விமானத்தில் பயணிகள் கேபினை தனியாக இணைக்கும் வசதி: ஏர்பஸுக்கு காப்புரிமை!
விமானத்தில் பயணிகள் ஏறி, இறங்குவதற்கு அதிக நேரம் செலவாகிறது. இதனை குறைக்கும் விதத்தில், பயணிகள் கேபினை விமானத்துடன் தனியாக இணைக்கும் முன்மாதிரி தொழில்நுட்பம் ஒன்றை ஏர்பஸ் உருவாக்கியிருக்கிறது.
இதற்கு, அமெரிக்க காப்புரிமை ஆணையம் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. எதிர்காலத்தில் இந்த முறையை அமல்படுத்துவதற்கு ஏர்பஸ் தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் எதிர்பார்க்கப்படுகிறது.

நேர விரயம்
விமானத்தில் பயணிகள் இறங்குவதற்கும், ஏறுவதற்கும் அதிக நேரம் செலவாகிறது. குறைந்தது ஒரு மணிநேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை செலவழிக்க வேண்டியிருக்கிறது. இதனை தவிர்க்கும் விதத்தில், புதிய கான்செப்ட் ஒன்றை ஏர்பஸ் நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.

ஏர்பஸ் ஐடியா
பயணிகள் கேபினை தனியாக உருவாக்கி, அதனை விமானத்துடன் இணைப்பதுதான் கான்செப்ட். ஒரு சில நிமிடங்களில் கேபினை கழற்றவும், விமானத்துடன் இணைக்கவும் முடியும் என்கிறது ஏர்பஸ்.

தயார் நிலை
துப்புறவு பணிகளை முன்கூட்டியே செய்து, ஏற வேண்டிய பயணிகளை இந்த கேபினில் உள்ள இருக்கைகளில் முன்கூட்டியே அமர வைத்து தயார் நிலையில் வைத்து விடலாம். விமானம் வந்ததும் அதிலுள்ள பயணிகள் அமர்ந்திருக்கும் கேபினை உடனடியாக கழற்றிவிட்டு, அங்கு புறப்பட தயாராக இருக்கும் கேபினை விமானத்துடன் இணைத்துவிட வேண்டியதுதான்.

இணைப்பு
விமானத்தின் தரை தளம் போன்ற அடிப்பாகத்தில், பயணிகள் கேபினை இணைத்துவிடலாம். இதற்காக, விமான நிலையங்களில் கேபினை கையாள்வதற்காக விசேஷ கட்டமைப்புகளை செய்ய வேண்டியதிருக்கும்.

வசதி
ஒரே நாளில் ஏராளமான விமானங்களை கையாளும் மிகப்பெரிய விமான நிலையங்களில் இந்த முறை மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்.

பாதுகாப்பு
கேபினை தனியாக இணைப்பதன் மூலம் ஒவ்வொரு முறையும் எளிதாக பாதுகாப்பு வசதிகளை ஆய்வு செய்ய முடியும்.

எதிர்காலத்தில்...
எதிர்காலத்தில் இந்த புதிய முறையை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை ஏர்பஸ் தீவிரமாக மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதக அம்சங்கள்
இந்த நுட்பத்திற்கு காப்புரிமை பெற்றாலும், எரிபொருள் நிரப்புவது, லக்கேஜ் ஏற்றுவது, விமானத்தில் தொழில்நுட்ப ஆய்வு போன்றவற்றிற்காக எப்படியும் நேரம் செலவழிக்க வேண்டியிருக்கும் என்று வேறு சில நடைமுறை சிக்கல்களை முன் வைக்கின்றனர் விமானத் துறை நிபுணர்கள். ஏரோடைனமிக்ஸிலும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பது அவர்களது கருத்தாக உள்ளது. இவற்றையெல்லாம் எப்படி வென்று தனது தொழில்நுட்பத்தை ஏர்பஸ் எவ்வாறு முன்னோக்கி எடுத்துச் செல்லப்போகிறது என்பதை காண ஆவலாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications