பெங்களூருவில் நிகழவிருக்கும் அதிசயம்... பெங்களூரு விமான நிலைய வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை..

பெங்களூரு வான்வெளியில் ஓர் தரமான சம்பவம் அரங்கேற இருக்கின்றது. அது என்ன என்பது பற்றிய விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நாளை பெங்களூருவில் நிகழவிருக்கும் அதிசயம்... பெங்களூரு விமான நிலைய வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை...

உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் ஏ380 இன்று (அக்டோபர் 14) பெங்களூருவில் தரையிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெங்களூரு விமான நிலைய வரலாற்றில் உலகின் மிகப் பெரிய விமானம் தரையிறங்குவது இதுவே முதல் முறையாகும். ஆகையால், பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலேயே இந்த நிகழ்வு நாளை அரங்கேற இருக்கின்றது.

நாளை பெங்களூருவில் நிகழவிருக்கும் அதிசயம்... பெங்களூரு விமான நிலைய வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை...

இந்த நிகழ்விற்காக ஒட்டுமொத்த விமான நிலையமும் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எமிரேட்ஸ் ஏர்லைன்ஸுக்கு சொந்தமானதே இந்த ஏர்பஸ் ஏ380 ஆகும். மேலும், இந்த விமானம் தரையிறங்க உள்ள தினத்தை ஒட்டுமொத்த பெங்களூரு விமான நிலைய ஊழியர்களும் மிக முக்கியமான நாளாக கருதிக் கொண்டிருக்கின்றனர்.

நாளை பெங்களூருவில் நிகழவிருக்கும் அதிசயம்... பெங்களூரு விமான நிலைய வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை...

இது ஓர் டபுள் டக்கர் விமானம் ஆகும். அதாவது, ஈரடுக்கு விமானம். மேல் தளம், கீழ் தளம் இரு விதமான தளத்தை இது கொண்டிருக்கும். இத்தகைய ஓர் விமானமே இந்தியாவில் தரையிறங்க இருக்கின்றது. வருகின்ற அக்டோபர் 30ம் தேதி அன்றே இந்த விமானம் இந்தியா வந்தடையும் என கூறப்பட்டது. இந்த நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன்னரே அது நம் நாடு வந்தடைய இருக்கின்றது.

நாளை பெங்களூருவில் நிகழவிருக்கும் அதிசயம்... பெங்களூரு விமான நிலைய வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை...

எனவேதான் இதனை முக்கிய நாளாக கருதி ஒட்டுமொத்த பெங்களூரு விமான நிலையமும் விறுவிறுப்பாக விமானத்தை வரவேற்கும் பணியில் ஈடுட்டு வருகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக பெங்களூரு விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த பதிவின் வாயிலாக பெங்களூரு விமான நிலையம் உலகின் மிகப் பெரிய விமானத்தை வரவேற்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதை நம்மால் அறிய முடிகின்றது.

நாளை பெங்களூருவில் நிகழவிருக்கும் அதிசயம்... பெங்களூரு விமான நிலைய வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை...

தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி உலகின் பெரிய விமானம் இன்று மாலை 3.40 மணியளவில் பெங்களூருவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த விமானம் துபாயில் இருந்து இன்று காலை 10 மணியளவில் புறப்பட இருக்கின்றது. சுமார் 4-5 மணி நேர பயணத்தை மேற்கொண்டு அவ்விமானம் இந்தியா வந்தடைய இருக்கின்றது.

நாளை பெங்களூருவில் நிகழவிருக்கும் அதிசயம்... பெங்களூரு விமான நிலைய வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை...

மேலும், மீண்டும் பெங்களூருவில் இருந்து அந்த விமானம் துபாய் புறப்படும். இந்த ஏர்பஸ் ஏ380 சுமார் 72.7 மீட்டர் நீளத்தைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. இத்தகைய மிக நீளமான அளவைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே உலகின் மிக பெரிய விமானம் என்கிற பெயரை ஏர்பஸ் ஏ380 பெற்றிருக்கின்றது. இதன் எடை 575 டன்கள் ஆகும். மேலும், இதன் உயரம் 24.1 மீட்டராக இருக்கின்றது.

நாளை பெங்களூருவில் நிகழவிருக்கும் அதிசயம்... பெங்களூரு விமான நிலைய வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை...

ஏர்பஸ் நிறுவனம் தற்போது ஏ380 ரக விமானத்தின் உற்பத்தியை கைவிட்டிருந்தாலும், உலகின் சில முன்னணி விமான சேவை நிறுவனங்களிடத்தில் தற்போதும் அது பயன்பாட்டில் இருக்கின்றது. அந்தவகையில், உலகின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸ் இடத்தில் இந்த விமானம் பயன்பாட்டில் இருக்கின்றது. இதில் போயிங் 777 ஐ விட 45 சதவீதம் கூடுதல் இருக்கைகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

நாளை பெங்களூருவில் நிகழவிருக்கும் அதிசயம்... பெங்களூரு விமான நிலைய வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை...

அதிக இருக்கைகள் மட்டுமல்ல மிகப்பெரிய லெக்ரூம் மற்றும் ஒவ்வொரு கிளாஸிலும் பெரிய திரைகள் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும். எனவேதான் விமான உலகின் அதிசயமாக இப்போதும் ஏர்பஸ் ஏ380 பார்க்கப்படுகின்றது. இத்தகைய சூப்பரான விமானமே இன்று பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 13, 2022, 19:25 [IST]
English summary
Airbus a380 land in bengaluru airport tomorrow for the first time
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+