பிஸியான நெடுஞ்சாலையின் மத்தியில் வேக வேகமாக தரையிறங்கிய சிறிய ரக விமானம்... வீடியோ..!

என்சிசி-க்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று எப்போதும் பிசியாகவே காணப்படும் முக்கிய நெடுஞ்சாலையில் தரங்கியிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த கூடுதலை இந்த பதிவில் காணலாம்.

பிஸியான நெடுஞ்சாலையின் மத்தியில் அவசர அவசரமாக தரையிறங்கிய சிறிய ரக விமானம்... வீடியோ..!

இந்திய சாலைகளில் மட்டுமே ஒரு சில விநோதமான செயல்களை நம்மால் காண முடியும். குறிப்பாக ஜூகாத் வாகனங்கள் எனப்படும் கலப்பின வாகனங்கள் மற்றும் ரயில்கள் சாலையில் செல்வதை இங்கு மட்டுமே காண முடிகின்றது.

இதேபோன்று, சில நேரங்களில் அரிதிலும் அரிதாக வானத்தில் பறக்க வேண்டிய விமானங்கள் ஒரு சில நேரங்களில் சாலையில் செல்வதையும் நம்மால் காண முடியும்.

பிஸியான நெடுஞ்சாலையின் மத்தியில் அவசர அவசரமாக தரையிறங்கிய சிறிய ரக விமானம்... வீடியோ..!

இதுபோன்ற அரிய சம்பவம் ஒன்று தற்போது இந்தியாவில் நிகழ்ந்துள்ளது. ஓர் சிறிய ரக விமானம், அதில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக முக்கிய நெடுஞ்சாலை ஒன்றில் தரையிறங்கியது.

இந்த சிறிய ரக விமானம் தேசிய மாணவர் படைக்கு சொந்தமானது என்று கூறப்படுகின்றது. அது தரையிறங்கியபோது எந்தவொரு வாகனமும் குறுக்கே வராத காரணத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

பிஸியான நெடுஞ்சாலையின் மத்தியில் அவசர அவசரமாக தரையிறங்கிய சிறிய ரக விமானம்... வீடியோ..!

இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தின் காஸியாபாத் பகுதியில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒன்றான கிழக்கு பெரிஃபெரல் அதிவேக நெடுஞ்சாலையில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களே தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகின்றது.

எப்போதும், பிஸியாகவே காணப்படும் அந்த சாலை ஹரியானா மற்றும் உபி-யை இணைக்கும் முக்கிய சாலைகளில் ஒன்றாகும்.

பிஸியான நெடுஞ்சாலையின் மத்தியில் அவசர அவசரமாக தரையிறங்கிய சிறிய ரக விமானம்... வீடியோ..!

135 கிமீ நீளமுடைய அந்த நெடுஞ்சாலையின் 6-வது வழி தடத்தில்தான் விமானம் தரங்கியுள்ளது. இது இருவர் மட்டுமே பயணிக்கின்ற வகையிலான விமானம் ஆகும். இது ஒரு எஞ்ஜினை மட்டுமே கொண்டு இயங்கும் செனய்ர் சிஎச் 701 (Zenair CH 701) ரக மாடல் ஆகும்.

பிஸியான நெடுஞ்சாலையின் மத்தியில் அவசர அவசரமாக தரையிறங்கிய சிறிய ரக விமானம்... வீடியோ..!

இந்த சிறிய ரக விமானம் தரையிறங்கியபோது மிகவும் பதற்றத்தை ஏற்படுத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்த கிராமவாசிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, "நெடுஞ்சாலையின் மையப் பகுதியில் ஆபத்தான முறையில் பறந்துக் கொண்டிருந்த அது திடீரென சாலையின் நடுவே இறங்கியதாகவும்" அவர்கள் கூறினார்கள்.

பிஸியான நெடுஞ்சாலையின் மத்தியில் அவசர அவசரமாக தரையிறங்கிய சிறிய ரக விமானம்... வீடியோ..!

இது அவர்களுக்கு பயங்கரமான அனுபவத்தை ஏற்படுத்தியதாக பதற்றத்துடன் கூறியதையும் நம்மால் கேட்க முடிந்தது. அந்தளவிற்கு ஆபத்தை விளைவிக்கின்ற வகையில் விமானம் தரையிறங்கியுள்ளது.

அவசர அவசரமாக தரையிறங்கிய விமானத்தின்மீது வெறெந்த வாகனம் மோதிவிடக் கூடாது என்பதற்காக விமானிகள் மிக வேகமாக சாலையோரத்திற்கு விமானத்தைக் கொண்டுவந்தனர். அப்போது விமானம் கட்டுப்பாட்டில் இல்லாத காரணத்தால் சாலையோர தடுப்பில் மீது மோதி விமானத்தின் வல பக்க இறக்கை கடுமையாக சேதமடைந்தது.

பிஸியான நெடுஞ்சாலையின் மத்தியில் அவசர அவசரமாக தரையிறங்கிய சிறிய ரக விமானம்... வீடியோ..!

விமானத்தில் முறையாக பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த இரு பைலட்டுகள் பயணித்ததாகக் கூறப்படுகின்றது. தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணத்தால் அவர்களின் கடும் முயற்சிகளையும் தாண்டி விமானம் விபத்தைச் சந்தித்துள்ளது. இது, அவர்கள் பறக்க ஆரம்பித்த 45 நிமிடங்களுக்காகவே அரங்கேறிவிட்டது.

இது தரையிறங்கியது மிக முக்கியமான வழித்தடம் என்பதால் பல மணி நேரங்களுக்கு அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரங்களுக்கும் அதிகமாக நீடித்த நெரிசலால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து, விமானத்தை அகற்றிய பின்னரே போக்குவரத்து சீரானது.

பிஸியான நெடுஞ்சாலையின் மத்தியில் அவசர அவசரமாக தரையிறங்கிய சிறிய ரக விமானம்... வீடியோ..!

இந்த அவசர தரையிறக்க சம்பவம் பற்றி இந்திய விமானப் படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது, "இரு இருக்கைகளைக் கொண்ட இந்த விமானம் என்சிசி படையினரின் பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. திடீரென ஏற்பட்ட அதிக காற்றழுத்தத்தின் காரணமாக இந்த விமானம் பயிற்சியிலிருந்து அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, விமானிகளின் சாதூர்யத்தால் நேரவிருந்த மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது" என்றார்.

பிஸியான நெடுஞ்சாலையின் மத்தியில் அவசர அவசரமாக தரையிறங்கிய சிறிய ரக விமானம்... வீடியோ..!

இதுபோன்று, இந்தியாவின் நெடுஞ்சாலை/அதிவேக நெடுஞ்சாலைகளில் விமானங்கள் தரையிறங்குவது முதல் முறை அல்ல. இதற்கு முன்பாகவும் இதுபோல பல சம்பவங்கள் அவசரகாலத்தை முன்னிட்டு அரங்கேறியுள்ளன. அந்தவகையில், இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் ஒன்று ஆக்ரா-லக்னோ அதிவேக நெடுஞ்சாலையில் தரையிறங்கியது குறிப்பிடத்தகுந்தது.

மேம்பாலத்தின்கீழ் சிக்கிய மிகப்பெரிய விமானம்.. எப்படி வெளியேற்றினார்கள் தெரியுமா..? வீடியோ..!

இதேபோன்று சாலைக்கு வந்த ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான மிகப்பெரிய விமானம் ஒன்று மேம்பாலத்தின்கீழ் சிக்கியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதுகுறித்த கூடுதல் தகவலை கீழே காணலாம்.

மேம்பாலத்தின்கீழ் சிக்கிய மிகப்பெரிய விமானம்.. எப்படி வெளியேற்றினார்கள் தெரியுமா..? வீடியோ..!

உலகின் ஆபத்து நிறைந்த சாலைகள் அதிகம் காணப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்றாக இருக்கின்றது. மேலும், நாட்டில் அரங்கேறும் பெரும்பாலான விபத்துகளுக்கு அத்தகைய தரமற்ற சாலைகளே முக்கிய காரணமாக இருக்கின்றன.

இதன்காரணமாகவே, மத்திய அரசு அண்மைக் காலங்களாக புதிய சாலைகளைக் கட்டமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றது.

மேம்பாலத்தின்கீழ் சிக்கிய மிகப்பெரிய விமானம்.. எப்படி வெளியேற்றினார்கள் தெரியுமா..? வீடியோ..!

அந்தவகையில், கடந்த சில ஆண்டுகளில் இந்தியா முழுவதும் சாலை உட்கட்டமைப்பு நிறைய முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. அவ்வாறு, நாட்டின் பல முக்கிய சாலைகளில் மேம்பலாம் மற்றும் உயர்ந்த சாலைகள் என பல பரிணாம வளர்ச்சிகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இருப்பினும், ஒரு சில பகுதிகளில் மிகப் பெரிய அளவிலான வாகனங்கள் நுழைய மிகவும் சிரமத்தைச் சந்திக்கின்றன.

மேம்பாலத்தின்கீழ் சிக்கிய மிகப்பெரிய விமானம்.. எப்படி வெளியேற்றினார்கள் தெரியுமா..? வீடியோ..!

குறிப்பாக, மிகப்பெரிய எந்திரங்கள், கன்டெய்னர்கள், இரயில் எஞ்ஜின்கள், விமானம் மற்றும் ராக்கெட்டுகளின் பாகங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு வரும் வாகனங்கள் அதீத சிரமத்திற்கு உள்ளாகின்றன. இவைகள், மிக உயரமாகவும், அளவில் மிகப் பெரியதாக இருப்பதன் காரணத்தால் வளைவுகளில் திரும்ப முடியாமலும், மேம்பாலங்களின் கீழ் நுழைய முடியாமலும் சிக்கித் தவிக்கின்றன.

மேம்பாலத்தின்கீழ் சிக்கிய மிகப்பெரிய விமானம்.. எப்படி வெளியேற்றினார்கள் தெரியுமா..? வீடியோ..!

இத்தகைய ஓர் சம்பவம்தான் தற்போது மேற்குவங்க மாநிலத்தின் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒன்றான துர்காபூர் அதிவேக நெடுஞ்சாலையில் அரங்கேறியுள்ளது.

மேம்பாலத்தின்கீழ் சிக்கிய மிகப்பெரிய விமானம்.. எப்படி வெளியேற்றினார்கள் தெரியுமா..? வீடியோ..!

பொதுவாக, உயரம் அதிகம் நிறைந்த கன்டெய்னர்கள் மற்றும் சரக்குகளை ஏற்றிவரும் வாகனங்கள் உயரம் குறைந்த மேம்பலாத்தின் ஊடாக நுழைந்து வரும்போது பெரும் சிரமத்திற்குள்ளாவதுடன், சில நேரங்களில் அதில் கொண்டு வரப்படும் சரக்கும் சேதமடைந்து விடுகின்றது. இதுமட்டுமின்றி, மேம்பாலத்தையும் லேசாக பதம் பார்த்துவிடுகின்றது அந்த வாகனம்.

மேம்பாலத்தின்கீழ் சிக்கிய மிகப்பெரிய விமானம்.. எப்படி வெளியேற்றினார்கள் தெரியுமா..? வீடியோ..!

ஆனால், இத்தகைய சூழலைத் தவிர்ப்பதற்காக இங்கு வேறுவிதமான திறன் கையாளப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோவை, வி6 நியூஸ் வெளியிட்டுள்ளது. அதனை நீங்கள் கடைசியாக காணலாம்.

மேம்பாலத்தின்கீழ் சிக்கிய மிகப்பெரிய விமானம்.. எப்படி வெளியேற்றினார்கள் தெரியுமா..? வீடியோ..!

முன்னதாக, வீடியோ குறித்த தகவலை இங்கே பார்த்துவிடலாம். மேம்பாலத்தின் கீழ் சிக்கியிருக்கும் விமானமானது ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட இந்த விமானம் மறு சுழற்சி செய்வதற்காக வேறொரு இடத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டது.

மேம்பாலத்தின்கீழ் சிக்கிய மிகப்பெரிய விமானம்.. எப்படி வெளியேற்றினார்கள் தெரியுமா..? வீடியோ..!

இந்தநிலையில்தான், இத்தகைய சூழலில் அந்த விமானம் சிக்கியது. இதனால், செய்வதறியாத தவித்த அந்த டிரக்கின் ஓட்டுநர், அதற்கான அதிகாரிகள் வரும் வரை வாகனத்தை நகர்த்த முடியாமல் காத்திருந்தார். இதனால், அந்த சாலையில் பல நேரங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேம்பாலத்தின்கீழ் சிக்கிய மிகப்பெரிய விமானம்.. எப்படி வெளியேற்றினார்கள் தெரியுமா..? வீடியோ..!

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மேம்பாலத்துடன் உராய்ந்தாவறு இருந்த விமானத்தை வெளியேற்றுவதற்காக சரக்கு லாரியின் அனைத்து வீல்களிலும் இருந்த டயரை நீக்க முடிவு செய்தனர்.

மேம்பாலத்தின்கீழ் சிக்கிய மிகப்பெரிய விமானம்.. எப்படி வெளியேற்றினார்கள் தெரியுமா..? வீடியோ..!

அதன்படியே, லாரியின் அனைத்து வீல்களில் இருந்தும் டயர்களில் காற்று வெளியேற்றப்பட்டு, டயர்கள் நீக்கப்பட்டன. தொடர்ந்து, மற்றுமொரு லாரியைக் கொண்டு விமானம் ஏற்றப்பட்டிருந்த டிரக் மிதமான வேகத்தில் நகர்த்தப்பட்டு வெளியேற்றப்பட்டது.

பொதுவாக, இதுபோன்று பெரிய ரக வாகனங்கள் மேம்பாலத்தில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக, பாலங்களின் முன்பாக இரும்பு கம்பிகள் நிறுவப்பட்டிருக்கும். இது, மேம்பாலத்தை சேதத்தில் காக்க உதவும். அதுமட்டுமின்றி, மேம்பாலத்திற்கு முன்னதாக இருக்கும் இரும்பு கம்பிகளைப் பார்க்கும் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனம் அதில் நுழையுமா என்பதை பரிசோதித்துக் கொள்ளவும் உதவும்.

மேம்பாலத்தின்கீழ் சிக்கிய மிகப்பெரிய விமானம்.. எப்படி வெளியேற்றினார்கள் தெரியுமா..? வீடியோ..!

இதனை பெரும்பாலான நெடுஞ்சாலை மேம்பலாத்தின் முன் நம்மால் காண முடிவதில்லை. ஆகையால், வாகன ஓட்டிகள் அதன் உயரத்தை கணக்கிடுவதில் சிரமம் கொள்கின்றனர். மேலும், சிக்கலிலும் சிக்கிவிடுகின்றனர்.

மேம்பாலத்தின்கீழ் சிக்கிய மிகப்பெரிய விமானம்.. எப்படி வெளியேற்றினார்கள் தெரியுமா..? வீடியோ..!

இதுபோன்ற காரணத்தினாலயே விமானத்தை ஏற்றி வந்த டிரக்கின் டிரைவர் இத்தகைய சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். இந்த சம்பவத்தில் லாரிக்கும், அதில் ஏற்றப்பட்டிருந்த விமானம் மற்றும் மேம்பாலத்திற்கு எத்தகைய சேதம் ஏற்பட்டது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

More from DriveSpark

Article Published On: Friday, January 24, 2020, 14:40 [IST]
English summary
Aircraft Emergency Landing Eastern Peripheral Expressway. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+