசஸ்டு எஸ்டர்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் (HEFA) ஆகியவற்றைக் கொண்டே இந்த ஆயில் உருவாக்கப்பட்டுள்ளது.

சமையல் ஆயிலில் வெற்றிகரமாக பறந்த விமானம்... எவ்ளோ நேரம் பறந்துச்சு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

விமானத்தில் பயன்படுத்தப்பட்டது ரோல்ஸ் ராய்ஸ் ட்ரெண்ட் 900 எஞ்ஜின் ஆகும். அதேநேரத்தில், மாற்று எரிபொருளினால் விமானம் இயக்கப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக அகலமான உடல் தோற்றம் கொண்ட ஏ350 மார்ச் 2021ம் இல் சஸ்டைனபிள் ஏவியேசன் எரிபொருளில் வெற்றிகரமாக இயக்கப்பட்டது.

சமையல் ஆயிலில் வெற்றிகரமாக பறந்த விமானம்... எவ்ளோ நேரம் பறந்துச்சு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இதற்கு முன்னதாக சிங்கிள் ஐசல் கொண்ட ஏ319 நியோ அக்டோபர் மாதத்தில் இதேபோல் சோதனையோட்டம் செய்யப்பட்டது. இவற்றைத் தொடர்ந்தே, தற்போது சமையல் எண்ணெய் மற்றும் கொழுப்பு அமிலத்தால் உருவாக்கப்பட்ட ஆயிலில் ஏர்பஸ் ஏ380 ரக விமானம் இயக்கப்பட்டிருக்கின்றது.

Image Courtesy: Airbus

More from DriveSpark

Article Published On: Tuesday, April 5, 2022, 16:35 [IST]
English summary
Airbus a380 airplane successfully completes three hour fly on cooking oil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+