ஏர்பஸ் ஏ380 Vs போயிங் 777: உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களின் சுவாரஸ்ய ஒப்பீடு!

Written By:

ஏர்பஸ் ஏ380 மற்றும் போயிங் 777 ஆகிய இரு விமானங்களின் உலகின் மிகப்பெரிய விமானங்களின் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்திருக்கின்றன. இந்த விமானங்களிடையே இருக்கும் வேறுபாடுகளையும், சிறப்பம்சங்கள் பற்றியும் சுவாரஸ்யமான ஒப்பீட்டு தகவல்களை காணலாம்.

 ஏர்பஸ் ஏ380 Vs போயிங் 777: சுவாரஸ்ய ஒப்பீடு

ஏர்பஸ் ஏ380 விமானம் இரண்டடுக்குகள் கொண்ட 4 எஞ்சின்கள் பொருத்தப்பட்ட விமான மாடல். நேரடி போட்டியாக எடுத்துக் கொண்டால் இரண்டடுக்குகளுடன் 4 எஞ்சின்கள் பொருத்தப்பட்ட போயிங் 747 விமானத்தை ஒப்பிட வேண்டும்.

ஆனால், போயிங் 747 விமானத்தின் ஆயுள் அருகி இருக்கிறது. எனவே, நீண்ட தூர தடங்களில் அதிக அளவில் போட்டி போட்டு பயன்படுத்தப்படும், போயிங் 777 விமானமே நேரடி போட்டியாளராக இருக்கிறது.

 பரிமாணம்- ஏர்பஸ் ஏ380

பரிமாணம்- ஏர்பஸ் ஏ380

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் ஏ380 விமானம் இரண்டடுக்கு கட்டமைப்பை பெற்றிருக்கிறது. இந்த விமானம் 72.72 மீட்டர் நீளம் கொண்டது. முக்கிய பகுதியாக இருக்கும் கீழ் தளமானது 49.90 மீட்டர் நீளமும், 6.54 மீட்டர் அகலமும் கொண்டது.

மேல் அடுக்கு சற்றே குறுகலான அமைப்பை பெற்றிருக்கிறது. மேல் தளம் 44.93 மீட்டர் நீளமும், 5.80 மீட்டர் அகலமும் கொண்டது.

பரிமாணம்: போயிங் 777

பரிமாணம்: போயிங் 777

போயிங் 777- 300 மாடலானது ஒரே தளத்தை கொண்டிருக்கிறது. இந்த விமானம் 73.86 மீட்டர் நீளம் கொண்டது. இதன் கேபின் அகலம் 5.86 மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

 இருக்கை வசதி: ஏர்பஸ் ஏ380

இருக்கை வசதி: ஏர்பஸ் ஏ380

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் ஏர்பஸ் ஏ380 விமானத்தில் சாதாரண வகுப்புகளாக கொடுக்கப்பட்டால், அதிகபட்சமாக 853 பயணிகள் செல்ல முடியும். சூப்பர் ஜம்போ ரகத்தில் குறிப்பிடப்படும் இந்த விமானத்தில் மூன்று வகுப்பு இருக்கை அமைப்பு கொடுக்கப்பட்டால், 525 பேர் பயணிக்கலாம்.

இருக்கை வசதி: போயிங் 777

இருக்கை வசதி: போயிங் 777

போயிங் 777 விமானத்தில் சாதாரண வகுப்பு இருக்கைகளாக அமைத்தால் 550 பேர் வரை பயணிக்கலாம். மூன்று வகுப்பு இருக்கைகளாக அமைத்தால் 368 பேர் பயணிக்காலம்.

 வேகம்: ஏர்பஸ் ஏ380

வேகம்: ஏர்பஸ் ஏ380

ஏர்பஸ் ஏ380 விமானம் அதிகபட்சமாக மணிக்கு 945 கிமீ வேகம் வரை செல்லும். மணிக்கு 903 கிமீ வேகத்தில் பறக்கும். அதிகபட்சமாக 35,000 அடி உயரம் வரை பறக்கும் திறன் வாய்ந்தது.

வேகம்: போயிங் 777-300

வேகம்: போயிங் 777-300

போயிங் 777-300 விமானம் அதிகபட்சமாக மணிக்கு 950 கிமீ வேகத்தில் செல்லும். சாதாரணமாக மணிக்கு 905 கிமீ வேகத்தில் இயக்கப்படுகிறது. சாதாரண எடையுடன் கிளம்பும்போது, 0- 96 கிமீ வேகத்தை வெறும் 6 வினாடிகளில் தொட்டுவிடும். திறன் வாய்ந்தது. 41,100 அடி உயரம் வரை பறக்கும்.

எஞ்சின் ஆப்ஷன்கள்- ஏர்பஸ் ஏ380

எஞ்சின் ஆப்ஷன்கள்- ஏர்பஸ் ஏ380

ஏர்பஸ் ஏ380 விமானத்திற்கு 2 விதமான எஞ்சின் தேர்வுகள் உண்டு. ரோல்ஸ்ராய்ஸ் ட்ரென்ட் 900 அல்லது அலையன்ஸ் ஜிபி7200 எஞ்சின்களை விருப்பத்தின் பேரில் தேர்வு செய்து கொள்ளலாம்.

எஞ்சின் ஆப்ஷன்கள்- போயிங் 777-300

எஞ்சின் ஆப்ஷன்கள்- போயிங் 777-300

இந்த விமானத்திற்கு மூன்று எஞ்சின் சாய்ஸ்கள் வழங்கப்படுகிறது. 98,000lb த்ரஸ்ட்டை வழங்கும் பிராட்னி அண்ட் ஒயிட்னி 4098 எஞ்சின், 90,000lb த்ரஸ்ட்டை அளிக்கும் ரோல்ஸ்ராய்ஸ் ட்ரென்ட் 892 எஞ்சின் மற்றும் 90,000lb த்ரஸ்ட்டை அளிக்கும் ஜெனரல் எலக்ட்ரிக் 90-94பி ஆகிய எஞ்சின் சாய்ஸ்களில் பெற முடியும்.

பயண தூரம்- ஏர்பஸ் ஏ380

பயண தூரம்- ஏர்பஸ் ஏ380

ஏர்பஸ் ஏ380 விமானம் இடைநில்லாமல் 15,700 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் வாய்ந்தது.

பயண தூரம்: போயிங் 777-300

பயண தூரம்: போயிங் 777-300

போயிங் 777-300 விமானம் இடைநில்லாமல் 15,844 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

வரவேற்பு - ஏர்பஸ் ஏ380

வரவேற்பு - ஏர்பஸ் ஏ380

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ஏர்பஸ் ஏ380 சூப்பர் ஜம்போ பயணிகள் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 319 விமானங்களுக்கு ஆர்டர் பெறப்பட்டுள்ளது. 216 விமானங்கள் டெலிவிரி கொடுக்கப்பட்டுவிட்டன. இதில், அதிகபட்ச விமானங்களை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பெற்றிருக்கிறது. மறுபுறத்தில் போயிங் 777 விமானத்திற்கான ஆர்டர் அதிர வைக்கிறது.

 போயிங் 777 விற்பனை

போயிங் 777 விற்பனை

1995ம் ஆண்டு ஜூன் 7ந் தேதி போயிங் 777 விமானம் அறிமுகம் செய்யப்பட்டது. 1998ம் ஆண்டு கத்தே பசிஃபிக் நிறுவனத்திற்கு முதல் விமானம் டெலிவிரி கொடுக்கப்பட்டது. கடந்த அக்டோபர் 31ந் தேதி வரையிலான நிலவரப்படி, 1957 விமானங்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. 1,520 விமானங்கள் டெலிவிரி கொடுக்கப்பட்டு விட்டன.

 ஏர்பஸ் ஏ380 Vs போயிங் 777: சுவாரஸ்ய ஒப்பீடு

விமான பொறியியலின் உன்னத படைப்பாக ஏர்பஸ் ஏ380 குறிப்பிடப்பட்டாலும், அதற்கான வரவேற்பு வெகுவாக குறைந்து வருகிறது. வர்த்தக ரீதியில் கணக்கீடுகளின் போயிங் 777 விமானம் மிகச் சிறப்பானதாக கருதப்படுகிறது. சிறப்பான எரிபொருள் சிக்கனம், குறைவான பராமரிப்பு செலவுகளை கொண்டதாக இருப்பதே காரணம். இதனால், கட்டணத்தை மிக சரியாக நிர்ணயிக்க முடிகிறது.

 ஏர்பஸ் ஏ380 Vs போயிங் 777: சுவாரஸ்ய ஒப்பீடு

அதேநேரத்தில், அதிர்வுகள் குறைவான, விசாலமான இடவசதியுடன் நிறைவான பயண அனுபவத்தை வழங்குவது ஏர்பஸ் ஏ380 என்றால் மிகையில்லை. மேலும், சிறப்பான பொழுதுபோக்கு வசதிகளை ஏர்பஸ் ஏ380 விமானம் வழங்குகிறது.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Interesting Comparison Of Airbus A380 Vs Boeing 777.
Story first published: Monday, December 4, 2017, 16:43 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark