நீங்க விமானத்தில் ஏறும் போதும் இறங்கும்போதும் காக்பிட் கதவு திறந்தே இருக்கும் ஏன் தெரியுமா?
விமானத்தில் பயணிகள் ஏறும் போதும் சரி இறங்கும்போதும் சரி விமானி அமர்ந்திருக்கும் காக்பிட் அறையின் கதவு திறந்தே இருக்கும். விமான பயண நேரத்தில் மட்டும்தான் அந்த காக்பிட் அறை கதவு அடைக்கப்பட்டு இருக்கும். இப்படியாக விமானம் தரையில் இருக்கும் போது இந்த காக்பிட் அறை திறந்து இருக்க வேண்டிய கட்டாயம் என்ன?இதனால் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை வராதா? ஏன் இந்த ரிஸ்கை எடுக்கிறார்கள்? என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
விமான பயணம் என்பது எந்த அளவிற்கு ஆச்சரியங்கள் நிறைந்ததோ அதே அளவிற்கு அபாயங்களும் நிறைந்ததாக இருக்கிறது. விமானங்கள் தொழில்நுட்ப ரீதியான அபாயங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் தீவிரவாத செயல்கள் உள்ளிட்ட அபாயங்கள் மற்றும் ஒரு பக்கம் இருக்கிறது. இதனால் விமானங்களில் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான ஒரு விஷயமாக இருக்கிறது. இதனால் தான் பயணிகள் முழுவதுமாக சோதனை செய்யப்பட்டு விமானத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இப்படியாக அனைத்து சோதனைகளையும் முடித்து விமானத்திற்கு ஒரு பயணி ஏறும் போது விமானத்தின் காக்பிட் பகுதி வழியாக இருக்கும் வாசல் வழியாக ஏறினால் அவர் எளிதாக காக்பிட் உள்ளே என்ன இருக்கிறது என எட்டிப் பார்க்க முடியும். கதவுகள் முழுமையாக திறக்கப்பட்டே இருக்கும். அதே பயணி மீண்டும் விமானத்திலிருந்து கீழே இறங்கும் போதும் இப்படியாக காண முடியும்.
ஆனால் விமானம் விண்ணில் பறந்து கொண்டிருக்கும்போது காக்பிட் பகுதி அருகே பயணிகள் சென்றால் காப்பீடு பகுதி கதவுகள் அடைக்கப்பட்டு இருக்கும். இப்படியாக விமானம் தரையில் இருக்கும் போது காக்பிட் பகுதி ஏன் திறக்கப்பட்டு இருக்கிறது? இதனால் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்து விடாதா தீவிரவாதிகள் யாராவது காப்பீடு உள்ளே புகுந்து விட வாய்ப்பு ஏற்பட்டு விடாதா என பல நினைக்கக்கூடும். ஆனால் இதற்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய கணிப்பு இருக்கிறது.

உலகம் முழுவதும் உள்ள விமான நிறுவனங்கள் எல்லாம் விமானம் தரையில் இருக்கும் போது இப்படியாக காக்பிட் கதவுகளை திறந்து வைத்திருக்க வேண்டும் என்ற விதியை வைத்திருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் விமானம் என்பது ஒரு சாதாரண விஷயம் அல்ல நாம் கார் பைக்குகளை எப்படி டிரைவரே அனைத்து விஷயங்களையும் செக் செய்துவிட்டு வாகனத்தை எடுக்கிறோமோ அப்படி விமானத்தை எடுக்க முடியாது.
ஒரு விமானம் கிளம்பும் முன்பு பல்வேறு விதமான சோதனைகள் செய்யப்பட வேண்டும். முக்கியமாக அதில் எரிபொருள் நிரப்பப்பட்டது, விமானத்தின் டாக்ஸி லைன் கிளியராக இருப்பது மற்ற ஸ்டாப்களின் நிலைமை என்ன விமானம் கிளம்ப தயாராக வேண்டுமென்றால் பலர் அதற்காக உழைக்க வேண்டும். இப்படியான நபர்கள் எல்லாம் நேரடியாக விமானத்தின் காப்பீடு உள்ளே இருக்கும். விமானியிடம் தான் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இதனால் பயணிகள் விமானத்தில் எழுதிக் கொண்டிருக்கும் நேரம் விமானி காக்பிட் உள்ளே பிஸியாக வேலை செய்து கொண்டிருப்பார். அப்போது அவர் விமானத்தில் போர்டிங் நடப்பதையும் கண்காணிக்க வேண்டும். ஒரே நேரத்தில் மற்ற ஊழியர்களிடம் பேச வேண்டும். அதே நேரத்தில் விமானத்தின் போர்டிங் சரியாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றால் அவர் காக்பிட் கதவுகளை திறந்து வைத்திருந்தால் மட்டுமே முடியும்.
இப்படியாக விமானத்தில் காக்பிட் கதவு திறந்து இருப்பதால் உள்ளே என்ன இருக்கிறது என பயணிகள் விமானத்தில் ஏறும் போதும் சரி இறங்கும்போதும் சரி பார்க்க முடியும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை விமானத்தின் காப்பீடு உள்ளே பயணிகள் விரும்பினால் சென்று பார்க்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்த அனுமதி மறுக்கப்படுகிறது. விமானியிடம் பேச வேண்டும் என்றாலும் காக்பிட் வாசலில் நின்று தான் பேச வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இப்படியாக விமானங்களில் காக்பிட் கதவுகளை திறந்து வைத்திருக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. இது பாதுகாப்பு குறைபாடு அம்சம் கிடையாது இது பாதுகாப்பான அம்சம் விமானிகள் போர்டிங் நடப்பதை நேரடியாக கண்காணிக்க முடியும். அதே நேரம் மற்ற பணிகளுக்காகவும் இது உதவியாக இருக்கும் என்பதால் எதை திறந்தே வைத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications









